வியாழன், 31 டிசம்பர், 2015

பாமக: அடுத்த சில மாதங்களில் அன்புமணி முதல்வராகப்போவது உறுதி.....

பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் ‘‘ஆட்சி மாற்றத்திற்கான 2016-ஐ வரவேற்போம், 2015-க்கு விடை கொடுப்போம் நிகழ்ச்சி’’ திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் இன்று நடைபெற்றது.  அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்ச்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் :புத்தாண்டில் புதியதோர் தமிழகம்  செய்வோம்....பாட்டாளி மக்கள் கட்சியை ஆட்சியில் அமர்த்துவோம்!& தமிழ்நாட்டில் இயற்கை பேரிடர், தமிழக ஆட்சியாளர்களால் ஏற்படுத்தப்பட்ட செயற்கை பேரழிவு உள்ளிட்ட ஏராளமான பாதிப்புகளை ஏற்படுத்திய 2015 ஆம் ஆண்டு, ஒரே ஒரு நம்பிக்கை ஒளியை மட்டும் விதைத்து விட்டு விடை பெறுகிறது. 50 ஆண்டு கால திராவிடக் கட்சிகளின் ஆட்சியை அகற்றி, உண்மையான மக்களாட்சியை ஏற்படுத்த மருத்துவர் அன்புமணி இராமதாஸ் இருக்கிறார் என்பது தான் 2015 ஆம் ஆண்டு தமிழ்நாட்டு மக்களுக்கு விட்டுச் சென்றிருக்கும் ஒற்றை நம்பிக்கை.‘தமிழ்நாட்டில் விஷக் கிருமிகள் பரவி விட்டன’’ என்று முன்னாள் முதலமைச்சர் பக்தவச்சலம் கூறியதைப் போல தமிழகத்திற்கான தீமை 1967 ஆம் ஆண்டிலேயே தொடங்கி விட்டது.  புதிய திரைப்படங்களின் பிரிவியு ஷோவுக்கு போனா  படம் சுப்பர் டூப்பர் வெற்றின்னுதானே சொல்லணும்? ஒவ்வொரு திரைப் பிரபலங்களும் ரொம்ப கஷ்டப்பட்டு நடிக்கும் நடிப்புதாய்ன்... ஆஸ்காரே கொடுக்கலாம்
அத்தீமை 2011 ஆம் ஆண்டில் அ.தி.மு.க. ஆட்சி என்ற வடிவத்தில் புதுப்பிக்கப்பட்டது. ஆனாலும், கடந்த ஆண்டுகளை விட மிக அதிக பாதிப்புகளை ஏற்படுத்திய ஆண்டு 2015 தான். 2015 ஆம் ஆண்டு செயல்படாத அரசு நிர்வாகத்துடன் தான் தொடங்கியது. வருவாய்க்கு மீறி ரூ.66.65 கோடி சொத்துக் குவித்த வழக்கில் 4 ஆண்டு சிறையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்ட ஜெயலலிதா பதவி நீக்கப்பட்டதால், அவருக்கு மாற்றாக ஓ. பன்னீர் செல்வம் தலைமையில் பொம்மை அரசு பதவியேற்றது. 

2014 செப்டம்பர் முதல் 8 மாதங்களுக்கு மண்சோறு சாப்பிடுவது, தீ மிதிப்பது ஆகியவற்றைத் தவிர அமைச்சர்கள் வேறு எதுவுமே செய்யாததால் தமிழகத்தின் வளர்ச்சி  அதலபாதாளத்திற்கு இறங்கியது. பணம் வாரி இறைக்கப்பட்டதால் ஜெயலலிதாவையும், கூட்டாளிகளையும் ‘தப்புக்கணக்கு’ போட்டு  நீதிபதி குமாரசாமி விடுதலை செய்தார். அதன்பின் ஜெயலலிதா மீண்டும் பதவியேற்ற பிறகு நிலைமை மோசமடைந்ததே தவிர மேம்படவில்லை. முதலமைச்சர் என்பவர் இரவு பகல் பாராமல் மக்களுக்காக உழைக்க வேண்டும். ஓமந்தூரார், காமராஜர் போன்றவர்கள் அப்படித் தான் உழைத்தார்கள். ஆனால், வாரத்திற்கு ஒருமுறை தலைமைச் செயலகம் வருவது, அரை மணி நேரம் அலுவலகத்தில் இருந்து விட்டு வீடு திரும்புவது என ‘வாரத்திற்கு அரைமணி நேர முதலமைச்சராக’ ஜெயலலிதா மாறினார். அதனால் எல்லா துறைகளிலும் தமிழகம் கடைசி இடத்திற்கு  தள்ளப்பட்டது.

லஞ்சம் வாங்கித் தர மறுத்ததற்காக நேர்மையான வேளாண்துறை பொறியாளர் முத்துக்குமாரசாமியை மிரட்டி தற்கொலை செய்து கொள்ள அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தூண்டியது, இந்த வழக்கில் முதலில் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட கிருஷ்ணமூர்த்தி, பின்னர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது, ஆந்திராவில் கூலி வேலை செய்வதற்காக சென்ற அப்பாவி தமிழ் தொழிலாளர்கள் 20 பேர் ஆந்திர காவல்துறையினரால் கடத்திச் செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டது, அவர்களுக்கு நீதி பெற்றுத்தர பா.ம.க. போராடி வரும் நிலையில் அதற்காக தமிழக அரசு துரும்பைக் கூட கிள்ளி போடாதது, உலக முதலீட்டாளர்கள் மாநாடு என்ற பெயரில் ஆடம்பர விழாவை நடத்தி பல நூறு கோடி ரூபாயை வீண் செலவு செய்தது, வராத முதலீட்டை வந்ததாகக் காட்டி மக்களை ஏமாற்றியது என 2015 ஆம் ஆண்டில் தமிழக அரசின் கறுப்பு பக்கங்களை பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம்.

இதற்கெல்லாம் மேலாக அண்மையில் பெய்த மழையின் போது செம்பரம்பாக்கம் ஏரி விவகாரத்தில் ஜெயலலிதா கடைபிடித்த பொறுப்பற்ற அணுகுமுறையால் சென்னையின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது.  சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் கடந்த 50 ஆண்டுகளில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வினரால் திட்டமிட்டு ஆக்கிரமிக்கப்பட்டதும் வெள்ளத்திற்கு இன்னொரு காரணம் ஆகும். மொத்தத்தில் வெள்ளத்தால் ஏற்பட்ட ரூ.1 லட்சம் கோடி இழப்பிற்கும், சுமார் 1000 பேரின் உயிரிழப்புக்கும் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் மட்டுமே பொறுப்பேற்க வேண்டும்.

2015 ஆம் ஆண்டு இவ்வளவு துயரங்களை எதிர்கொண்ட போதிலும் ஒரே ஒரு நம்பிக்கையாக அமைந்தது 15.02.2015 அன்று சேலத்தில் நடந்த பா.ம.க பொதுக்குழு மற்றும் மாநாட்டில் முதலமைச்சர் வேட்பாளராக மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டது தான். அன்று தொடங்கி இன்று வரை மக்கள் மத்தியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கும், முதலமைச்சர் வேட்பாளர் மருத்துவர் அன்புமணி இராமதாசுக்கும் செல்வாக்கு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தது, மதுவை ஒழிப்பதற்காக மாவட்டம் தோறும் மது ஒழிப்பு போராட்டங்களை நடத்தி வருவது, சென்னை மற்றும் கடலூர் மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்ட போது பரிசல்களுடன் சென்று மக்களை மீட்டது, உணவு, போர்வை போன்ற உதவிகளை வழங்கியது, மருத்துவ முகாம்களை நடத்தியது என அவரது பணிகள் மக்களிடம் வரவேற்பை பெற்றது மட்டுமின்றி, அவரை முதல்வராக்கவும் மக்கள் தயாராகிவிட்டனர். 

மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் ஏற்பாட்டில் தயாரிக்கப்பட்டு, வெளியிடப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் வரைவுத் தேர்தல் அறிக்கை அனைத்து தரப்பினரிடமும் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. தமிழகத்தின் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கான அருமருந்து பா.ம.க. தேர்தல் அறிக்கை; அதை செயல்படுத்துவதற்கான மருத்துவர் நமது அன்புமணி இராமதாஸ் என்பதே தமிழக மக்களின் இன்றைய எண்ணமாக இருக்கிறது. தமிழக மக்களின் பிரச்சினைகளுக்காக மக்களைத் திரட்டி போராட்டம் நடத்துவது, பிரதமரையும், மத்திய அமைச்சர்களையும் நேரடியாகச் சந்தித்து முறையிடுவது போன்ற மருத்துவர் அன்புமணி இராமதாசின் அணுகுமுறை தமிழக மக்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. அவருக்கு உரிய அங்கீகாரத்தை வழங்க மக்கள் தயாராகி விட்டனர்.

கல்வித் தகுதி, மக்கள் நலனில் அக்கறை, மக்களுக்காக களத்தில் இறங்கி போராடுவது, எவரும் எளிதில் சந்திக்கக்கூடிய மனிதராக இருப்பது இதற்கெல்லாம் மேலாக உலகளாவிய அளவில் பாராட்டப் படும் கடந்த கால சாதனைகள், நம்பிக்கை அளிக்கும் எதிர்காலச் செயல்திட்டங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் பார்த்தால் முதலமைச்சர் பதவிக்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மட்டுமே தகுதியானவர்; பொருத்தமானவர்; அவரைத் தவிர வேறு எவருக்கும் தகுதியில்லை என்ற முடிவுக்கு  தமிழ்நாட்டு மக்கள் வந்து விட்டனர். அந்த முடிவுக்கு செயல்வடிவம் கொடுக்க பாட்டாளி மக்கள் கட்சியினர் அனைவரும் கடுமையாக உழைப்பது என்று இந்தக் கூட்டம் சபதம் ஏற்றுக் கொள்கிறது.

அடுத்த சில மாதங்களில் 50 ஆண்டு கால திராவிடக் கட்சிகளின் ஆட்சி முடிவுக்கு வருகிறது; மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தமிழகத்தின் முதலமைச்சராகி ஒரு சொட்டு மது இல்லாத, ஒரு பைசா ஊழல் இல்லாத தமிழகத்தை உருவாக்கப் போவது உறுதியாகி விட்டது. அந்த வகையில் ஆட்சி மாற்றத்திற்கான 2016 ஆண்டை வரவேற்போம்.... 2015-ஆம் ஆண்டுக்கு விடை கொடுப்போம்!’’ nakkheeran,com

கருத்துகள் இல்லை: