புதன், 30 டிசம்பர், 2015

ஜுனியர் விகடன் இதழ்களைக் கைப்பற்றும் அ.தி.மு.கவினர்..!


இதுதான் செய்வாரா ஓ.பன்னீர் செல்வம்? இந்த இதழ் ஜுனியர் விகடன் இதழில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் தொகுதியான போடி சட்டமன்ற தொகுதியில் அமைச்சரின் செயல்பாடுகள் குறித்து ‘என்ன செய்தார் உங்கள் ஊர் எம்.எல்.ஏ.?’ என்ற  கட்டுரை வெளியாகியுள்ளது. இந்நிலையில் தேனி மாவட்டத்தின் பல பகுதிகளில் அ.தி.மு.கவினர்,  ஜூனியர் விகடன் இதழ்களை மொத்தமாகக் கைப்பற்றிக் கொண்டிருக்கிறார்கள். போடியில் (அமைச்சரின் தொகுதியில்) இன்று காலை ஐந்து மணிக்கே அ.தி.மு.க தொண்டர்கள் பேருந்து நிலையங்களில் வலம்வரத்தொடங்கினர். பஸ்ஸிலிருந்து புத்தக பண்டல் இறங்கியவுடன், 350 புத்தகங்களுக்கான பணத்தை  மொத்தமாக  ஏஜெண்டிடம் கொடுத்து  புத்தகங்களை அள்ளிச்சென்றுள்ளனர்.

கம்பத்தில் பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் அ.தி.மு.க-வினர் பார்சலில் வரும் பண்டல்களை மொத்தமாக பணம் கொடுத்து வாங்கினார்கள். சந்தா செலுத்துபவர்களுக்கும் , மற்ற கடைகளுக்கும் புத்தகங்கள் போகாத அளவிற்கு அனைத்து புத்தகங்களையும் கைப்பற்றிக் கொண்டுள்ளனர்.

தேனி பகுதியில் குறைந்த அளவில் புத்தகங்களை விற்பனைக்கு வைத்திருக்கும் கடைகளில் மொத்தமாக வாங்கி வருகின்றனர்.


புத்தகங்கள் வாங்கியபின்,  'மீண்டும் ஜுனியர் விகடன் இதழ் வந்தாலும் அதனையும் மொத்தமாக தங்களுக்கே தர வேண்டும்' என்று சொல்லிச் சென்றிருக்கிறார்கள். என்ன, ஏது என்று விசாரிப்பவர்களிடம் அ.தி.மு.கவினர் அமைச்சர் தரப்பினர்தான் புத்தகங்களை வாங்கச் சொன்னார் எனச் சொல்கிறார்களாம்.

தேனி மாவட்டத்தில் கூடுதல் இதழ்களை அனுப்பும் பணிகளை முடுக்கிவிட்டிருக்கிறோம். வாசகர்களுக்கு ஏற்பட்டிருக்கும் அசெளகரியத்துக்கு வருந்துகிறோம்! vikatan.c0m

கருத்துகள் இல்லை: