ஆந்திர மாநிலம் சித்தூர் மாநகராட்சி மேயர் அனுராதா அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் அனுராதாவுடன் இருந்த அவரது கணவர் குண்டு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.
இந்த சம்பவம் ஆந்திர மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ஆந்திரா மாநிலம், சித்தூர் நகராட்சி தலைவராக ( ஆந்திராவில் நகராட்சி தலைவரை மேயர் என அழைப்பர் ) இருப்பவர் ஆளும் கட்சியான தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த கட்டாரி அனுராதா.
இன்று மதியம் வழக்கம்போல் அலுவலகம் வந்த அனுராதா அதிகாரிகளுடன் உரையாடி க்கொண்டு இருந்துள்ளார். அப்போது அலுவலகத்துக்குள் வந்த மர்மநபர்கள் 5 பேர் துப்பாக்கியால் சரமாரியாக அனுராதாவை நோக்கி சுட்டுள்ளனர். அருகில் இருந்த அவரது கணவரையும் சுட்டுள்ளனர்.
இதில் அனுராதா சம்பவயிடத்திலேயே பலியானார்.
அவரது கணவர் கட்டாரிமோகன் குண்டுகாயங்களுடன் சித்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உயிருக்குபோராடியதால் அவரை வேலூர் சி.எம்.சி மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்துள்ளனர்.தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தாலும் உயிருக்கு ஆபத்தான நிலையில்உள்ளார்.
சித்தூர் மாவட்டத்தில் கோலோச்சிய முன்னால் காங்கிரஸ் எம்.எல்.ஏ பாபு இதனை செய்தார் என முதலில்தகவல் பரவியது. இப்போது கட்டாரிமோகனுக்கும், அவருடன் இருந்த அவரது நெருங்கிய உறவினர் மஞ்சுநாதாவுக்கும் இடையே சில மாதங்களாக குடும்ப தகராறு இருந்துவந்துள்ளது. கட்டாரிமோகனை பழிவாங்க மஞ்சுநாதா தான் கூலிப்படையை வைத்து கொலை செய்துள்ளார்என்றும் கூறப்படுகிறது.
கூலிப்படையினர் இருவரை பிடித்து சித்தூர் எஸ்.பி விசாரித்து வருவதாக கூறப்படுகிறது. சித்தூர் மேயர் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து தெலுங்கு தேசம் தொண்டர்கள் வன்முறையில்ஈடுப்பட்டனர். நகராட்சி அலுவலகத்துக்கு வெளியே நிறுத்தப்பட்டுயிருந்த இருசக்கரவாகனங்கள், ஜீப்கள் அடித்து நொருக்கி தீவைத்து எரித்தனர். “ சம்பவத்தை கேள்விப்பட்டு நகராட்சிஅலுவலகம் வந்த சித்தூர் போலிஸார் நகராட்சி அலு வலகம் மற்றும் மேயரின் வீடுபோன்றவற்றுக்கு பாதுகாப்புக்கு அளித்துவருகின்றனர்.
பொதுமக்களைநகராட்சி அலுவலகத்துக்குள் அனுமதிக்க போலிஸார் மறுத்துவிட்டனர். ஆளும்கட்சியை சேர்ந்த மேயர்அனுராதா சுட்டுக்கொல்லப்பட்டது ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதற்கு ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சித்தூர் மாவட்டம் தான் சந்திரபாபு நாயுடுவின் சொந்த மாவட்டம் என்பது குறிப்பிடதக்கது. செய்தி - படங்கள் : ராஜா nakkheeran.in

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக