சில நாட்களுக்கு முன்பாக ஐ.எஸ் தீவிரவாதிகள் குறித்தான ஆவணப்படம் ஒன்று
இணையத்தில் சிக்கியது. நாற்பது நிமிடங்களுக்கு மேலாக ஓடக் கூடிய அந்தப்
படம் ஆப்கனில் தாலிபானுக்கு ஐஎஸ் தீவிரவாதிகளுக்கும் இடையேயான விரிசலையும்
ஐஎஸ் தீவிரவாதிகள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதையும் பதற்றத்துடன்
காட்டிக் கொண்டிருந்தது. தாலிபான்கள்தான் இருப்பதிலேயே காட்டுமிராண்டிகள்
என்று நினைத்துக் கொண்டிருந்த உலகம் ‘IS is ruthless compare to Taliban'
என்று சொல்ல ஆரம்பித்து வெகு நாட்கள் ஆகிவிட்டதற்கான காரணங்கள் படத்தில்
பதிவு செயப்பட்டிருந்தன.
குழந்தைகளிடம் துப்பாக்கியைக் கொடுத்து எதிரிகளை சுடச் சொல்கிறார்கள்.
சுடுவதற்கு முன்பாக ‘இவன் நம் மதத்துக்கு துரோகம் செய்தான்’ என்று காதில்
ஓதுகிறார்கள். துரோகிகளை அழிக்க வேண்டும் என்று அந்தக் குழந்தையின் மனதில்
பதிக்கிறார்கள். அதன் பிறகு அவர்கள் யாரையெல்லாம் துரோகிகள் என்று அடையாளம்
காட்டுகிறார்களோ அவர்களையெல்லாம் அந்தக் குழந்தை வெறியெடுத்துச்
சுடுகிறது. பதினான்கு வயதுச் சிறுவனை தற்கொலைப்படையாக மாற்றி
வைத்திருக்கிறார்கள்.
ஆறு வயதில் அவனை பெற்றோர்களிடமிருந்து பிரித்து வந்து திரும்பத் திரும்ப இதையே சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். ‘சாவது பற்றி எனக்கு எந்த பயமுமில்லை’ என்கிறான். ‘எப்பொழுது உத்தரவு வந்தாலும் என்னை சிதைத்துக் கொள்வேன்’ என்கிறான். அவனுக்கு பெற்றவர்கள் பற்றிய எந்த நினைப்புமில்லை. தான் இந்த வாழ்க்கையில் அனுபவிப்பதற்கு எவ்வளவோ இருக்கின்றன என்கிற யோசனையுமில்லை. உத்தரவுக்காகக் காத்திருக்கிறான்.
ஆறு வயதில் அவனை பெற்றோர்களிடமிருந்து பிரித்து வந்து திரும்பத் திரும்ப இதையே சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். ‘சாவது பற்றி எனக்கு எந்த பயமுமில்லை’ என்கிறான். ‘எப்பொழுது உத்தரவு வந்தாலும் என்னை சிதைத்துக் கொள்வேன்’ என்கிறான். அவனுக்கு பெற்றவர்கள் பற்றிய எந்த நினைப்புமில்லை. தான் இந்த வாழ்க்கையில் அனுபவிப்பதற்கு எவ்வளவோ இருக்கின்றன என்கிற யோசனையுமில்லை. உத்தரவுக்காகக் காத்திருக்கிறான்.
இந்த ஆவணப்படத்தை பார்த்த போது நடுக்கமாக இருந்தது. ஆயிரமாயிரம்
ஆண்டுகாலங்களாக நாகரிகத்தை நோக்கி மனித இனம் நகர்ந்து கொண்டிருப்பதாக
வரலாறு மற்றும் மனிதவியல் புத்தகங்களில் படித்ததையெல்லாம் வெறும் நாற்பது
நிமிடங்களில் அடித்து நொறுக்குவது போலத் தோன்றியது. மதம் மட்டுமே
முன்னிலைப்படுத்தப்பட்டு பிற அத்தனை அறவுணர்ச்சிகளும் சாகடிக்கப்படுகின்றன.
பின்னந்தலையில் சுடப்பட்டு சாகடிப்பவனின் குடும்பம் பற்றிய எந்த
நினைப்பும் சுடுகிறவனுக்கு இருப்பதில்லை. தூக்கில் தொங்கவிடப்படுபவனை நம்பி
ஒரு குடும்பம் இருக்கக் கூடும். வயதான பெற்றோர்கள் அவன் கொண்டு வரும்
ரொட்டித் துண்டுக்காக காத்திருக்கக் கூடும். அவனது பச்சிளங்குழந்தை தனது
எதிர்காலம் குறித்தான கனவுகளை தனது தந்தையின் கண்கள் வழியாக பார்த்துக்
கொண்டிருக்கக் கூடும். எல்லாவற்றுக்கும் வெடிகுண்டுகளும், துப்பாக்கி
ரவைகளும், தூக்குக் கயிறுகளும், பெட்ரோலும் தீக்குச்சியும் பதில் சொல்லிக்
கொண்டிருக்கின்றன. கொத்துக் கொத்தாக கொன்று குவிக்கிறார்கள்.
என்ன மாதிரியான காலம் இது?
ஐஎஸ் தீவிரவாதிகளின் உலகம் குரூரமானது. ரத்தத்தாலும் சதையாலும்
எல்லாவற்றையும் வழிக்குக் கொண்டு வந்துவிட முடியும் என்று மூடத்தனமாக
நம்புகிறார்கள். எதைப் பற்றியும் யோசிக்காமல் கொலை செய்கிறார்கள்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வந்த வரலாற்றுச் சின்னங்களை வெடி
வைத்துத் தகர்க்கிறார்கள். விலங்குகளிடம் கூட அடிப்படையான அறவுணர்ச்சி
உண்டு. ஆனால் இவர்களிடம் இல்லை என்பது அயற்சியாக இருக்கிறது.
எல்லாவற்றுக்கும் ரத்தமும் உயிரும்தான் தீர்வு என்பது எவ்வளவு பெரிய
காட்டுமிராண்டித்தனம்? அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். குழந்தைகளும்
பெண்களும் முதியவர்களும் நிரம்பிய விமானத்தை ராக்கெட் எறிந்து தாக்கியதாக
அறிவிக்கிறார்கள். பாரிஸில் நூற்றுக்கணக்கானவர்கள் இறந்த பிறகு நாங்கள்தான்
சாவடித்தோம் என்று தினவெடுத்து அறிவிக்கிறார்கள்.
இவர்கள் அறிவித்துக் கொள்வது போல கடவுளின் மதத்துக்கு துளியளவு கூட
நன்மையைச் செய்வதில்லை. கடவுளின் பெயரால் செய்து கொண்டிருப்பதாகச் சொல்லிக்
கொள்ளும் இந்த ரத்தச் சரித்திரம் கடவுளின் மதத்துக்கான சகாயம் இல்லை.
அநியாயம். உலகளவில் சாமானிய இசுலாமியர்களின் மீதான வெறுப்பை
வளர்த்துவிடுகிறார்கள். பாரிஸ் நகர தாக்குதல் குறித்தான எந்தவொரு
செய்தியிலும் ஒரு பின்னூட்டமாவது இசுலாமிய வெறுப்பைக் காட்டுகிறது.
நல்லகவுண்டன்பாளையத்து சாதிக் பாட்ஷாவைப் பார்த்து சம்பந்தமேயில்லாமல்
‘இவனுக இப்படித்தான்’ என்று பேச வைக்கிறார்கள். இம்ரான்களையும்
சல்மான்களையும் விமான நிலையங்களில் நிர்வாணப்படுத்தி சோதனையிட
வைக்கிறார்கள். எதிரில் வரும் ஹபிபுல்லாவிடமிருந்து இரண்டு அடிகள் நகரச்
செய்கிறார்கள். குல்லாவும் தாடியும் வைத்த யாரைப் பார்த்தாலும்
தீவிரவாதியாக இருக்கக்கூடுமோ என்று பயப்படச் செய்கிறார்கள். இதை
மட்டும்தான் மதத் தீவிரவாதம் செய்து கொண்டிருக்கிறது. Polarization என்பது
கண்கூடாக நடந்து கொண்டிருக்கிறது.
அமெரிக்காவும் ரஷ்யாவும் ப்ரான்ஸூம் தீவிரவாதிகள் மீது தாக்குதல்
நடத்துகிறார்கள். இத்தகைய தாக்குதல்களில் அப்பாவிகள் சாகக் கூடும் என்பது
வருத்தம்தான். ஆனால் இந்த முரடர்களை வேறு எந்தவிதத்தில் அடக்கி வழிக்குக்
கொண்டு வர முடியும்?
உலகம் முழுக்கவுமே தீவிரவாதத்திற்கு எதிரான மக்களின் உணர்வுகள் வெளிப்பட
வேண்டும். மதம் இனம் மொழி நாடு என்ற வேறுபாடுகளைக் களைந்து இவர்களின்
செயல்களைக் கண்டிக்க வேண்டும். சாமானியர்களின் ஆதரவில்லாமல் எந்தச்
செயல்பாடும் வென்றதில்லை என்பதுதான் வரலாற்று உண்மை.
இசுலாமியத்தின் பெயரால் எதைச் செய்தாலும் மயிலிறகில் வருடிக் கொடுக்க
வேண்டியதில்லை. ‘அவர்கள் துப்பாக்கி எடுக்க என்ன காரணம்’ என்று ஆராய
வேண்டும் என்று எழுதிக் கொண்டிருக்கும் தருணம் இதுவன்று. என்ன காரணமாக
வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். ப்ரான்ஸ் நாட்டின் ராணுவ
நிலையையும் காவல்துறையினரையும் அவர்கள் தாக்கவில்லை. சாமானியர்களைக்
கொன்றிருக்கிறார்கள். எளிய மனிதர்களின் குடும்பங்களைச்
சிதறடித்திருக்கிறார்கள். இது பச்சையான அயோக்கியத்தனம். இதை எந்த மதத்தின்
பெயராலும் நியாயப்படுத்த முடியாது. நம்மைச் சுற்றிலும் அறிவிலிகள்
இருப்பதும் பிரச்சினையில்லை; முரடர்கள் இருப்பதும் பிரச்சினையில்லை.
முரட்டுத்தனமான அறிவிலிகள் இருப்பதுதான் பிரச்சினை. தீவிரவாதத்தினால்
செத்துப் போன ஒவ்வொருவனின் குடும்பமும் அனுபவிக்கும் வேதனையையும் பிரிவுத்
துன்பத்தையும் நாம் அல்லது நமது சந்ததியினர் அனுபவிக்கும் காலம்
வெகுதூரத்தில் இல்லை என்பதுதான் நடுங்கச் செய்கிறது.
2 கருத்துகள்:
யூத இலுமினாட்டிகளும் இவ்வுலக அடிமைகளும்.....
இதோ வந்துவிட்டான் தனி ஒருவன் புடின்
ரஷ்ய புடினும் உலக அரசியலும்..........
உலகம் முழுக்க ஒரு அதிர்வு ஏற்பட்டிருக்கின்றது, அதாவது சுமார் 30 ஆண்டுகளுக்கு பின் வரலாறு திரும்பி இருக்கின்றது.
கடந்தவாரம் நடந்த ஐ.நா சபை கூட்டத்தில் இருவரின் உரை மிக கவனிக்கபட்டது, நம்மவர்களுக்கு தெரிந்தது மோடி மற்றும் நவாஸ் ஷெரீப் ஆற்றிய உரை. என்ன உருப்படியான பேசினார்கள் என்றால் ஒன்றுமில்லை, பேசினாலும் ஒன்றும் ஆகபோவதுமில்லை.
ஆனால் இஸ்ரேலிய பிரதமர் ஈரானை குறிவைத்து பேசிய பேச்சுக்களும், ரஷ்யானி புடீன் சிரிய அரசை காப்பாற்றி பேசியதும் பலரின் புருவங்களை உயரசெய்தன. அதாவது இரு நாடுகளும் ஏதோ ரகசிய திட்டம் வைத்திருப்பதாக உலகம் உணர்ந்துகொண்டது.
தந்திரத்தில் நூல் அல்ல, தனி நூலகமே அமைக்கும் அளவிற்கு கில்லாடி இஸ்ரேல், அதனால் திட்டம் தெரியாது, ஆனால் ரஷ்யா கொஞ்ச நாளாகவே அமெரிக்காவினை எந்த முட்டுசந்தில் பிடித்து மூக்கறுக்கலாம் என அலையும் நாடு, அதிரடி காட்டிவிட்டார்கள்.
இரண்டாம் உலகப்போர் முடிந்த காலமுதல் அதற்கு அடுத்த எல்லா போரின் பின்னாலும் இவர்கள் இருவரும் இருந்தார்கள். நேரடியாக மோதவில்லை ஒன்று அரசுகளின் பின்ன்னால் இருப்பார்கள், அல்லது போராளிகள் பக்கம் இருப்பார்கள்.
வங்கதேச போரின்பொழுது பாகிஸ்தானுக்கு ஆதரவாக அமெரிக்கா கிளம்ப, நீங்கள் வந்தால் நாங்களும் வருவோம் என ரஷ்யா கிளம்ப அதோடு வீட்டோடு முடங்கியது அமெரிக்கா.
இப்படியான ஆட்டங்கள் 1989 வரை நடக்க, அதன்பின் ரஷ்யா உடைய,கேட்க ஆளில்லாமல் அமெரிக்கா போட்ட ஆட்டம் கொஞ்சமல்ல.
ஈரானை தவிர எல்லா அரபுநாட்டையும் ஆட்டினார்கள், சதாம் உசேனை இல்லாத பொய்சொல்லி தூக்கில் இட்டார்கள், கடாபி தொலைக்கபட்டார், ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி, இறுதியாக சிரியா பக்கம் வந்தார்கள்.
அப்பக்கம் உக்ரைனில் சீண்டபட்ட பின் புடின் விழித்துகொண்டார், சிரியாவின் அரசு எமது நண்பர் என்றார். ஆயுதங்கள் மட்டும் கொடுத்து கவனமாக பார்த்துகொண்டர். இந்நிலையில் அமெரிக்க ஆதரவு சிரியா குழுக்களும், டைனோசராக வளர்ந்துவிட்ட ஐ.எஸ் இயக்கமும் படுத்திய பாட்டில் மக்கள் அகதிகளாக வெளியேற நிலமை சிக்கலானது.
சிரிய போராளிகுழுக்களுக்க் ஆதரவு, சிரிய அரசுக்கு எதிர்ப்பு, ஐ.எஸ் இயக்கத்தின் மீது விமான குண்டுவீச்சு அதன் செலவுக்கு சவுதியிடம் வசூல் என கடந்த செவ்வாய் வரை தனியாக ஆடியது அமெரிக்கா
அகதிகள் பிரச்சினை ஐ.நாவில் எதிரொலிக்க, சர்வதேச அமைதிபடையினை சிரியாவில் நிறுத்தும் யோசனை முன்வைக்கபட்டது, அதாவது சுருக்கமாக அமெரிக்க அதிகாரம். ஆனால் அதிபரை பிடித்து கீழே தள்ளும் நிபந்தனை ஒபமாவோடது.
இப்படி ஏதும் நடக்கலாம் எனும் நிலையில்தான் அட்டகாசமாக உள்புகுந்து தைரியமாக ஆடுகிறது ரஷ்யா, அதாவது ஐ.எஸ் இயக்கம் மீது தானாக முன்வந்து விமான தாக்குதல் நடத்தி இருக்கின்றது.
ராணுவ தாக்குதலில் ரஷ்யாவின் மூர்க்கம் அதிகமாக இருக்கும், வழக்கமாக இரண்டு குண்டினை எங்காவது வீசிவிட்டு, சவூதியிடமும் குவைத்திடமும் ரசீதை காட்டி வசூலிக்கும் அமெரிக்க தாக்க்குதல் இந்நாள் வரை ஐ.எஸ் இயக்கத்தை பாதிக்கவில்லை.
ஆனால் ரஷ்ய அடியில் அரண்டு போய் கிடக்கின்றது ஐ.எஸ் இயக்கம்.
அதோடு விடவில்லை. இப்பொழுது விமான தாக்குதல்ட்தான் ஆனால் தேவைபட்டால் ரஷ்ய ராணுவம் சிரியவில் நிறுத்தபடலாம் என பகிரங்கமாக எச்சரிக்கின்றது புட்டீனினின் ரஷ்யா
இதுவரை உலகின் எந்த நாட்டின்மீதும் அது தாக்கியது இல்லை, எலலையோடு நின்றுவிடுவார்கள். முதன்முறையாக தாக்கி அசத்தி இருக்கின்றது. இதில் ஐ.எஸ் இயக்கம் அழுகின்றதோ இல்லையோ அமெரிக்கா அலறுகின்றது.
இதுவரை அரபுலகில் தனி அரசாட்சி செய்த நாடல்லவா? இன்னொரு நாடு அதுவும் ரஷ்யா வந்தால் விடுமா? இது தவறு , இது அநியாயம் என அள்ளிவிடுகின்றது, அதாவது அவர்கள் செய்தால் சரி, இன்னொருவர் செய்தால் தவறு.
ஐ.எஸ் இயக்கத்திற்கான தாக்குதல் எனும் பெயரில் மொத்த சிரிய அரசின் இயக்கங்களை ஒழித்தொழிக்கும் நடவடிக்கை இது என்பது சிறுகுழந்தைக்கு கூட தெரியும், காரணம் உக்ரைனில் குறிபார்த்து அடித்துவிட்டு, தவறுதலாக நடந்தது என சொல்வது ரஷ்ய வழகம், சில தவறான தாக்குதல்கள் அமெரிக்க நிலைகள் மீதும் விழலாம்.
எதற்கும் தயார் என சிரியாவில் பகிரங்கமாக இறங்கிவிட்ட புட்டீனை உலகம் அச்சத்தோடு பார்க்கின்றது, சிரிய அதிபர் மண்டியிட்டு ஆனந்தத்தில் அழுகின்றார், ஈரான் தள்ளி நின்று சிரிக்கின்றது.
அமெரிக்கா எப்படி அழுதாலும், அழகாக சமாளிக்கிறார் புடின். அதாவது நாம் எதிரிதான் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் ஹிட்லரை ஒழிக்கும் பொழுது நாம் இணையவில்லையா? அப்படி ஐ.எஸ் இயக்கத்தை இணைந்து ஒழிப்போம் என அட்டகாசமாக பதிலளிக்கின்றார்.
இது புட்டினுக்கு தேவை இல்லா விஷயம் என அமெரிக்க அல்லக்கைகள் சொல்ல. புடினின் விளக்கம் அருமையானது" உலக சமாதானத்தை காக்கும் பொறுப்பு அமெரிக்காவிற்கு மட்டும் குத்தைக்ககா விடபட்டிருக்கின்றது"
முதன் முதலாக வளைகுடாவில் பெரும் எதிரியினை சந்திக்கின்றது அமெரிக்கா, உலகம் உற்று கவனிக்கின்றது, இது பெரும் போராக வெடிக்கும் சாத்தியமும் மறுப்பதற்கில்லை.
அகதிகள், ஐ.நா அமைதிபடை எல்லாம் எங்கோ கேள்விபட்ட மாதிரி இருக்கின்றதல்லவா? நமக்கென்ன புலிபடம் பற்றியும், நயந்தரா வீட்டு ரெய்டு பற்றியும் அலசிகொண்டிருக்கின்றோம்.
1987ல் இந்தியாவிற்கு ஈழ அகதிகள் ஏராளமாக வந்தனர். போராளிகளை அடக்க ஐ.நா அமைதிபடையினை கோரினார் ஜெயவர்த்தனே, நிச்சயம் அமெரிக்கபடைகள் திரிகோணமலையில் கால்வைக்கும் நேரம்தான், அப்பொழுதுதான் அதனை தடுக்கத்தான் இந்திய அமைதிபடை உள்ளே சென்று சகலமும் மாறிவிட்டது.
இதுதான் உலகம். அன்று இந்தியபடை சென்றிருக்காவிட்டால் நிச்சயம் இன்னொரு நாட்டு படை சென்றிருக்கும்.
மொத்தத்தில் அமெரிக்காவினை எதிர்க்கும் பலம் எமக்கு என்றும் உண்டு என சொல்லாமல் சொல்கின்றது ரஷ்யா, இந்த எதிர்பாராத திருப்பத்தை மொத்த உலகமும் அதிர்ந்துபோய் கவனிக்கின்றது.
இதனை தெளிவாக இரண்டாம் பனிபோர் என அழைக்களாம் அமெரிக்காவை(யுதஇலுமினாட்டிகளை) இப்போதைக்கு எதிர்க்கும் வல்லமை ரஷ்யாவிடம் மட்டும் தான் உள்ள்து.
பொருத்திருந்து பார்ப்போம் தனி ஒருவன் புடினின் செயல்பாடுகளை.........
(ராஜன்)
கருத்துரையிடுக