புயல் வருவது குறித்து வாக்கிய பஞ்சாங்கம்
கணித்ததாக கூறப்படுவது பற்றி, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் திரு.
எஸ்.ஆர்.ரமணன் அவர்கள் கூறுகையில், தமிழ்நாட்டில் இப்போது புதிய புயல் வர
வாய்ப்பில்லை என்று மறுத்துள்ளார்.
புயல் வருவது குறித்து வாக்கிய பஞ்சாங்கத்தை வைத்து நான் வானிலை சொல்வதில்லை. எனவே, நான் உறுதியாக நம்பவில்லை.
இது குறித்து கி.வீரமணி விடுத்துள்ள
அறிக்கையில், ”தமிழ்நாட்டில் மழை, வெள்ளம் - அதிலும் குறிப்பாக
சென்னையிலும் அதன் புறநகர்ப் பகுதியிலும் அதன் சீற்றத்தைக் காட்டியதால்,
மக்கள் - குறிப்பாக ஏழை, எளிய நடுத்தர வர்க்கத்தினர் சொல்லொணாச் சோகக்
கடலில் தத்தளிக்கின்றனர்.மேலும் மழை பெய்யுமோ என்ற அச்சம் வேறு வெந்த புண்ணில் வேலைச் செருகுவதுபோல், நொந்த உள்ளங்களை நோகடித்துக் கொண்டுள்ளது"
இந்நிலையில், அறிவியல் பூர்வமாக ஊடகங்களுக்கு வானிலை ஆய்வு மையம், அதன் பொறுப்பாளர்கள் அவ்வப்போது வானிலை, மழை, புயல் பற்றி முன் அறிவிப்புகளைத் தருகின்ற கடமையைச் சிறப்பாகச் செய்து வருகின்றனர்!
இதற்கிடையில், மூடநம்பிக்கையாளர் பழைய
பஞ்சாங்கவாதிகளும், தங்கள் பங்களிப்புக்குப் பல கயிறுகளைத் திரித்து,
மக்களின் துன்பத்தை அதிகப்படுத்தி அதில் குளிர்காய எண்ணுகிறார்கள்.
புயல் வருவது குறித்து வாக்கிய பஞ்சாங்கம்
கணித்ததாக கூறப்படுவது பற்றி, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் திரு.
எஸ்.ஆர்.ரமணன் அவர்கள் கூறுகையில், தமிழ்நாட்டில் இப்போது புதிய புயல் வர
வாய்ப்பில்லை என்று மறுத்துள்ளார்.
புயல் வருவது குறித்து வாக்கிய பஞ்சாங்கத்தை வைத்து நான் வானிலை சொல்வதில்லை. எனவே, நான் உறுதியாக நம்பவில்லை.
இறை வழிபாட்டில் எனக்கு நம்பிக்கை
இருந்தாலும் நான் அலுவலகத்திற்கு வந்துவிட்டால் மற்றவைகளை ஒதுக்கி வைத்து
விட்டு, விஞ்ஞானியாக மாறி விடுவேன்.
உலக வானிலை வழிகாட்டுதல்படி செயற்கைக்கோள்
தரும் தகவல்களை மையமாக வைத்து வானிலை நிலவரங்களைக் கணித்து மக்களுக்குத்
தகவல் தருகிறோம். வடகிழக்கு பருவ மழைகாலம் என்பதால், அவ்வப்போது மழை வரும்;
புயல் எதுவும் இப்போது இல்லை.
வரும் 22ஆம் தேதி மிகப் பெரிய அளவில் கடும்
மழை இருக்கும் என்று நாசா தகவல் கொடுத்துள்ளது என்றெல்லாம் வாட்ஸ் அப்பில்
சில தகவல்கள் உலா வருவதுபற்றி அவரிடம் கேட்டபோது - நாசாவுக்கும், வானிலை
ஆய்வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை; அவர்கள் பணி வேறு, எங்கள் துறையின்
பணி வேறு என்று திட்டவட்டமாக மறுத்து தெளிவுபடுத்தியதோடு மற்றொன்றையும்
கூறியுள்ளார்.
எனக்கு வாட்ஸ்அப் கிடையாது. டுவிட்டர்,
பேஸ்புக் இல்லை. அலுவலகத்தில் இருந்து வீட்டுக்குச் சென்றால் நிம்மதியாக
இருக்கிறேன். நிம்மதியாகத் தூங்குகிறேன் - இதற்காக நாம் அவரை வெகுவாகப்
பாராட்டுகிறோம்.
விஞ்ஞானிகளிலேகூட சிலருக்குக் கடவுள்
நம்பிக்கை இருந்திருக்கிறது; எல்லா விஞ்ஞானிகளும் முழுப் பகுத்தறி வாளர்கள்
அல்லர்; அத்துறை நிபுணர்கள் - ஆய்வாளர்கள் அவர்கள் அவ்வளவே!
ஆனால், மக்களை பஞ்சாங்கம், வார பலன்,
ராசிபலன், நாள் நட்சத்திரம் முதலியவை மூலம் அறிவைக் கட்டிப்போட்டு, அவர்களை
முன்னேற விடாமல் தடுப்பது மிக மிகப் பிற்போக்குத்தனமே!
அறிவியல் பலனாகக் கிடைக்கும் பல
சாதனங்களைப் பயன் படுத்தும் மனிதர்கள், அந்த அறிவியல் தரும் மனப்பான்மையை
(Scientific temper) ஏனோ பெற மறுக்கின்றனர்.
இந்த லட்சணத்தில் மத்தியில் உள்ள
ஆட்சியாளர்களில் பலர், புராண இதிகாசங்களில் விஞ்ஞானத்தைத் தேடி
கதையளக்கிறார்கள். சாண் ஏறிடும் நம் மக்களின் அறிவு, முழம் சறுக்குவதாக
அமையும் கொடுமையும் துரத்துகிறது!
துணிந்து இம்மாதிரி அறிவியல் அடிப்படையில்
கருத்துக்களை விளக்கிய திரு. ரமணன் போன்ற அதிகாரிகளின் எண்ணிக்கை பரவ
வேண்டும். தொலைக்காட்சி குறிப்பாக, பொதிகை போன்றவைகளால் பரப்பப்படும்
பக்தி, மூடத்தன விழாக்களைக் குறைத்து அறிவியல் மனப்பான்மையை வளர்க்க
அவர்கள் முன் வர வேண்டும்” என்று கூறியுள்ளார்.webdunia.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக