அரைக்கால் டவுசர், கையில்லாத மேலாடை, ஜீன்ஸ், குறைந்தளவு டி-சர்ட்கள்
அணிந்து வருவோரை இந்து கோயிலுக்குள் அனுமதிக்கக் கூடாது என உயர் நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.
திருச்சி மாவட்டம், மருங்காபுரி அக்கியம்பட்டியில் உள்ள ஸ்ரீசெண்பகவிநாயகர்
கோயில் விழாவில் நவ. 22, 23 ஆகிய நாள்களில் கிராமிய இசை நிகழ்ச்சி
நடத்துவதற்கு அனுமதி கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல்
செய்யப்பட்டது. இதை விசாரித்து நீதிபதி எஸ்.வைத்தியநாதன் நேற்று பிறப்பித்த
இடைக்கால உத்தரவு:
செண்பகவிநாயகர் கோயிலில் இரு நாட்களிலும் கலைநிகழ்ச்சிகள் நடத்த அனுமதி
வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சிகளில் ஜாதி, கட்சி, மதத் தலைவர்கள் சார்பாக
கோஷங்கள் எழுப்பக்கூடாது. பாடல்கள் ஒலிபரப்பக்கூடாது. அவர்களின்
படங்களுடன் பிளக்ஸ் போர்டுகள், பேனர்கள் கட்டக்கூடாது, பொதுமக்களின்
அமைதிக்கு குந்தகம் விளைவிக்கக்கூடாது, ஒலிபெருக்கி பயன்படுத்தக்கூடாது,
இந்த நிபந்தனைகள் மீறப்பட்டால் போலீஸார் நிகழ்ச்சியை நிறுத்தலாம்.
கோயிலுக்கு கடவுளை வழிபட வரும் பக்தர்கள் மத்தியில் தெய்வீக சூழலை உருவாக்க
ஆண்கள், பெண்கள், குழந்தைகளுக்கு ஆடை கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது.
அதன்படி கோயிலுக்கு வரும் ஆண்கள் மேலாடையுடன் வேஷ்டி, பைஜாமாவும், பெண்கள்
சேலை, தாவணி, மேலாடையுடன் கூடிய சுடிதாரும், குழந்தைகள் முழுமையாக
மூடப்பட்ட ஆடையும் அணிந்து வர வேண்டும்.
அரைக்கால் டவுசர், ஷார்ட்ஸ், மினி ஸ்கர்ட்ஸ், மிடிஸ், கையில்லாத மேலாடைகள்,
இடுப்புக்கு கீழ் நிற்கும் ஜீன்ஸ், இடுப்புக்கு மேல் நிற்கும் டி-சர்ட்
இன்னும் பல ஆடைகள் அணிந்து வருவோரை இந்து கோயிலுக்குள் அனுமதிக்கக்கூடாது
என நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார். பின்னர் இந்த வழக்கு நவ.25-ம் தேதிக்கு
ஒத்திவைக்கப்பட்டது. /tamil.thehindu.com/ta
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக