பிரான்ஸின் பாரிஸ் நகரில் கடந்த
வெள்ளிக்கிழமை 132 பேர் பலியாவதற்குக் காரணமான
தாக்குதல்களுக்கு திட்டம் தீட்டிய சூத்திரதாரியான அப்டெல்ஹமீட்
அபாயோவுத்தை தேடி பொலிஸார் மாடிக் கட்டடமொன்றில் புதன்கிழமை
அதிகாலை மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது தற்கொலைக் குண்டுத்
தாக்குதலை நடத்திய பெண் தொடர்பான தகவல்கள் வியாழக்கிழமை
வெளியாகியுள்ளன.
ஐரோப்பாவின் முதலாவது பெண் தற்கொலைக்
குண்டுதாரியான அந்தப் பெண், அப்டெல்ஹமீட் அபாயோவுத்தின் (27 வயது)
மைத்துனியான ஹஸ்னா அயித்போலச்சன் என மேற்படி உத்தியோகபூர்வமற்ற
தகவல்கள் கூறுகின்றன.
இதுவரை காலமும் அப்டெல்ஹமீட்
அபாயோவுத் சிரியாவிலிருந்து ஐ.எஸ். தீவிரவாதிகளின்
தாக்குதல்களுக்கு வியூகம் வகுத்து வந்ததாக நம்பப்பட்டு வந்தது.
ஆனால் கையடக்கத் தொலைபேசி
அழைப்புக்களை குறுக்கீடு செய்ததன் மூலம் பெறப்பட்ட புலனாய்வுத்
தகவல்கள் மூலம் அவர் பிரான்ஸில் இருப்பது அறியப்பட்டதாக பாரிஸ் நகர
விசாரணையாளர் பிரான்கொயிஸ் மொலின்ஸ் தெரிவித்தார்.
இந்தத் கையடக்கத்தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பான புலனாய்வுத் தகவல் பெறப்பட்டு 20 நிமிடங்களில் பாரிஸ் நகரின்
புறநகரப் பகுதியான செயின்ட்
டெனிஸிலுள்ள குறிப்பிட்ட குடியிருப்பு மாடிக் கட்டடத்தை 100 க்கு
மேற்பட்ட ஆயுதந் தாங்கிய பாதுகாப்புப் படையினர் முற்றுகையிட்டனர்.
இதனையடுத்து அந்ததக்
கட்டடத்திலிருந்த தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு
படையினருக்குமிடையே உக்கிர துப்பாக்கிச் சமர் இடம்பெற்றுள்ளது.
சுமார் ஒன்றரை மணி நேரம் இடம்பெற்ற
துப்பாக்கிச் சமரையடுத்து பெண் தற்கொலைக் குண்டுதாரியான ஹஸ்னா
அந்தக் குடியிருப்புக் கட்டடத்தின் மூன்றாவது மாடி ஜன்னலொன்றில்
தோன்றி பாதுகாப்புப் படையினரை நோக்கி உதவி கோரி கூச்சலிட்டுள்ளார்.
இந்நிலையில்¸ அந்தப் பெண் முகத்தை
மறைத்தவாறு நின்றிருந்ததால் அவரது ஆளடையாளத்தைக்
காண்பிக்குமாறு அவரை பாதுகாப்புப் படையினர் கோரியுள்ளனர்.
ஆனால் அந்தப் பெண் தனது முகத்தைக் காண்பிக்காது கைகளை மட்டும் மேலே உயர்த்தியுள்ளார்.
அவர் பின்னர் கைகளை பாதுகாப்புப்
படையினரின் பார்வையிலிருந்து மறைக்கவும் படையினர் அந்தப் பெண்ணை
கைகளை உயர்த்துமாறு உத்தரவிட்டுள்ளதுடன் அவ்வாறு செய்யாவிட்டால்
துப்பாக்கிச்சூட்டை நடத்த நேரிடும் என என எச்சரிக்கை விடுத்தனர்.
ஆனால்¸ அவரோ படையினரின் உத்தரவுக்கு செவிசாய்க்காது அவர்களை நோக்கி துப்பாக்கிச் சூட்டை நடத்த ஆரம்பித்துள்ளார்.
இந்நிலையில்¸ அந்தக் குடியிருப்புக்
கட்டடத்துக்கு எதிரிலிருந்த கூரையிலிருந்து பொலிஸார்
துப்பாக்கிச் சூட்டை நடத்தினர்.
இதன்போது பாரிய குண்டு வெடிப்பு சத்தம்
கேட்டுள்ளது. அந்தப் பெண் தற்கொலைக் குண்டுதாரி தனக்குத் தானே குண்டை
வெடிக்க வைத்து உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் அப்டெல்ஹமீட் அபாயோவுத்தும் உயிரிழந்துள்ளதாக நம்பப்படுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை பாரிஸ்
நகரிலுள்ள தேசிய விளையாட்டு மைதானம், மதுச்சாலைகள் மற்றும்
உணவகங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல் சந்தேக நபர்களை
தேடி மேற்கொள்ளப்பட்ட இந்தத் தேடுதல் நடவடிக்கையின் போது இடம்பெற்ற 7
மணி நேர மோதலில் 5 பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிறு காயங்களுக்கு
உள்ளானதுடன் பொலிஸ் நாயொன்று கொல்லப்பட்டுள்ளது.
தீவிரவாதிகள் தரப்பில் மூவர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஐரோப்பாவின் முதல் பெண் தற்கொலைதாரி
பாரிஸ் புறநகர் பகுதியில் பொலிஸ் முற்று
கையின்போதும் தற்கொலை குண்டை வெடி க்கச் செய்த பெண்ணின் புகைப்பட வெளியா
கியுள்ளது. அந்த பெண் குண்டை வெடிக்க செய்தபோது அவரது தலை ஜன்னலுக்கு
வெளியால் வந்து வீதியில் விழுந்துள்ளது.
ஐரோப்பாவில் நடத்தப்பட்ட முதலாவது பெண்
தற்கொலை குண்டு தாக்குதலாக இது அமைந்துள்ளது. தற்கொலை தாக்குதலை நட
த்தியிருக்கும் ஹஸ்னா அயித்புலன் என்ற அந்த பெண் “எனக்கு உதவுங்கள், எனக்கு
உதவுங்கள்” என்று கூச்சலிட்ட பின்னரே தற் கொலை அங்கியை வெடிக்கச்
செய்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக