பாரிஸில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரெஞ்ச் உள்துறை அமைச்சர் பெய்நார் காசநோவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பிரெஞ்ச் உள்துறை அமைச்சர் பெய்நார் காசநோவ்
நாடு முழுவதும் 168 இடங்களில் காவல்துறையினர் முற்றுகையிட்டு முன்னெடுத்த சோதனை நடவடிக்கைகளில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுகளுக்கு அப்பாற்பட்டு கலாஷ்னிகோவ், தானியங்கித் பிஸ்டல்கள், ராக்கெட் ஏவும் கருவிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் காசநோவ் தெரிவித்துள்ளார்.
தீவிரவாத ஜிகாதி அமைப்பில் உள்ளவர்களிடம், அவசரகாலச் சட்டங்களைப் பயன்படுத்தி விசாரணைகள் நடைபெற்று வருவதாக பிரெஞ்ச் அரசாங்கம் கூறுகிறது. தமது நாட்டின் மீது நடத்தப்பட்டத் தாக்குதலுக்கு எதிரானத் தாக்குதல்கள் காத்திரமாகவும் முழுமையானதுமாக இருக்கும் எனவும் பிரான்ஸின் உள்துறை அமைச்சர் காசநோவ் வலியுறுத்தியுள்ளார் bbc.tamil.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக