சனி, 21 நவம்பர், 2015

24-ல் தேசிய முற்போக்கு கூட்டணி கூட்டம்

புதுடில்லி: விரைவில் பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற உள்ளதை முன்னிட்டு தேசிய முற்போக்கு கூட்டணியின் கூட்டம் வரும் 24-ம் தேதி நடைபெற உள்ளது. பார்லிமென்ட்டின் குளிர்கால கூட்டதொடர் வரும் வியாழக்கிழமை (26ம் தேதி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பார்லியில் முக்கிய பிரச்னைகளில் எதிர்கட்சிகளின் ஆதரவுடன் மசோதாக்கள் நிறைவேற்றுவது மற்றும் எதிர்கட்சிகள் எழுப்பும் பிரச்னைகளை சமாளிப்பது குறித்து வரும் 24-ம் தேதி தேசிய முற்போக்கு கூட்டணி கூட்டம் நடைபெற உள்ளது. முன்னதாக இக்கூட்டம் 18-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர்களில் ஒருவரான அசோக் சிங்கால் மறைவை அடுத்து கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.


இதனையடுத்து தேசிய முற்போக்கு கூட்டணி கூட்டம் வரும் 24-ம் தேதி துவங்குகிறது. இரண்டு நாட்கள் வரையில் கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பார்லிமென்ட்டில் முக்கிய மசோதாக்கள் எளிதாக நிறைவேற எதிர்கட்சிகளின் ஒத்துழைப்பு தேவை என்பதில் கருத்தில் கொண்டு மத்திய நிதியமைச்சர் தனது மகளின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்படி காங்கிரஸ் தலைவர் சோனியா, துணை தலைவர் ராகுல், மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உட்பட பல்வேறு முக்கிய தலைவர்களுக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்தும், பார்லி கூட்டத்தொடரி்ல் நிறைவேற்ற உள்ள முக்கிய மசோதாக்களுக்கு ஆதரவு தர கோரியும் வேண்டு கோள் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில் பார்லி கூட்டத்தொடர் கூட்டப்படுவதை முன்னிட்டு அனைத்து கட்சி கூட்டத்திற்கும் லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அழைப்பு விடுத்துள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது  dinamalar.com

கருத்துகள் இல்லை: