செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015

ரணில் விக்ரமசிங்கே ஆட்சி அமைக்கிறார் !அதிபர் மைத்ரி பால சிறிசேனா முன்னிலையில் பதவி....

தேர்தல் முடிவுகள்!: ஐ.தே.க. 107, ஐ.ம.சு.மு. 95, த.தே.கூ. 16, ஜே.வி.பி. 5, ஈ.பி.டி.பி. 1, மு.க. 1 இலங்கை பார்லி. தேர்தலில்  .இன்று நடந்த ஓட்டு எண்ணிக்கையில் ரணில் விக்ரமசிங்கே கட்சி 106 இடங்களில் வெற்றி பெற்றது. தமிழ் தேசிய கட்சி 10 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதையடுத்து பிரதமராக ரணில் விக்ரமசிங்கே இன்று மாலை அதிபர் மைத்ரி பால சிறிசேனா முன்னிலையில் பதவியேற்கிறார். மகிந்த கட்சியில் தெரிவான 95 எம்பிக்களில்  இருந்து சுமார் 25 தொடக்கம் 40 வரையிலான MPக்கள் ரணில் பக்கம் தாவ உள்ளார்கள். இதன் காரணமாக ரணில் தனித்து ஆட்சியமைக்க தேவையான 113 ஆசனங்கள் கிடைத்து விடும். அதுபோக பாராளுமன்றில் அறுதிப் பெரும்பாண்மை (மூன்றில் இரண்டு) ரணில் அரசுக்கு கிடைக்கும் சாத்திய கூறும்  உள்ளது  தமிழ் தேசிய  கூட்டணி 16 இடங்களில்  வெற்றி பெற்றுள்ளது எனவே அவர்கள் ஏற்கனவே அறிவித்த படி  அவர்களது ஆதரவும்  ரணிலுக்கு கிடைக்கும்
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் 7 எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
 இதில் தமிழ் தேசியகூட்டமைப்பின் மாவை சேனாதிராஜா, ஸ்ரீதரன், சித்தார்த்தன், சுமந்திரன், சரவணபவ உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர், மேலும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் டக்ளஸ் தேவானந்தாவும், ஐக்கிய தேசிய கட்சியின் விஜயகலாவும் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளன
தலைவர் சம்பந்தர் திருகோணமலையில் வெற்றி பெற்றுள்ளார்

கருத்துகள் இல்லை: