செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015

கொச்சி விமான நிலையம் உலகின் முதல் சோலார் விமான நிலையமாகிறது கேரளாவின்...

உலகிலேயே முதல்முறையாக முழுக்க முழுக்க சூரிய சக்தியாலேயே இயங்கும் விமான நிலையமாக கொச்சி ஏர்போர்ட்டை மாற்றியிருக்கிறது கேரளா. கொச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு ஒரு நாளைக்கு 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் யூனி்ட்டுகள் வரை மின்சாரம் தேவைப்படுகிறது. இந்நிலையில், இந்த மின்சாரத்தை சூரிய சக்தி மூலம் உற்பத்தி செய்ய முடிவு செய்த கொச்சி விமான நிலைய நிறுவனம் (சி.ஐ.ஏ.எல்) கடந்த மார்ச் 2013-ல் 100 கிலோவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட சோலார் பிளான்டை விமான நிலையத்தின் அரேவல் டெர்மினல் பிளாக் கட்டிடத்தின் கூரையில் அமைத்தது. கிரிட் முறையில் வடிவமைக்கப்பட்ட இதில் பேட்டரிக்கு பதிலாக ஸ்டிரிங் இன்வெர்டர்கள் பயன்படுத்தப்பட்டன.


இது வெற்றிகரமாக அமைந்ததை அடுத்து, விமான நிலைய வளாகத்திலும், கூரையிலும் மீண்டும் 1 மெகாவாட் சோலார் பிளான்டை அமைத்தது. ரிமோட் கன்ட்ரோல் மூலம் கட்டுப்படுத்தும் வகையில் இந்த சோலார் பிளான்ட் அமைக்கப்பட்டது. சோலார் மூலம் விமான நிலையம் இயக்கப்பட்ட பிறகு, இதுவரை 550 மெட்ரிக் டன் அளவுக்கு கார்பன் குறைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது விமான நிலையம் முற்றிலுமாக சோலார் மயமாக்கப்பட்டுள்ளது. கேரள முதல்வர் உம்மன்சாண்டி 12 மெகாவாட் சோலார் பவர் பிளான்டை இன்று காலை துவங்கி வைத்தார். கொச்சி ஏர்போர்ட்டில் கார்கோ காம்ப்ளக்ஸ் அருகில் சுமார் 45 ஏக்கர்கள் நிலப்பரப்பில் 46 ஆயிரம் சோலார் பேனல்கள் நிறுவப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது dailythanthi.com

கருத்துகள் இல்லை: