திங்கள், 17 ஆகஸ்ட், 2015

250 விமானங்களை மொத்தமாக ஆர்டர் செய்தது இண்டிகோ.

இந்தியாவின் முன்னணி பயணிகள் விமானச் சேவை நிறுவனமான இண்டிகோ, தனது விமானச் சேவை மற்றும் குத்தகை விமானங்களை அதிகரிக்க ஏர்பஸ் நிறுவனத்திடம் சுமார் 250 ஏ320நியோ விமானங்களை வாங்கத் திட்டமிட்டு இதற்கான ஆர்டரை சமர்ப்பித்துள்ளது. இந்த 25 விமானங்களின் மொத்த மதிப்பு 26.55 பில்லியன் டாலராகும். இதற்கான ஒப்பந்தத்தில் இண்டிகோ மற்றும் ஏர்பஸ் நிறுவனங்கள் சனிக்கிழமை கையெழுத்திட்டது.
துவரை இண்டிகோ நிறுவனம் ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து சுமார் 530 விமானங்களை ஆர்டர் செய்துள்ளது. கடந்த 2005ஆம் ஆண்டு 100 ஏ320 ரக விமானங்களும், 2011ஆம் ஆண்டு 180 விமானங்களும், தற்போது 250 ஏ320நியோ விமானங்களை ஆர்ட்ர் செய்து அசத்தியுள்ளது
மேலும் இந்த ஆர்டர் தான் உலக விமானப் போக்குவரத்து துறையிலேயே, எண்ணிக்கையில் மிகப்பெரிய ஆர்டராகக் கருதப்படுகிறது
இண்டிகோ நிறுவனம் பங்குச்சந்தையில் இறங்குவதற்கான முக்கியப் பணிகளைச் செய்து வரும் இந்நிலையில் இந்த 26 பில்லியன் டாலர் ஒப்பந்தம், இந்நிறுவன மதிப்பை உயர்த்த உறுதுணையாக இருக்கும். மேலும் இதற்கான விண்ணப்பங்களைச் சந்தைக் கட்டுப்பாட்டு ஆணையமான செபி-யிடம் சமர்ப்பித்துள்ளது
ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 250 விமானங்களை வங்குவதற்கான ஒப்பந்தத்தை 2014ஆம் ஆண்டே இருநிறுவனங்களுக்கு மத்தியிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்ட

Read more at: tamil.goodreturns.in/

கருத்துகள் இல்லை: