புதன், 19 ஆகஸ்ட், 2015

காங். கட்சி அலுவலகம் தாக்குதல்: அ.தி.மு.க.,வுக்கு கண்டனம்

தி.மு.க., தலைவர் கருணாநிதி: அனைத்துக் கட்சித் தலைவர்களும், ஊடகங்களும் விமர்சனம் செய்ததைப் போல, தமிழ்நாடு காங்., தலைவர் இளங்கோவனும், மோடி - ஜெயலலிதா, சந்திப்பு குறித்து, தன் கருத்தை வெளியிட்டிருக்கிறார். இதற்காக, ஆளுங்கட்சியினர், சத்தியமூர்த்தி பவனிற்கும், இளங்கோவன் வீட்டுக்கும் சென்று, வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது.காங்., செய்தி தொடர்பாளர் குஷ்பு: இளங்கோவன் தவறாக பேச வாய்ப்பில்லை; அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியை பற்றி, அவர் தன் கருத்தை தெரிவித்துள்ளார். அ.தி.மு.க., ஆட்சியின் ஊழலை எதிர்த்து அவர், போராடி வருகிறார். அவர் நடத்தும் போராட்டத்தை திசை திருப்ப, அ.தி.மு.க.,வினர் அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர்.

த.மா.கா., தயார்:

ஈரோட்டில், இளங்கோவன் பேட்டி அளித்த போது, த.மா.கா., தலைவர்
வாசனையும் இழிவுபடுத்தி பேசி உள்ளார்.மதுவிலக்கு தொடர்பாக, வாசன் தெரிவித்த கருத்து பற்றி, செய்தியாளர்கள், இளங்கோவனிடம் கேட்ட போது, 'வாசன் தான் இறந்து விட்டாரே' என்று சொல்லியுள்ளார்.செய்தியாளர்கள் அதிர்ச்சி அடைந்து, 'என்ன சார் சொல்கிறீர்கள்?' என, மீண்டும் கேட்டதும், 'நான் எஸ்.எஸ்.வாசனை சொன்னேன்' என, சமாளித்துள்ளார். இதை அறிந்து, வாசன் வருத்தம் அடைந்துள்ளார். இதனால், இளங்கோவனை எதிர்த்து போராட்டம் நடத்த, த.மா.கா.,வும் தயாராகி வருகிறது.

எச்.ராஜா புகார்:


தமிழக போலீஸ் டி.ஜி.பி.,யிடம், பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா அளித்த புகார் மனு:மலிவான விளம்பரம் தேடும் நோக்கத்திலேயே, ஜெயலலிதா - மோடி சந்திப்பை இளங்கோவன் விமர்சித்துள்ளார். இதன் மூலம், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்த வேண்டும் என்பதே, அவரது நோக்கம்.கலவரத்தை துாண்டும் விதத்தில் பேசிய இளங்கோவன் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; அவரை கைது செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியுள்ளா தினமலர்.com

கருத்துகள் இல்லை: