ஆர்.கே.நகர்
தொகுதியில் சனிக்கிழமை காலை 8 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடந்து
வந்தது. தண்டையார் பேட்டை பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் சுயேட்சை
வேட்பாளர் டிராபிக் ராமசாமி தாக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது.இந்தநிலையில்
செய்தியாளர்களிடம் பேசிய டிராபிக் ராமசாமி, தண்டையாளர் பேட்டையில் 156,
157 பூத்துக்கள் புதிதாக போட்டார்களாம். எந்த அறிவிப்பும் இல்லை. 100
மீட்டருக்குள் அதிமுகவினர் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தனர். பூத்துக்கு
எதிரிலேயே ஒரு வேன் நிற்கிறது. அதனை போட்டோ எடுத்திருக்கிறேன். நான்
இன்ஸ்பெக்டரிடம் சொன்னேன். அவர் அந்த வண்டியை எடுக்க முடியாது என்றார்.
நான் சட்டம் தெரியுமா. 100 மீட்டருக்குள் எதுவும் இருக்கக் கூடாது என்றேன்.
அதற்கு அவர் ஆமாம் என கூறிவிட்டு சென்றார்
நான் அந்த இடத்தைவிட்டு 50 அடி தூரம் வந்தபோது ஒரு கும்பல் எனது காரை தாக்கியது. பின்னால் இருந்த இஸ்பெக்டர் போங்க போங்க என்று என்னை விரட்டுகிறார். என்னை விரட்டுகிறார்களே, அதிமுகவினருக்கு அங்கு என்ன வேலை. ஓட்டுப்போட வந்தால் ஒட்டு போட்டுவிட்டு சென்றுவிட வேண்டும்.இந்த தேர்தலின் வெற்றி வாய்ப்பை அறிவிக்கக் கூடாது என்ற மனுவை நாளை காலை மனுவாக கொடுக்கப்போகிறேன். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பல்வேறு முறைகேடு நடைபெறுகிறது. போலீசாரிடம் புகார் அளிக்க சென்றால் என்னை அனுப்புவதில் குறியாக உள்ளனர் என்றார். nakkheeran.in

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக