savukkuonline.com"
இந்த பணத்தை பெங்களுருக்கு சென்று குமாரசாமியிடம் சேர்த்தது, சென்னையைச் சேர்ந்த வைர வியாபாரி கீர்த்திலால் மற்றும் டாக்டர் சிவக்குமார். இந்த ஆபரேஷனுக்கு ஒத்துழைப்பு கொடுத்து, தேவையான வசதிகளை செய்து கொடுத்தது, மக்கள் டிஜிபி ராமானுஜம்
“என் வாழ்க்கையில் இது போல வேதனை ஏற்படுத்திய ஒரு பொது நிகழ்வை நான் பார்த்தே கிடையாது. மிகவும் மோசமான ஒரு கையறு நிலையில் இருந்ததாக உணர்ந்தேன்” என்று கூறினார் ஒரு மூத்த பத்திரிக்கையாளர்.
அந்த மூத்த பத்திரிக்கையாளர் குறிப்பிட்ட நிகழ்வு, ஜெயலலிதாவின் பதவியேற்கும் நிகழ்வு. “அப்பட்டமாக லஞ்சம் வாங்கிக் கொண்டு ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி கூட்டலைக் கூட சரி பார்க்காமல் தீர்ப்பளிக்கிறார், அதைக் கண்டு ஊரே நகைக்கிறது. ஆனால், கொஞ்சமும் கூச்சமில்லாமல் அந்த தீர்ப்பின் அடிப்படையில், முதல்வராக பதவியேற்றுக் கொள்கிறார் ஜெயலலிதா. அதை இந்த தேசத்தின் உச்சநீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. நீதிப் பிறழ்வு என்று உரக்க குரல் கொடுக்க வேண்டிய ஊடகங்கள், அவரின் இடைத்தேர்தல் வாக்கு வித்தியாசம் எவ்வளவு என்று கணக்கிட்டுக் கொண்டிருக்கின்றன” என்றார்.
அவர் வேதனையில் நியாயம் இல்லாமல் இல்லை.
1975ல், தேர்தல் ரத்து செய்யப்பட்ட பயத்தில், நெருக்கடி நிலையை பிறப்பித்து, இந்தியாவை இந்திரா காந்தி இருளில் தள்ளினார் இந்திரா காந்தி. அடிப்படை உரிமைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன என்று அறிவித்தார். இந்தியாவின் பல மாநில உயர்நீதிமன்றங்கள், அடிப்படை உரிமைகளை ரத்து செய்ய முடியாது என்று தீர்ப்பளித்தன. சில நீதிமன்றங்கள், கைது செய்யப்பட்டவர்களை விடுதலையும் செய்தன. இத்தீர்ப்புகளை தெளிவுபடுத்தக் கோரி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. “ஏடிஎம் ஜபல்பூர்” என்று பிரபலமாக அன்று அழைக்கப்பட்ட வழக்கில், ஐந்து நபர் கொண்ட நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்தது.
“27 ஜுன் 1975 நாளிட்ட குடியரசுத் தலைவரின் உத்தரவுப்படி, எந்த நபருக்கும், அரசியல் அமைப்புச் சட்ட ஷரத்து 226ன் கீழ் ஒருவரை கைது செய்து சிறையில் அடைத்தால், அந்த கைது தவறாக இருந்தாலோ, விதிகளை மீறி இருந்தாலோ, சட்டவிரோதமாக இருந்தாலோ, அல்லது உள்நோக்கத்தோடு பிறப்பிக்கப் பட்டிருந்தாலோ, உரிய வழிமுறைகளை பின்பற்றாமல் இருந்தாலோ, அதை எதிர்த்து ஆட்கொணர்வு மனுவோ, அல்லது ரிட் மனுவோ தாக்கல் செய்ய இயலாது” என்று தீர்ப்பளித்தனர்.
ஆனால், அந்த ஐந்து நபர் நீதிபதிகளில் ஒருவரான எச்.ஆர்.கண்ணா, இதை எதிர்த்து தீர்ப்பு எழுதினார். அவரின் தீர்ப்பு குறித்து, தலையங்கம் எழுதிய நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை, இந்தியா, மீண்டும் ஜனநாயகப் பாதைக்கு திரும்பி, ஒருவருக்கு நினைவுச் சின்னம் எழுப்புமேயானால், அது எச்.ஆர் கண்ணாவுக்காகத்தான் இருக்க வேண்டும் என்று தலையங்கம் எழுதியது. அன்று இந்திராவுக்கு எதிராக முதுகெலும்போடு இருந்த ஒரே நீதிபதியாக இருந்தார் நீதியரசர் எச்.ஆர்.கண்ணா.
நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டு 30 ஆண்டுகள் கழித்து, அடிப்படை உரிமைகள் கிடையாது என்று தீர்ப்பெழுதியவர்களில் ஒருவரான நீதிபதி பகவதி, ஜேடிஎம் ஜபல்பூர் வழக்கில் நான் தவறு செய்து விட்டேன் என்று பேட்டியளித்தார்.
செப்டம்பர் 2011ல் இது குறித்து பேட்டியளித்த நீதிபதி பி.என்.பகவதி, “நான் செய்தது தவறு. பெரும்பான்மை நீதிபதிகள் அளித்த தீர்ப்பு சரியான தீர்ப்பு அல்ல. இப்போது தீர்ப்பெழுதும் வாய்ப்பு கிடைத்தால், நீதிபதி எச்.ஆர்.கண்ணாவோடு உடன்பட்டிருப்பேன். அந்த தீர்ப்புக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். சக நீதிபதிகளோடு ஏன் உடன்பட்டேன் என்று எனக்கு தெரியவில்லை. தொடக்கத்தில் பெரும்பான்மை முடிவுக்கு நான் உடன்படாவிட்டாலும், இறுதியாக ஒப்புக் கொள்ளும்படி வற்புறுத்தப்பட்டேன். என் தரப்பில் அது ஒரு பலவீனமான நடவடிக்கை” என்று கூறினார்.
செப்டம்பர் 2011ல் இவ்வாறு கூறி பி.என்.பகவதி ஒன்றும் அரிச்சந்திரன் அல்ல. இப்படி தீர்ப்பெழுதி விட்டு, ஜனதா அரசாங்கம் வந்ததும், இந்திரா காந்தியை சாடினார். ஆனால் மீண்டும் இந்திரா வென்று ஆட்சியைக் கைப்பற்றியதும், “உங்கள் இரும்புக்கரங்கள் மற்றும் உறுதியான நடவடிக்கையாலும், தீர்க்கதரிசனத்தாலும், நிர்வாகத் திறமையாலும், நீண்ட அனுபவத்தாலும், மக்களின் மீது உள்ள அக்கறையினாலும், இந்த தேசத்தை சரியாக வழிநடத்தி, சரியான இலக்கை அடைவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது” என்று ஒரு கடிதத்தை அனுப்பினார். இதுதான் பி.என்.பகவதியின் லட்சணம். இணைப்பு
குமாரசாமிகள் இந்திய நீதித்துறைக்கு புதியவர்கள் அல்ல. இந்திய நீதித்துறை பல குமாரசாமிகளையும், பி.என்.பகவதிகளையும் பார்த்திருக்கிறது. இன்றைய தலைமுறையினருக்கு ஜெயலலிதாவின் டான்சி வழக்கு குறித்து தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
டான்சி நிறுவனத்துக்கு சொந்தமான 3.07 ஏக்கர் நிலம் மற்றும் 2698 சதுர மீட்டர் கட்டிடம் ஆகியவற்றை, சந்தை விலையை விட குறைவான விலையில் ஜெயலலிதாவும், சசிகலா மற்றும் சிலர் கூட்டுச் சதியில் ஈடுபட்டு, வாங்கினார்கள் என்பதும், முதலமைச்சராக இருந்து கொண்டு, ஜெயலலிதா அரசு நிலத்தை வாங்கினார் என்பதும் குற்றச்சாட்டு. பத்திரப் பதிவு அலுவலகத்தின்படி ஒரு மனையின் விலை 7.32 லட்சம் என்றால், ஜெயலலிதா மற்றும் சசிகலா பங்கதாரர்களாக இருக்கும் ஜெயா பப்ளிகேசன்ஸ் நிறுவனத்துக்கு ஒரு மனை 3.01 லட்சத்துக்கு விற்கப்பட்டுள்ளது என்பதே குற்றச்சாட்டு. 29 மே 1992 அன்று பத்திரப்பதிவு நடந்து, அதே நாளில் நிலம் ஜெயலலிதா வசம் ஒப்படைக்கப்பட்டது. மற்றொரு அரசு நிறுவனமான தமிழ்நாடு சர்க்கரைக் கழகத்துக்கு, டான்சி நிலத்தை ஒரு ஏக்கர் 3 லட்சம் என்ற அடிப்படையில் வழங்கலாம் என்று 14 அக்டோபர் 1991 அன்று நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை ஜெயலலிதாவே அங்கீகரித்து கையெழுத்திட்டிருக்கிறார். ஆனால் நிலத்தை வெளியாட்களுக்கு விற்கலாம் என்று விளம்பரம் வெளியிடப்படுகிறது. இந்த வழக்கு விசாரணையின்போது, கையெழுத்து நிபுணர்கள் ஆராய்ந்து சரிபார்த்த ஜெயலலிதாவின் கையெழுத்தை ஜெயலலிதாவே தன்னுடையது இல்லை என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போல டான்சி எனாமல்ட் வயர்ஸ் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான நிலத்தை சசி ஜெயா வாங்கினார்கள் என்பது மற்றொரு வழக்கு. 10 அக்டோபர் 1991 அன்று இந்த நிலத்தை விற்க, விளம்பரம் செய்யப்படுகிறது. மூன்று நிறுவனங்கள் இந்நிலத்தை வாங்க முன்வருகின்றன. ஆனால் அந்த மூன்று நிறுவனங்களின் விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டு, 12 டிசம்பர் 1991 அன்று புதிய விளம்பரம் வெளியிடப்படுகிறது. இந்த முறை, நான்கு நிறுவனங்கள் விண்ணப்பிக்கின்றன. அதில் ஒன்று சசி என்டர்பிரைசஸ். 90.53 லட்சத்திற்கு விற்கப்பட்டிருக்க வேண்டிய மனையும், 53.04 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டிருக்க வேண்டிய கட்டிடமும், முறையே, 53.04 லட்சம் மற்றும், 16.25 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டு, இதனால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்பது இரண்டாவது வழக்கு.
வழக்கை விசாரித்த அன்பழகன் என்ற நீதிபதி 9 அக்டோபர் 2000 அன்று ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோருக்கு சிறைத்தண்டனை விதிக்கிறார்.
ஜெயலலிதா உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.தினகர் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது இவ்வழக்கு. நீதிபதி என்.தினகரன் வழக்கறிஞராக இருக்கையில் அவரோடு பணியாற்றிய ஒரு மூத்த வழக்கறிஞர் கூறுகையில், என்.தினகர் அரசு வழக்கறிஞராக இருக்கையில், அரசுத் தரப்பு தவறு செய்திருந்தால் அதை அப்படியே நீதிமன்றத்தில் ஒப்புக் கொள்வார். அரசுத் தரப்பாயிற்றே என்று சமாளிக்க மாட்டார். அந்த அளவுக்கு நேர்மையானவர் என்று பெயரெடுத்தவர் நீதிபதி தினகர். அவரிடம் இந்த வழக்கு மேல் முறையீட்டுக்கு சென்றதும், நடுநிலையாளர்கள் அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர் என்று கூறினார்.
4 டிசம்பர் 2001 அன்று அனைவரையும் விடுதலை செய்த நீதிபதி என்.தினகர் தனது தீர்ப்பில் டான்சி நிலம் அரசு சொத்தே கிடையாது அதனால் ஜெயலலிதா அரசு சொத்தை வாங்கினார் என்று கூற முடியாது. மேலும், பொது ஊழியர் அரசு சொத்தை வாங்கக் கூடாது என்பது விதிதான். அது சட்டமல்ல. ஆகையால் அது ஜெயலலிதாவை கட்டுப்படுத்தாது என்று தீர்ப்பளித்தார். அந்த என்.தினகருக்கு கைமாறாக, தற்போது, பிப்ரவரி 2014ல் அவரை தமிழக சட்ட ஆணையத்தின் தலைவராக நியமித்துள்ளார். டான்சி வழக்கிலிருந்து விடுவித்தவருக்கு கைமாறு செய்ய வேண்டாமா ? அதற்காகத்தான்.
வழக்கு உச்சநீதிமன்றத்துக்கு திமுகவால் எடுத்துச் செல்லப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ராஜேந்திர பாபு மற்றும் வெங்கட்ராம ரெட்டி என்ற நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. ஜெயலலிதா செய்தது தவறுதான். ஆனால் அவரை தண்டிக்க சட்டத்தில் இடமில்லை என்று கூறியதோடு மட்டுமல்ல……. ஜெயலலிதா தன் கையெழுத்தை தன்னுடையதே இல்லை என்று சொல்லும் அளவுக்கு, இந்த வழக்கில் பதற்றமாக இருந்தார் என்றும் கூறினர்.
ஒரு முதலமைச்சர், கையெழுத்து நிபுணர்களால் சரிபார்க்கப்பட்ட கையெழுத்தை தன்னுடையது அல்ல என்று கூறிய ஒரே காரணத்துக்காகவே ஜெயலலிதா தண்டிக்கப்பட்டிருக்க வேண்டாம் ? ஆனால் ஜெயலலிதா, நிலத்தை திருப்பிக் கொடுத்து விட்டதால், அவரின் மனசாட்சிக்கே விட்டு விடுகிறோம் என்று இரண்டு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பெழுதினார்கள்.
இது போன்ற நீதியரசர்கள் இருக்கிறார்கள் என்பது ஜெயலலிதாவுக்கு நன்கு தெரியும். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு விலை உண்டு. விலைபோகாத மனிதனே இல்லை என்றே ஜெயலலிதா நினைத்து வருகிறார். அவர் நினைத்தது அத்தனையும் சரியே என்பது போலத்தான் 1996 முதல், நீதிமன்றங்கள் தீர்ப்பெழுதி வருகின்றன.
ஆட்சிக்கு பொறுப்பேற்கும் முன்பு, தேர்தலில் வெற்றி பெற்றவுடன், வாரம் ஒரு முறை பத்திரிக்கையாளர்களை சந்திப்பேன் என்றார். ஆனால், ஜெயலலிதா டெல்லி கிளம்பும்போதெல்லாம், அவர் வாகனத்தோடு சேர்ந்து ஓடினாலும், எந்த பத்திரிக்கையாளர்களையும் சந்திப்பதில்லை. இது கடந்த ஆண்டு 27 செப்டம்பர் வரை நீடித்தது.
ஆனால் தற்போது சிறை சென்ற பிறகு முதலமைச்சராக பதவியேற்ற பிறகு, இது இன்னமும் மோசமாகி விட்டது.
மே 11 அன்று விடுதலை என்று தீர்ப்பு வந்தது. வெளியே தொண்டர்கள் உற்சாகமாக பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி, ஜெயலலிதாவின் வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருக்க, ஜெயலலிதாவோ, யாரையும் சந்திக்காமல், தனிமைச் சிறையில் இருந்து வெளியே வர மறுத்தார். பூங்கொத்தோடு ஓடி வந்த அல்லக்கை அதிகாரிகள் மற்றும் அடிமை அமைச்சர்களைக் கூட பார்க்கவில்லை. அனைவரின் பூங்கொத்துக்களையும், சசிகலாதான் வாங்கி வைத்தார். ஒரு வாரத்துக்கும் மேல் எவ்விதமான செய்தியும் வெளிவராமல் ஒரு மயான அமைதி நீடித்தது.
அதற்குப் பிறகு, ஒரு வாரம் கழித்து, காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், ஜெயலலிதாவின் கனத்த மவுனம் குறித்தும், அவர் வெளிவராதது குறித்தும் கேள்வி எழுப்பினார். இதையடுத்து, நாளை எம்எல்ஏக்கள் கூட்டம் என்று 22 மே அன்று எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார். ஜெயலலிதா படோடாபமாக பதவியேற்றார். ஜெயலலிதாவின் வசதி கருதி, தேசிய கீதம் “சுருக்கமாக” ஜெயஹே‘ ஜெயஹே‘ என்று பாடப்பட்டது. 28 அமைச்சர்களும், பதினான்கு பதினான்கு பேராக பதவியேற்றுக் கொண்டார்கள்.
பதவியேற்ற பிறகு தலைமைச் செயலகம் செல்வாரென்று பார்த்தால், நேராக போயஸ் தோட்டம் சென்று விட்டார். பிறகு, இரண்டு நாள் கழித்து, தலைமைச் செயலகம் சென்று, புதன் ஓரை நேரமான மதியம் 2 மணி முதல் 3 மணிக்குள் காணொளி காட்சி மூலம் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி விட்டு சென்று விடுகிறார். எதிர்க்கட்சி எம்எல்ஏ ஒருவரைக் கேட்டால், பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. ஒவ்வொரு துறைக்கும் எவ்வளவு நிதி ஒதுக்கீடு என்பதும் முடிந்து விட்டது. அப்படி இருக்கையில் இப்போது புதிதாக தொடங்கப்படும் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு எப்படி செய்ய முடியும் என்று கேள்வி எழுப்புகிறார்.
சாவி கொடுத்த பொம்மை போல தலைமைச் செயலகம் செல்வது, ரிமோட் கண்ட்ரோலை எடுத்து, சினிமா திரையரங்கில் திரை விரிப்பது போல வேடிக்கை பார்ப்பது, பிறகு வீட்டுக்கு செல்வது. இதுவா ஒரு முதலமைச்சரின் வேலை ? இந்த காணொளி காட்சித் திறப்புக்குக்கூட எந்த ஊடகங்களும் அனுமதிக்கப்படுவதில்லை. ஜெயா டிவி மற்றும் அரசு செய்திப் பிரிவின் புகைப்படக் கலைஞர்களைத் தவிர மற்ற யாருக்கும் அனுமதி இல்லை. அரசுப் புகைப்படக் கலைஞர் எடுக்கும் புகைப்படங்களில், ஜெயலலிதாவின் கழுத்தில் முதுமை காரணமாக ஏற்பட்ட சுருக்கத்தையெல்லாம், ஃபோட்டோ ஷாப் மூலமாக நீக்கி விட்டு, ஊடகங்களுக்கு அனுப்பபப் படும் புகைப்படத்தை மட்டும் செய்தித்தாள்கள் வெளியிட வேண்டும்.
சமீபத்தில் ஒரு ஆங்கிலப் பத்திரிக்கையின் செய்தியாளரோடு பேசிக் கொண்டிருக்கையில், அவர் சொன்ன தகவல் அதிர்ச்சியை அளித்தது. தலைமைச் செயலகம் வந்த ஜெயலலிதா, ஒரு மணி நேரம் இருந்து விட்டு கிளம்பினார் என்று செய்தி வெளியிட்டது அந்த நாளிதழ். மறுநாள் காலையில், அந்த செய்தித்தாளின் ஆசிரியரை அழைத்த, ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், ஒரு மணி நேரத்தில் சென்று விட்டார் என்று எப்படி செய்தி வெளியிடுவீர்கள் ? அரசு விளம்பரஙகள் வேண்டுமா, வேண்டாமா என்று கூறியதும், அந்த செய்தியாளர் அழைக்கப்பட்டு, முதல்வர் அலுவலகம் வந்து, அலுவல்களை கவனித்தார் என்று மட்டும் செய்தி வெளியிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டார்.
ஜெயலலிதா தலைமைச் செயலகம் வந்தால் அது ஒரு செய்தி. ஜெயலலிதா அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டினால் அது ஒரு செய்தி. ஜெயலலிதா வீட்டை விட்டு வெளியே வந்தாலே அது ஒரு செய்தி. கட்சி அலுவலகம் வந்தால் அது ஒரு செய்தி. மக்கள் ஏழ்மையில் தவிக்கிறார்கள். அவர்களிடம் உண்ண ரொட்டி இல்லை என்று கூறியபோது, “ரொட்டி இல்லையென்றால் என்ன ? கேக் உண்ணலாமே !!!” என்று கூறிய ஃப்ரென்ச்சு ராணி மேரி அன்டோனியட்டுக்கும், ஜெயலலிதாவுக்கும் என்ன வேறுபாடு ?
இது என்ன 18ம் நூற்றாண்டு அரசா ?
ஆனால், இதையெல்லலாம் கேள்வி கேட்க வேண்டிய ஊடகங்கள் கனத்த மவுனம் சாதிக்கின்றன. ஜெயலலிதாவின் கடைக்கண் பார்வை பட வேண்டும் என்பதற்காகவே தவம் கிடக்கின்றன. ஜுனியர் விகடனை தவிர்த்து, எந்த ஊடகமும் இந்த அரசைக் குறை சொல்வதற்கு முதுகெலும்பற்று இருக்கின்றன.
குமாராசமியின் தீர்ப்பில் கூட்டல் தவறு மட்டுமல்லாமல் மேலும் பல்வேறு தவறுகள் இருக்கின்றன. மூன்று நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு மிகவும் தெளிவாக, “சாட்சிகளையும் ஆவணங்களையும், தெள்ளத் தெளிவாக முழுமையாக ஆராய்ந்து தீர்ப்பளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டிருந்தது. ஆனால், குமாரசாமி அதை செய்யவேயில்லை. ஃப்ரன்ட்லைன் நாளிதழுக்கு பேட்டியளித்த, பி.வி.ஆச்சார்யா, “என்னுடைய 58 வருட வழக்கறிஞர் வாழ்க்கையில், இது போன்ற பிழையான கணக்குள்ள ஒரு தீர்பப்பை நான் பார்த்ததே கிடையாது. அதுவும் இப்படி ஒரு முக்கியமான வழக்கில் இவ்வளவு அசட்டையான ஒரு தீர்ப்பை நான் பார்த்ததே கிடையாது” என்று கூறுகிறார். அவ்வளவு பிழைகள்.
லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் அடிப்படையையே ஆட்டம் காண வைக்கும் அளவுக்கு ஏராளமா பிழைகள் இத்தீர்ப்பில் உள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை, பொதுப்பணித்துறை பொறியாளர்களின் ஆய்வறிக்கையின்படி, கொடுத்த தொகை 27 கோடி. அவற்றில் சிலவற்றை குறைத்து, நீதிபதி குன்ஹா வரையறுத்த தொகை 22 கோடி. ஆனால், குமாரசாமி குத்து மதிப்பாக 5 கோடி என்று எடுத்துக் கொண்டுள்ளார். இந்தியாவெங்கும் சொத்துக் குவிப்பு வழக்கை சந்தித்துக் கொண்டிருக்கும், அரசு ஊழியர்களும், பொது ஊழியர்களும், இத்தீர்ப்பை மேற்கோள் காட்டி விடுதலை கோரினால் என்ன ஆகும் ?
சரி. ஒரு சாதாரண மேஜிஸ்திரேட் கூட செய்யாத இப்படிப்பட்ட தவறை எப்படி ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி செய்தார் என்ற கேள்வி எழும். ஏன் இத்தனை பிழைகள் ஏற்பட்டது என்றால் இந்த தீர்ப்பை குமாரசாமி எழுதவேயில்லை என்பதுதான் காரணம்.
மிக மிக முக்கியமான பொறுப்பில் உள்ள ஒரு அதிகாரி தெரிவித்த தகவல் என்னவென்றால், இத்தீர்ப்பு மூன்று பேரால் எழுதப்பட்டு, இறுதி நேரத்தில், அதுவும் குறிப்பாக அரை மணி நேரத்துக்கு முன்னதாக குமாரசாமியிடம் கொடுக்கப்பட்டது என்பதே. அரை மணி நேரத்தில் தீர்ப்பை அவர் எப்படி படித்துப் பார்ப்பார் ?
இதற்காக குமாரசாமிக்கு கொடுக்கப்பட்ட தொகை 300 கோடி. இந்த ஏற்பாடுகள் அனைத்தையும் செய்தவர், சவுக்கு வாசகர்களுக்கு ஏற்கனவே பரிச்சயமான டாக்டர் கே.எஸ்.சிவக்குமார். இவர், சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்தின் மகள் பிரபாவதியின் கணவர். இவர்தான் இந்த டீலிங்கை பேசி முடித்துக் கொடுத்தது.
இந்த பணத்தை பெங்களுருக்கு சென்று குமாரசாமியிடம் சேர்த்தது, சென்னையைச் சேர்ந்த வைர வியாபாரி கீர்த்திலால் மற்றும் டாக்டர் சிவக்குமார். இந்த ஆபரேஷனுக்கு ஒத்துழைப்பு கொடுத்து, தேவையான வசதிகளை செய்து கொடுத்தது, மக்கள் டிஜிபி ராமானுஜம்.
இந்த 300 கோடியைத் தவிர்த்து, பெங்களுருவில் உள்ள பண்ணாரகட்டா சாலையில், ஒன்பது மனைகள், குமாரசாமி கூறிய ஒரு ட்ரஸ்டின் பெயரில் பதிவு செய்து தரப்பட்டுள்ளது. மத்திய உளவுத்துறை, பண்ணாரகட்டா சாலையில் உள்ள நிலங்களுக்கான பதிவாளர் அலுவலகத்தில் கடந்த மூன்று மாதத்தில் 9 மனைகளை யார் வாங்கியுள்ளார்கள் என்ற விபரத்தை ஆராய்ந்தால், குமாரசாமியின் குட்டு வெளிப்படும்.
ஜெயகாந்தனின் “ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்” புதினத்தின் கதாநாயகியான நடிகை கல்யாணி, நாவலின் இறுதியில், நடக்க முடியாமல் முடமாகிப் போவாள்.
இந்தக் கட்டுரையின் கதாநாயகி ஜெயலலிதா, ஒரு மாநிலத்தையே முடமாக்கியுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக