வியாழன், 25 ஜூன், 2015

பா.ஜ.,வை புரட்டி எடுக்கும் பெண் தலைவர்கள்! அடுத்தடுத்து அம்மாமிகள் சொத்திலேயே குறி !

பலம் வாய்ந்த பெண் உறுப்பினர்கள் அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்குவதால் பா.ஜ., என்ன செய்வதென்று தெரியாமல் தலையை பிய்த்துக் கொண்டுள்ளது. இவைகள் யதார்த்தமாக நடக்கிறதா அல்லது உள்கட்சி விவகாரத்தால் யாராவது திட்டமிட்டு சிக்க வைக்கிறார்களா என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாக உள்ளது.
பா.ஜ.,வை பொறுத்த வரை சுஷ்மா சுவராஜ், வசுந்தரா ராஜே சிந்தியா, ஸ்மிருதி இரானி, பங்கஜ முண்டே ஆகிய நால்வருமே ஒவ்வொரு வழியில் செல்வாக்குள்ள உறுப்பினர்கள். சுஷ்மா சுவராஜ், 25 வருடங்கள் சிவசேனை - பா.ஜா.க கூட்டணி ஆட்சி கொண்ட உலகிலேயே செல்வம் அதிகம் கொழிக்கும் மும்பை மாநகராட்சியின் கணக்கு வழக்குகளை தோண்டினால் கோடி கோடிகள் ஊழல் வெளியில் வரும். ஒரு மாநிலதிற்கே பட்ஜெட் போடுமாம் இந்த மாநகராட்சியின் ஒரு வருட வருமானம்
மோடிக்கு முன்னரே பா.ஜ., வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டவர். இதே போல் வசுந்தரா ராஜே, காங்கிரசின் கோட்டை என கருதப்பட்ட ராஜஸ்தானின் சட்டசபை தேர்தலில் 200 க்கும் 163 இடங்களில் வெற்றி பெற்று, 2வது முறையாக முதல்வரானவர்.


ஸ்மிருதி இரானி, டில்லி பாலியல் பலாத்கார சம்பவத்தை எதிர்த்து பலத்த குரல் கொடுத்து, பாலியல் சம்பவங்களுக்கு எதிராக கடுமையான சட்டம் உருவாக காரணமானவர். மோடி அமைச்சரவையில் தைரியமான பெண் எனவும் பெயர் எடுத்தவர். பங்கஜா முண்டே, தனது தந்தை கோபிநாத் முண்டே சாலை விபத்தில் உயிரிழந்த பிறகு, அவரது இறுதி சடங்கின் போது தனி ஆளாக இருந்து மாபெரும் கூட்டத்தை தனது வார்த்தைகளால் கட்டுப்படுத்தியவர். சிவசேனாவின் கை ஓங்கி இருக்கும் மகாராஷ்டிராவில், பா.ஜ.,வில் இணைந்து மகாராஷ்டிராவில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படும் நிலைக்கு வந்து, கடைசி நிமிடத்தில் அந்த முடிவு கைவிடப்பட்டது.

சுஷ்மாவும், வசுந்தராவும் லலித் மோடி விவகாரத்தில் சிக்கிக் கொண்ட சர்ச்சை அடங்குவதற்குள், ஸ்மிருதியின் போலி சான்றிதழ் விவகாரத்தில் முரண்பாடு இருப்பதாக டில்லி கோர்ட் கூறி உள்ளது பா.ஜ.,விற்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியது. அதைப் பற்றி யோசிப்பதற்கு கூட பா.ஜ.,விற்கு அவகாசம் கொடுக்க முடியாத அளவிற்கு, பங்கஜா மீதான ரூ.209 கோடி கடலை மிட்டாய் ஊழல் விவகாரம், பா.ஜ., எதிர்க்கும் கட்சிகளுக்கு 'அல்வா' சாப்பிட்டது போல் ஆகி விட்டது.

குறுகிய காலத்தில் பா.ஜ.,வின் பெண் உறுப்பினர்கள் சர்ச்சைகளில் சிக்கி உள்ளது, பா.ஜ.,வின் நேர்மைக்கு சோதனையை ஏற்படுத்தினாலும், மற்றொரு புறம் சந்தேகத்தையே கிளப்பி உள்ளது. கட்சிக்குள் இருக்கும் சிலரே, பா.ஜ.,விற்கு நெருக்கடியையும் அவப்பெயரையும் ஏற்படுத்த இவர்களை சர்ச்சைகளில் சிக்க வைத்துள்ளனரோ என கட்சி வட்டாரங்களில் கேள்வி எழுந்துள்ளது.தினமலர்.com

கருத்துகள் இல்லை: