வியாழன், 14 மே, 2015

ஆலோசனைக் கூட்டத்தில் தூக்கம்: வட கொரிய ராணுவ அமைச்சருக்கு மரண தண்டனை?

ஆலோசனைக் கூட்டத்தில் தூங்கியது, அதிபர் கிம் ஜாங் உன்-னிடம் எதிர்த்துப் பேசியது உள்ளிட்டவற்றுக்காக வட கொரிய ராணுவத் தலைமை அமைச்சர் ஹ்யோன் யாங் சோலுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தென் கொரிய உளவுத் துறை தெரிவித்துள்ளது.
 இந்தத் தகவலை தென் கொரிய நாடாளுமன்றக் குழு ரகசியக் கூட்டத்தில் அந்த நாட்டு உளவுத் துறை தெரிவித்ததாக அதில் கலந்துகொண்ட எம்.பி. ஒருவர் தெரிவித்தார்.  அடிமைத்தனம் நிறைந்த இனங்களில் இருந்துதான் சர்வாதிகாரிகள் உருவாகிறார்கள்.  கொரியர்களிடம் மட்டும் அல்ல தமிழர்களிடமும் இந்த அடிமைதனமும் அதன் விளைவாக உருவான சர்வாதிகார தலைவர்களையும் தான் பார்க்கிறோமே 

 வட கொரியாவில் சர்வாதிகார ஆட்சி நடத்தி வந்த கிம் ஜாங்-இன் மறைவுக்குப் பின், அந்த நாட்டின் அதிபராக அவரது மகன் கிம் ஜாங் உன் கடந்த 2011-ஆம் ஆண்டு பதவியேற்றார். அதனைத் தொடர்ந்து, தனது அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில், தனக்கு எதிரிகளாக வரக் கூடியவர்கள் என சந்தேகிக்கப்படும் ஏராளமான அதிகாரிகளுக்கு அவர் மரண தண்டனை அளித்ததாகக் கூறப்படுகிறது.
 அவரது உத்தரவின் பேரில் சாதாரண காரணங்களுக்குக் கூட "தேசத் துரோகம்' என்ற முத்திரை குத்தி, அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதாகக் கூறப்படுகிறது.
 இந்த நிலையில், ஆலோசனைக் கூட்டத்தில் தூங்கியது, அதிபரை எதிர்த்துப் பேசியது உள்ளிட்ட "தேசத் துரோகக்' குற்றங்களுக்காக ராணுவ தலைமை அமைச்சருக்கு கடந்த மாத இறுதியில் விமான எதிர்ப்பு துப்பாக்கி மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தென் கொரிய உளவுத் துறை கூறியுள்ளது. dinamani.com

கருத்துகள் இல்லை: