திங்கள், 11 மே, 2015

EVKS.இளங்கோவன்: இந்திய நீதித்துறைக்கு ஒரு கருப்பு நாள்! ஜெயா வழக்கில் நீதித்துறை விமர்சனத்திற்கு உட்பட்டதே

ஜெயலலிதாவை நிரபராதி என கூறி விடுதலை: நீதித்துறை வரலாற்றில் ஒரு கருப்பு நாள்: ஈவிகேஎஸ் இளங்கோவன் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி ஜெயலலிதாவை நிரபராதி என்று கூறி, சொத்து குவிப்பு வழக்கிலிருந்து முழுமையாக விடுதலை செய்துள்ளார். இந்திய நீதித்துறை வரலாற்றில் இன்று ஒரு கருப்பு நாள் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரூ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி. குன்ஹா கடந்த செப்டம்பர் 27, 2014 அன்று 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். இதனால் முதலமைச்சர் பதவியிலிருந்து ஜெயலலிதா விலக வேண்டிய நிலை ஏற்பட்ட து. இந்த வழக்கின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி ஏழு மாதங்கள் கழித்து இன்று வழங்கிய தீர்ப்பில் ஜெயலலிதாவை நிரபராதி என்று கூறி, சொத்து குவிப்பு வழக்கிலிருந்து முழுமையாக விடுதலை செய்துள்ளார். நீதிமன்ற தீர்ப்புக்கு உள்நோக்கம் தான் கற்பிக்கக் கூடாதே தவிர, விமர்சிக்கிற உரிமை உண்டு. இந்திய நீதித்துறை வரலாற்றில் இன்று ஒரு கருப்பு நாள்'' என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.nakkheeran.in

கருத்துகள் இல்லை: