வெள்ளி, 4 ஜூலை, 2014

குஜராத் போலி என்கவுண்டர் வழக்கில் விலக்கு கோரிய அமித் ஷாவின் மனு மீதான விசாரணை தள்ளிவைப்பு

அமித் ஷா மீதான போலி என்கவுண்டர் வழக்கு மும்பை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது எல்லாம், அமித் ஷா நேரில் ஆஜராகாமல் தவிர்த்து வருகிறார். அரசியல் பணியை முன்னிட்டு அவர் ஆஜராகாமல் இருக்கிறார். இந்த நிலையில், இந்த வழக்கு  மீண்டும் சி.பி.ஐ. கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.அப்போது, அமித் ஷா சார்பில் ஆஜராகிய வக்கீல், விசாரணையில் இருந்து அமித் ஷாவுக்கு விலக்கு அளிக்க கோரி ஒரு மனு தாக்கல் செய்தார்.
அதை பெற்று கொண்ட நீதிபதி, இந்த வழக்கின் மீதான அடுத்தகட்ட விசாரணை வருகிற 17–ந் தேதி நடைபெறும் என்று கூறி தள்ளிவைத்தார்.<;இதற்கிடையே, போலி என்கவுண்டர் வழக்கை தள்ளுபடி செய்ய கோரி அமித் ஷா தாக்கல் செய்த மனு வருகிற 14–ந் தேதி விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.dinakaran.com

கருத்துகள் இல்லை: