திங்கள், 30 ஜூன், 2014

கனடாவில் தஞ்சம் கேட்கும் 54 நாட்டு தூதர் குடும்பங்கள் ! The success of Canadian multiculturalism !

ஒட்டவா:கனடா அரசிடம் தஞ்சம் கேட்டு 54 நாடுகளின் தூதர் கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளதாக பிரான்ஸ் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் மதம், இனம், நாடு பிடிக்கும் ஆசை போன்ற பல்வேறு காரணங்களால் போர்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் பல நாடுகளிலும் தீவிரவாதிகளுக்கும், அரசுக்கும் இடையிலான சண்டையில் கோடிக்கணக்கான அப்பாவி மக்கள் தவித்து வருகின்றனர். தினமும் ஆயிரக்கணக்கானோர் இது போன்ற சண்டைகளால் கொல்லப்பட்டும் வருகின்றனர்.  ஈராக், சிரியா, ஆப்கன் போன்ற பல நாடுகளில் லட்சக்கணக்கான மக்கள் உள்நாடுகளிலும், அண்டை நாடுகளிலும் அகதிகளாக தஞ்சம் அடைந்து வருகின்றனர்.


 இந்நிலையில், இது போல் சச்சரவுகள் நிறைந்த நாடுகளை சேர்ந்த தூதர்களும் தங்களுக்கு புகலிடம் அளிக்கக் கோரி கனடாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அரசின் ரகசிய ஆவணங்களில் இருந்து திரட்டப்பட்டதாக கூறப்படும் அந்த தகவல் வருமாறு:
 சிரியா, ஈராக், கிரீஸ், ஹோண்டுராஸ், உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 16 தூதர்களும், அவர்களுடைய குடும்பத்தினரும் தஞ்சம் கேட்டு கனடாவை நாடியுள்ளனர். அதே போல், ஆப்கானிஸ்தான் நாட்டின் 38 தூதர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் தங்களுக்கு தஞ்சம் அளிக்கக் கோரி கனடாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதில் அமெரிக்காவின் தூதரக அதிகாரிஒருவரும் கூட கனடாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளது தெரியவந்துள்ளது.இதுகுறித்து கனடாவின் முன்னாள் தூதரக அதிகாரி கூறுகையில், இது முன் எப்போதும் இல்லாததை விட அதிகமாகும் என்று தெரிவித்துள்ளார். - See tamilmurasu.org

கருத்துகள் இல்லை: