என்ன
சார் ஏதாவது அவார்ட் ஃபங்ஷன் நடக்குதா?’ என்பது தான் சத்யம்
திரையரங்கத்திற்கு படம் பார்க்க வந்த பொதுமக்கள் கேட்ட கேள்வி. அந்த
வகையில் சத்யம் திரையரங்கை ஸ்தம்பிக்க வைத்தனர் தமிழ்த் திரையுலக
நட்சத்திரங்கள்.
இன்று(28.06.14)
காலை சத்யம் திரையரங்கில், ஆர்யா தயாரிப்பில் அவரது தம்பி சத்யா
நடித்திருக்கும் அமரகாவியம் திரைப்படத்தின் இசைவெளியீடு நடைபெற்றது.
தமிழ்த்திரையுலகில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகைகளாக திகழ்ந்துவரும் த்ரிஷா
இசைத்தகட்டை வெளியிட, நயன்தாரா பெற்றுக்கொள்வது தான் இன்றைய நிகழ்ச்சியின்
சிறப்பு.ஆர்யாவின்
கேர்ள்ஃப்ரெண்ட் வரிசையில் த்ரிஷா, நயன்தாரா, பூஜா, ரூபா மஞ்சரி, லேகா
வாஷிங்டன் என நடிகைகளின் பட்டாளம் விழா மேடையில் காணப்பட்டது ரசிகர்களையும்
உற்சாகப்படுத்தியது. ஆர்யா தனது நட்பு வட்டத்தில் மிகவும் செல்வாக்கானவர் என்று திரையுலகில்
ஒளிவுமறைவின்றி பேசப்பட்டாலும், இன்று அதை ரசிகர்கள் உட்பட அனைவருக்கும்
வெட்டவெளிச்சமாக்கிவிட்டார் ஆர்யா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக