வியாழன், 19 ஜூன், 2014

கீரோவின் படங்கள் அடுத்தடுத்து பப்படம் ஆனால் அலப்பறை ?

சிறுத்தை (கார்த்தி ) நடிகரால் அவரை வைத்து படம் இயக்கி வருபவர் புலம்பிக் கொண்டிருக்கிறாராம். சிங்கத்தின் கெரியர் ஏறுமுகமாக இருந்தாலும் அவரது தம்பி சிறுத்தையின் கெரியர் சற்று மந்தமாகவே உள்ளது. அண்மையில் அவர் நடிப்பில் வந்த படங்கள் எல்லாம் பப்படமானது. இதனால் வருத்தத்தில் இருந்த தம்பி நடிகர் தற்போது போலிகத்தி பட இயக்குனரின் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு என்று நடிகர் மெனக்கெட்டு உடல் எடையை எல்லாம் குறைத்துள்ளாராம். ஆனால் படத் தலைப்பை தேர்வு செய்வதில் நடிகர் தலையிட்டு இயக்குனரை படாதபாடுபடுத்திவிட்டாராம். படத்திற்கு தேர்வு செய்யப்பட்ட தலைப்புகளை நடிகர் மூன்று முறை மாற்ற வைத்தாராம். இறுதியில் ஒரு தலைப்பை தேர்வு செய்துள்ளனர். அதை பாதிமனதாக ஏற்றுக் கொண்ட நடிகர் இது எல்லாம் ஒரு தலைப்பா, நல்லாவே இல்ல என்று கூறுகிறாராம். நடிகர் படுத்தும்பாடை பார்த்து இயக்குனர் அதை தாங்க முடியாமல் புலம்புகிறாராம்.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: