புதன், 18 ஜூன், 2014

முதல்வர் ஜெயலலிதா மீது கர்நாடக முதல்வர் சித்தராமையா சீற்றம் !

தமிழக முதல்வராக ஜெயலலிதா ஆட்சிக்கு வரும் போதெல்லாம், காவிரி விஷயத்தில் கர்நாடகாவுடன் சண்டைக்கு வருகிறார்,” என, கர்நாடகா முதல்வர்,சித்தராமையா கூறினார்.காவிரி நீர் பங்கீடு தொடர்பாக, காவிரி நீர் உற்பத்தியாகும் கர்நாடக மாநிலத்திற்கும், அந்த நதி நீரை பங்கீடு செய்து கொள்ளும் தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் இருந்து வந்தது.இதில், சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீரை பெற்றுத் தந்தவர், தமிழக முதல்வர் ஜெயலலிதா. அதற்கான அரசாணையை, மத்திய அரசிதழிலில் வெளியிட்டு, சட்டப்படியான அங்கீகாரம் பெற்றுத் தந்துள்ளார் அவர்.இப்போது, சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, காவிரி நதி நீர் முறையாக பங்கிடப்படுகிறதா என்பதை கண்காணிக்கவும், உத்தரவை செயல்படுத்தவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என, ஜெயலலிதா முயற்சிகள் மேற்கொள்கிறார்.  பெங்களூர்ல்ல தனி கோர்ட் இருக்குற வரைக்கும் அப்படிதான் சண்ட போடுவோம் அத சாக்கா வெச்சாவது அந்த கோர்ட்ட மூட முடியுதான்னு பாப்போம்


சமீபத்தில் டில்லி சென்ற அவர், பிரதமர்நரேந்திர மோடியை சந்தித்து, அது தொடர்பான கோரிக்கையை முன்வைத்தார்.இதனால், தமிழக முதல்வர் மீது கர்நாடக மக்களுக்கும், அம்மாநில ஆட்சியாளர்களுக்கும் கடும் கோபம் உள்ளது. காவிரி நீரை அடிப்படையாக வைத்து, அம்மாநிலத்தில் அரசியல் செய்த வந்தவர்களுக்கு, சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு மற்றும் முதல்வர் ஜெயலலிதாவின் பிற சட்ட நடவடிக்கைகள் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளன.

இந்நிலையில், பெங்களூரில், 'கன்னட சாகித்ய பரிஷத்' நூற்றாண்டு பவன் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற பின், காங்., மூத்த தலைவரும், கர்நாடக முதல்வருமான சித்தராமையா பேசியதாவது:காவிரி விஷயத்தை பேச்சு மூலம் தீர்த்து கொள்ளலாம். ஆனால், தமிழக முதல்வர் ஜெயலலிதா, இதை ஏற்கும் பழக்கம் உடையவர் அல்ல. அடிக்கடி சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்கிறார்; பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்த படி இருக்கிறார்.தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் கருணாநிதி இருவரும் போட்டி போட்டு, காவிரி விஷயம் தொடர்பாக, பிரதமருக்கு கடிதம் எழுதி வருகின்றனர். எந்த காரணத்துக்காகவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடக அரசு இடம் கொடுக்காது.ஜெயலலிதா, பிடிவாதத்துடன் காவிரிவிஷயத்தை வைத்து, கர்நாடக அரசுடன் மோதுகிறார். அரசியல் நோக்கத்துக்காக காவிரிவிஷயத்தை அவர் பயன்படுத்தி கொள்கிறார்.இவ்வாறு அவர் கூறினார்.

பிரதமர் மோடியை, தமிழக முதல்வர் ஜெயலலிதா சந்தித்து வந்த இரண்டொரு நாட்களில், கர்நாடக மாநில அனைத்துக் கட்சி தலைவர்கள் மற்றும் எம்.பி.,க்களுடன் டில்லி சென்று, 'காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது' என, கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

விவசாயிகள்ஆர்ப்பாட்டம்



காவிரி பிரச்னையில், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பைஅவமதிக்கும் கர்நாடக அரசை கண்டித்து, நாகையில், நேற்று, விவசாயிகள்
ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இதில், காவிரி நீர் மேலாண்மை வாரியம், காவிரி நீர் பங்கீட்டு குழு ஆகியவற்றை, மத்திய அரசு உடனே அமைக்க வேண்டும். கோர்ட் அவமதிப்பில் ஈடுபடும் கர்நாடக மாநிலம் மீது, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என,வலியுறுத்தப்பட்டது .விவசாயிகளின் வாழ்வாதார பிரச்னையை அறியாமல் பேசிய, மத்திய அமைச்சர் உமா பாரதிக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், 200 பெண்கள் உட்பட,750க்கும் மேற்பட்டவிவசாயிகள் இதில் கலந்து கொண்டனர்.முன்னதாக, ஏராளானோர் கலந்து கொண்ட கண்டன பேரணியும் நடந்தது.

உருவ பொம்மை எரிப்பு



காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பெங்களூரு மைசூரு பாங்க் சர்க்கிள் அருகில், தமிழக முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோரது உருவபொம்மைகளை, கன்னட அமைப்பினர் எரித்து போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் பங்கேற்ற, கன்னட சலுவளி வாட்டாள் பக் ஷா தலைவர், வாட்டாள் நாகராஜ் பேசுகையில், "தமிழக முதல்வர் ஜெயலலிதா, காவிரி விஷயமாக, எப்போதும் தகராறு செய்து கொண்டே வருகிறார். இவருக்கு, 'சண்டைக்காரி' என்ற விருதுவழங்கினால் சரியாக இருக்கும். சித்தராமையாவின் முடிவுக்கு, எங்களின் முழு ஆதரவு உண்டு,” என்றார்.

ஜெ.,வுக்கு திடீர் பின்னடைவு



பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் நடந்து வரும், தன் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி, தமிழக முதல்வர், ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்த மனுவை, சுப்ரீம் கோர்ட் நேற்று தள்ளுபடி செய்தது.கடந்த, 1991 - 96ல், தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவி வகித்த போது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக, அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை, பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் நடக்கிறது.இந்த வழக்கில் தொடர்புடைய, 'லெக்ஸ் பிராப்பர்ட்டீஸ்' என்ற நிறுவனம் மீதான வழக்கின் விசாரணை முடியும் வரை, தன் மீதான சொத்து குவிப்பு வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி, முதல்வர், ஜெயலலிதா சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், கடந்த மே மாதம், இந்த வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்திருந்தது.இந்நிலையில், நீதிபதிகள் விக்ரம்ஜித் சென், எஸ்.கே.சிங் ஆகியோர் அடங்கிய, 'பெஞ்ச்' முன், சுப்ரீம் கோர்ட்டில் இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, லெக்ஸ் பிராப்பர்ட்டீஸ் நிறுவனத்தின் மீதான வழக்கிற்கும், சொத்து குவிப்பு வழக்கிற்கும் தொடர்பில்லை' என, கூறி, ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்ததுடன், சொத்து குவிப்பு வழக்கின் விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையைநீக்கியும், நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நாளை துவக்கம்: சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை அடுத்து, தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை, பெங்களூரு சிறப்பு கோர்ட்டில், நாளை முதல் மீண்டும் துவங்குகிறது.

- நமது சிறப்பு நிருபர் dinamalar.com

கருத்துகள் இல்லை: