வெள்ளி, 3 ஜனவரி, 2014

உச்ச நீதிமன்றம்: ஓரினச் சேர்க்கை அமைச்சர்களின் கருத்துகள் ஏற்புடையது அல்ல


டெல்லி: ஓரினச்சேர்க்கை குற்றமே என்ற தீர்ப்பு மீது மத்திய அமைச்சர்கள் தெரிவித்த கருத்துகள் ஏற்புடையது அல்ல என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஓரினச் சேர்க்கை குற்றம் அல்ல என்று டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பினை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம் அந்த தீர்ப்பினை ரத்து செய்தது. இந்திய தண்டனை சட்டம் பிரிவு 377-ன் கீழ் ஓரினச்சேர்க்கை கிரிமினல் குற்றம்தான், அந்த சட்டப்பிரிவு இருக்கிறவரை ஓரினச்சேர்க்கையை குற்றம் அல்ல என்று கூற முடியாது என தனது தீர்ப்பில் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தி இருந்தது. இவ்விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ஓரினச்சேர்க்கைக்கு எதிரான தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாக கூறினார். இதேபோல் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தீர்ப்பு தவறானது. ஏமாற்றம் அளிக்கிறது. இதை சரிசெய்வதற்கான எல்லா வாய்ப்புகளும் ஆராயப்படும். இந்த தீர்ப்பினை மறுபரிசீலனை செய்யுமாறு சீராய்வு மனு அல்லது நிவாரண மனுவை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும். அதை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டும். இந்த விவகாரத்தில், தற்போதைய சமூக, நல்லொழுக்க மதிப்பீடுகளை கவனத்தில் கொண்டிருக்க வேண்டும் என்றார். மேலும் இந்த விவகாரத்தில், நாடாளுமன்றம் உரிய முடிவை எடுக்கும் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கமல்நாத் கருத்து தெரிவித்தார். இந்நிலையில், ஓரினச் சேர்க்கை வழக்கு தொடர்பான தீர்ப்பு விவகாரத்தில் மத்திய அமைச்சர்கள் தெரிவித்த கருத்துக்கள் ஏற்புடையது இல்லை என்று கூறி உச்சநீதிமன்றம் இன்று தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: