செவ்வாய், 31 டிசம்பர், 2013

இன்சுலின் இழப்பை ஈடுசெய்ய அக்குபஞ்சர் தீர்வு தருமா?

இன்றைய காலகட்டத்தில் மனிதனை பாடாய்ப் படுத்தி எடுக்கும் வியாதிகளில் மோசமானது சர்க்கரை வியாதி. அதாவது நீரிழிவு நோய். கலப்பட பெற்றோலை ஊற்றிவிட்டு வாகனத்தை ஓட்டினால் எப்படி அதன் இயந்திரம் பாதிக்கப்படுமோ, அதே போல் சர்க்கரை அதிகம் கலந்த இரத்தம் உட லில் பாய்வதால் கண், இதயம், சிறுநீரகம், மூட்டுகள் மற்றும் நரம்புகள் உள்ளிட்ட பல உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன.
சர்க்கரை நோய் வருவதற்கு ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. கணையம் என்ற முக்கியமான உறுப்பு பாதிக்கப்படுவதால் தான் பெரும்பாலானவர்களுக்கு சர்க்கரை நோய் வருகிறது. கணையத்தில் சுரக்கப்படும் முக்கியமான திரவம் இன்சுலின். இந்த இன்சுலின் தான் ஒருவருடைய இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
ஒருவருக்குத் தேவையான அள விற்கு இன்சுலின் சுரக்கப்படவில்லை என்றால் அவர் சர்க்கரை நோய்க்கு ஆளாகிவிடுகிறார். கணையம் பாதிக்கப்படுவதற்கு பல கார ணங்கள் இருக் கிறது.
தவறான உணவுப்பழக்கம், உடற்பயிற்சியின்மை, பரம்பரைக் காரணங்கள், வாழ்க்கை முறை இவற்றைத் தவிர மன அழுத்தம் இருந்தால் உடலுக்குள் ஒரு வித வெப்பத்தன்மை ஏற்படும். இவற்றால் கூட கணையம் பாதிக் கப்படலாம்.
அதேநேரம், நாம் எடுத்துக்கொள்ளும் தவறான நோயெதிர்ப்பு மருந்துகளால் கூட கணையம் பாதிக்கப்படக் கூடும்.
சர்க்கரை நோயை குணப்படுத்தவேண்டும் என்றால் பாதிக்கப்பட்ட கணையத்தின் பாதிப்பைச் சீராக்கி, அதனை மீண்டும் திறமையாக இயங்க வைத்து தேவையான அளவிற்கு இன்சுலினைச் சுரக்கவைப்பது தான். ஆனால் இதற்கு இன்று வரை எந்த ஒரு மருத்துவமும் முன்வரவில்லை. அதனால் தான் ‘சர்க்கரை நோய் கட்டுப்படுத்தக்கூடியது. குணப்படுத்தக்கூடியதல்ல’ என்று ஒரு கருத்தை முன்மொழிகிறார்கள்.
ஆனால் அக்குபஞ்சர்  இதற்குரிய தீர்வைத் தருகிறது.  காதுகளில் உள்ள கணையம் மற்றும் சுரப்பிகளுடன் தொர்புடைய அக்கு புள்ளி களையும், மண்ணீரல் ஓடுபாதையில் உள்ள அக்கு புள்ளிகளையும் தொடர்ந்து தூண்டினால் சுமார் இருபது நாட்களில் கணையத்தை இரண்டு அல்லது மூன்று யூனிட்கள் கூடு தலாக இன்சுலினைச் சுரக்க வைக்கலாம். இதை தொடர்ந்து மேம்படுத்துவதன் மூலம் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் கொண்டு வந்துவிட இயலும்.
உங்களில் சிலருக்கு, ‘கணையத்திற்கான  அக்குபுள்ளிகளில் மட்டும் தூண்டினால் போதாதா? ஏன் மண்ணீரல் ஓடுபாதையிலும் தூண்டவேண்டும்?’ என்ற சந்தேகம் எழலாம். அப்படியானவர்களுக்கான பதில் இதுதான்.
சர்க்கரை நோயாளிகளின் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாவதற்கு சுரக்கப் படும் இன்சுலின் அளவு குறைவது மட்டும்  நிரிழிவுக்குக் காரணமல்ல. இரத்தத்தில்   உள்ள சர்க்கரையை உறிஞ்சுவதற்காக உடல் தசைகளில் உள்ள ரிசெப்டர்ஸ் போன்ற ஓர் அமைப்பு சரியாக இயங்காததும் ஒரு காரணம். இதன் காரணமாகத்தான் சர்க்கரை நோயாளிகள் மெலிந்துவிடுகின்றனர் என்றும் கண்டறியப்பட்டது.
மண்ணீரல் ஓடுபாதை உடலில் உள்ள தசைப்பகுதியைப் பராமரிக்கும் குணம் கொண்டது. அதனால்தான் மண்ணீரல் ஓடு பாதையில் உள்ள அக்குபுள்ளிகளும் தூண் டப்படவேண்டும் என்கிறது அக்குபஞ்சர்.
சர்க்கரை நோயாளிகள்  அடிக்கடி தண்ணீர் குடிப்பதைப் பார்த்திருப்பீர்கள். அடிக்கடி சாப்பிடுவார்கள். அடிக்கடி சிறுநீர் கழிப்பார்கள். இதற்கெல்லாம் காரணம் அவர்களது உடலில் உருவாகும் வெப்பம் தான்.சர்க்கரை நோயாளிகளுக்கு உடலின் மேற்பகுதியில் உருவாகும் வெப்பத்தால் தொண்டை வறண்டு, அதிக தாகத்தை உண் டாக்குகிறது.
உடலின் மத்திய பகுதியில் உள்ள வெப்பத்தால், உணவை இரைப்பை சீக்கிரமா கச் செரித்து, பசியை உண்டாக்குகிறது. கீழ்ப் பகுதியில் உள்ள வெப்பத்தால் சிறுநீர் ஓடு பாதை அதிகமாகத் தூண்டப்பட்டு அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடுகிறது.
எனவே இதனைத் தெரிந்துகொண்டு, காதுகளில் உள்ள கணையத்திற்கான அக்கு புள்ளிகளோடு மண்ணீரல் ஓடுபாதைகளில் உள்ள அக்குபுள்ளிகளையும் சேர்த்தே தூண்டி னால் இன்சுலின் இழப்பு தடுக்கப்பட்டு, அவை மேலும் சுரக்கப்பட்டு, சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது.
-டாக்டர். எம். முத்துகுமார், ilakkiyainfo.com

கருத்துகள் இல்லை: