வியாழன், 2 ஜனவரி, 2014

augusta west helicopters ஒப்பந்தத்தை இந்திய அரசு ரத்து செய்துள்ளது

இந்தியாவில் ஜனாதிபதி, பிரதமர், கவர்னர்கள் உள்ளிட்ட மிக முக்கிய தலைவர்கள் பயணம் செய்வதற்காக அதிநவீனமானதும், அதிகபட்ச பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டதுமான 12 அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர்களை இத்தாலிய நிறுவனமான பின்மெக்கானிக்காவிடம் இருந்து வாங்க இந்தியா கடந்த 2010–ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது. இதன் மதிப்பு ரூ.3,600 கோடி ஆகும்.
இந்த ஹெலிகாப்டர்கள் விற்பனை பேரத்தில் பின்மெக்கானிக்கா நிறுவனத்தின் துணை நிறுவனமான அகஸ்டா வெஸ்ட்லேண்ட், இந்திய விமானப்படை முன்னாள் தளபதி எஸ்.பி.தியாகி உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து ஊழல் புரிந்ததாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்நிலையில், ஒப்பந்தத்தை இந்திய அரசு ரத்து செய்யலாம் என தகவல்கள் வெளியாகின.

தற்போது அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை இந்திய அரசு ரத்து செய்துள்ளது.  மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ஏ.கே. அந்தோணி ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளார். பிரதமர் மன்மோகன் சிங்குடன் 2 மணி நேரங்களாக ஆலோசனை நடத்திய பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: