செவ்வாய், 31 டிசம்பர், 2013

லோக்சபா தேர்தல் நெருங்கி வருவதால் போலி ரேஷன் கார்டுகளை கண்டுக்காதீங்க!


சென்னை: லோக்சபா தேர்தல் நெருங்கி வருவதால், போலி ரேஷன் கார்டுகள் மீது, எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம்' என்று, துறை மேலிட உத்தரவால், அதிகாரிகள் தயங்கி வருகின்றனர்.
தமிழகத்தில், பொது வினியோக திட்டத்தின் கீழ், ரேஷன் கடைகளில், அரிசி இலவசமாகவும், சர்க்கரை, பருப்பு வகைகள், பாமாயில் உள்ளிட்ட பொருட்கள், மானிய விலையிலும் வழங்கப்படுகின்றன. தற்போது, அரிசி கார்டு, 1.84 கோடி, சர்க்கரை கார்டு, 10.49 லட்சம், போலீஸ் கார்டு, 62,354, எந்த பொருளும் வாங்காத, 'என்' கார்டு, 31,453 என, மொத்தம், 1.96 கோடி ரேஷன் கார்டுகள், புழக்கத்தில் உள்ளன. பொதுவாக, ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை, ரேஷன் கார்டு வழங்குவது வழக்கம். தற்போது, புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டு, 2005ம் ஆண்டு வழங்கப்பட்டது. அவற்றின் செல்லத்தக்க காலம், 2009ம் ஆண்டுடன் முடிவடைந்து விட்டது.  ஆயா தான் எப்படி இருக்கிறாரோ அப்படியே மக்களும் இருக்கோனுமுன்னு ஆசை.......
பழைய கார்டில், உள்தாள் ஒட்டப்பட்டு, அவற்றின் செல்லத்தக்க காலம், 2014ம் ஆண்டு டிசம்பர் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஒரு நபர், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில், ரேஷன் கார்டு வைத்திருத்தல், ஒரு குடும்பத்தில், ஒன்றுக்கு மேற்பட்ட கார்டு இருத்தல், ஆய்வுக்கு வரும் போது, வீடுகளில் இல்லாமல் இருத்தல் உள்ளிட்டவை, தகுதியற்ற, அதாவது, போலி ரேஷன் கார்டுகளாக வரையறுக்கப்பட்டு உள்ளது.


சென்னையில், உணவு வழங்கல் துறை உதவி ஆணையர்களும், மற்ற இடங்களில், வட்ட, மாவட்ட உணவு வழங்கல் அதிகாரிகளும், ரேஷன் கார்டுகளை ஆய்வு செய்து, நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சென்னை புறநகர், திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட இடங்களில், அதிகளவில் போலி ரேஷன் கார்டுகள் உள்ளதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போலி ரேஷன் கார்டு மீது, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால், உள்ளூர் ஆளுங்கட்சி பிரமுகர்கள் எதிர்ப்பதால், ஆய்வுப் பணி தடைபடுகிறது. இந்நிலையில், அடுத்த ஆண்டு, லோக்சபா தேர்தல் நடக்க உள்ளதால், போலி ரேஷன் கார்டுகள் மீதான நடவடிக்கை, ஆளுங்கட்சி மீது அதிருப்தி ஏற்படுத்தும் என, கருதப்படுகிறது. இதையடுத்து, போலி ரேஷன் கார்டுகள் மீது நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என, துறை மேலிடம், உணவு வழங்கல் அதிகாரிகளுக்கு, ரகசிய உத்தரவிட்டுள்ளது. இதனால், போலி ரேஷன் கார்டு மீது, நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயங்கி வருகின்றனர். உணவுத் துறை அதிகாரிகள் கூறுகையில், 'போலி ரேஷன் கார்டுகளால், அரசுக்கு ஆண்டு தோறும், பல கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படுகிறது. ரேஷன் கடைகளுக்கு வரும் பொதுமக்களிடம், அதிக கெடுபிடி காட்ட வேண்டாம் என, உயரதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். இதனால், என்ன செய்வது என, தெரியாமல் உள்ளோம்' என்றனர்.dinamalar.com

கருத்துகள் இல்லை: