லாகோஸ்:நைஜீரியாவில் குழந்தைகளை விற்பனை செய்வதற்காகவே செயல்பட்டு வந்த
‘குழந்தை தொழிற்சாலை’யில் இருந்து 19 கர்ப்பிணிகள் அதிரடியாக
மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நைஜீரியாவில் கடுமையான
ஏழ்மை காரணமாக அங்கு ஏராளமான குற்ற சம்பவங்கள் நடப்பதாக புள்ளி விவரங்கள்
தெரிவிக்கின்றன. நைஜீரியாவில் போதை கடத்தல் சம்பவங்களுக்கு அடுத்தபடியாக
ஆள் கடத்தல் சம்பவங்கள் அதிகளவில் நடப்பதாக அந்நாட்டு போலீசார்
தெரிவித்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக அங்கு குழந்தை விற்பனையும் படு
அமோகமாக நடக்கிறது
இதற்காகவே ஏராளமான பெண்களை கூலிக்கு அமர்த்தி,
அவர்களை கர்ப்பிணியாக்கி, ஒரே இடத்தில் தங்க வைத்து குழந்தைகளை பெற
வைக்கின்றனர். இதுபோல் குழந்தைகளை உற்பத்தி செய்யும் ‘குழந்தைகள்
தொழிற்சாலை’ குற்றங்கள் அங்கு சர்வசாதாரணமாக நடக்கின்றன.இவற்றை
தடுப்பதற்காக அந்நாட்டு போலீசாரும் படாதபாடு படுகின்றனர். அவ்வப்போது
அதிரடி சோதனை நடத்தி குழந்தை வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள புரோக்கர்களை கைது
செய்து சிறையில் அடைக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், நைஜீரியாவின் தெற்கு பகுதியில் உள்ள அபியா மாகாணத்தில் உபும்கையா என்ற இடத்தில் கர்ப்பிணி பெண்களை அடைத்து வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஜியோப்ரே ஓப்கனா கூறுகையில், அங்கு நடத்திய சோதனையில் திருமணம் ஆகாத இளம் பெண்கள் முதல் திருமணமான பெண்கள் வரை பல்வேறு வயதிலான 19 கர்ப்பிணி பெண்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர். குழந்தைகள் விற்பனைக்காகவே இவர்கள் கர்ப்பிணியாக்கப்பட்டவர்கள் என்று தெரியவந்துள்ளது.tamilmurasu.org

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக