சனி, 21 டிசம்பர், 2013

பாலுமகேந்திரா பத்திரிகையாளர்களிடம் பேசும்போது கண்கலங்கி அழத் தொடங்கிவிட்டார்.

2005ஆம் ஆண்டு தனுஷ்-பிரியாமணி நடித்த அது ஒரு கனாக்காலம் படத்தை இயக்கி இருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தலைமுறைகள் என்ற படத்தை இயக்கி முதல் முறையாக நடித்து இருக்கிறார். இப்படத்தை இயக்குனர் சசிக்குமார் தயாரித்து ஒரு காட்சியில் நடித்திருக்கிறார். படத்தின் பின்னணி இசையை இளையராஜா இசையமைத்திருக்கிறார். 
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ஈரானியன் படங்களைப் நாம் வாய் பிளந்து பார்த்தது போதும். நமது படங்களை அவர்கள் வாய்பிளந்து பார்க்கிற காலம் வரவேண்டாமா என்று ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பினார். தலைமுறைகள் என்ற இந்தப்படம் இனி தமிழ் சினிமாவுக்கு வரும் இளைய இயக்குனர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கும், அவர்களுக்காக நான் விட்டுச்செல்வது இதுதான் என்றார்.

இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு காட்சி நேற்று திரையிடப்பட்டது. அதில் பத்திரிகையாளர்களுடன் பாலுமகேந்திராவும் படத்தை பார்த்தார். படம் பார்த்து முடித்துவிட்டு வெளியே வந்த பாலுமகேந்திரா பத்திரிகையாளர்களிடம் பேசும்போது கண்கலங்கி அழத் தொடங்கிவிட்டார். 

இதுப்பற்றி அவர் கூறுகையில் இந்த தலைமுறைகள் படத்தின் கதையை நான் எனது 8 வயதிலேயே தயார் செய்துவிட்டேன். நான் சிறு வயதில் இருக்கும்போது எனக்கு பல விஷயங்களை என் அத்தை, உறவினர்கள் மற்றும் ஊர்க்காரர்கள் தான் சொல்லிக் கொடுத்தனர். அப்போது எனக்கு கிடைத்த அனுபவங்களை எல்லாம் இப்போது படமாக்கியுள்ளேன். இந்தப்படத்தில் தாத்தா பேரன் உறவு, தந்தை மகன் பாசம், தமிழ் மொழி நம்மிடையே மறந்து போவது உள்ளிட்ட பல விஷயங்களை சொல்லியிருக்கிறேன். இதையெல்லாம் இன்று திரையில் பார்க்கும்போது எனது பழைய ஞாபகங்கள் வந்துவிட்டது, அதனால் அழுதுவிட்டேன் என்று கூறினார்.cinema.nakkheeran.in/

கருத்துகள் இல்லை: