சனி, 21 டிசம்பர், 2013

கர்நாடகா : 20 பெண்களை கொன்ற ஆசிரியருக்கு தூக்குதண்டனை Cyanide Mohan Kumar...


கர்நாடகா மங்களூரு மாவட்டம் பண்ட்வால் தாலுகா கண்யானா பகுதியை சேர்ந்தவர் மோகன் குமார்(வயது 46 )இவர், 1990 முதல் கண்யானா அங்கடி அருகில், பிரைமரி பள்ளியில், தற்காலிக உடற்பயிற்சி ஆசிரியராக பணியாற்றி வந்தார். 
2003ல் வேலையை விட்ட மோகன், அதன் பின்னர், சட்ட விரோத செயல்களில் ஈடுபட துவங்கினார். பெண் களை ஏமாற்றி, பஸ் நிலைய கழிப்பறையில், சயனைடு கொடுத்து அவர்களை சாகடிப்பதை, வழக்க மாக கொண்டிருந்தார். சில பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது போல் 20 பெண்களை அவர் கொலை செய்துள்ளார். இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்ட போலீஸார், மோகனை கைது செய்தனர்.

மங்களூரு நான்காவது கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. கடந்த வாரம், அனிதா, லீலாவதி, சுனந்தா ஆகிய பெண்களை கொன்ற வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி நாயக்,   ‘’இவ்வழக்கு மிகவும் அரிதிலும் அரிதான வழக்கு. இதில், குற்றவாளிக்கு மன்னிப்பு வழங்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை. அதிக பட்ச தண்டனையான, தூக்கு தண்டனை விதிப்பதே சரியானது.
விசாரணையின் போது, தான் தவறு செய்ததற்காக அவர் வருந்தவில்லை.  பள்ளி ஆசிரியராக இருந்து கொண்டு, தன் பணிக்கு மரியாதை கொடுக்கவில்லை.

இவர் செயல் பட்ட முறையை பார்த்தால், திட்டமிட்டே கொலை செய்து திருமணமாகாத மூன்று பெண்களை கற்பழித்துள்ளார். அவர்கள் மீது பகை யுடன் திடீரென கொலை செய்யவில்லை. மோகனின் குற்றச்செயல், நீதிமன்ற துறையையும் சமூகத்தையும் அதிர்ச்சி அளிக்கிறது’’என்று தீர்ப்பளித்துள்ளார். nakkheeran.in/

கருத்துகள் இல்லை: