சனி, 21 டிசம்பர், 2013

தஞ்சையில் 700 நாட்டுப்புற கலைஞர்கள் ! சலங்கை நாதம் நிகழ்ச்சி நாளை மறுநாள்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperதஞ்சை:தஞ்சை தென்னகப் பண்பாட்டு மையத்தில் நாளை மறுநாள் (22ம் தேதி) சலங்கை நாதம்&2013 மற்றும் கைவினைப் பொருட்காட்சியை கவர்னர் ரோசய்யா தொடங்கி வைக்கிறார். இதுதொடர்பாக மைய இயக்குனர் சாஜித் கூறியதாவது:

தஞ்சையில் உள்ள தென்னகப் பண்பாட்டு மையத்தில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்களும், புதுவை, அந்தமான் நிக்கோபார், லட்சத்தீவு யூனியன் பிரதேசங்களும் உறுப்பினர்களாக உள்ளன. நாட்டுப்புற கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் நோக்கத்துடன் பல கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு கலைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் தென்னகப் பண்பாட்டு மையத்தில் சலங்கை நாதம் நிகழ்ச்சி ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும்.


வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வரக் கூடிய டிசம்பரில் சலங்கை நாதம் நிகழ்ச்சியை நடத்துவதன் மூலம் எந்தளவுக்கு வரவேற்பு உள்ளது என்று கணிக்கப்பட உள்ளது. அதற்காக இந்த வருடம் சலங்கை நாதம் மற்றும் கைவினைப் பொருட்காட்சி நாளை மறுநாள்(22ம் தேதி) மாலை தஞ்சை தென்னகப் பண்பாட்டு மையத்தில் தொடங்க உள்ளது. இதை தமிழக கவர்னர் ரோசய்யா தொடங்கி வைத்து பேசுகிறார். அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட கலெக்டர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

22ம் தேதி முதல் 31 வரை தென்னகப் பண்பாட்டு மையத்தில், தினமும் மாலை 3 மணி முதல் இரவு 9.30 மணி வரை கைவினைப் பொருட்கள் கண்காட்சியும், மாலை 6.30 மணி முதல் 9.30 மணி வரை கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. மேலும் கும்பகோணம், மன்னார்குடி, கந்தர்வக்கோட்டை, திருவெறும்பூர் போன்ற இடங்களிலும் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. இதில் 700 கலைஞர்களை கொண்ட 50க்கும் மேற்பட்ட நாட்டுப்புற மலைவாழ் மற்றும் பாரம்பரிய கலை நிகழ்ச்சி குழுவினர் கலந்து கொள்ள உள்ளனர் - tamilmurasu.org/

கருத்துகள் இல்லை: