வியாழன், 20 ஜூன், 2013

ராஜ்யசபா தேர்தல்: தி.மு.க.விற்கு பா.ம.க. ஆதரவு? நாளை தெரிவிப்போம் அன்புமணி

மேல்சபை எம்.பி. தேர்தல்: தி.மு.க.விற்கு பா.ம.க. ஆதரவு குறித்து நாளை முடிவு- அன்புமணி ராமதாஸ்தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 4 ஆயிரம் கொலை, கொள்ளை, கற்பழிப்பு என 39 ஆயிரம் வழக்குள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சினையில் கவனம் செலுத்த வேண்டிய அதிகாரிகள். பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள் 
முன்னாள் மத்திய மந்திரி அன்புமணி ராமதாஸ் சிறையில் உள்ள பா.ம.க.வினரை சந்தித்து அவர்களின் குடும்பத்துக்கு உதவிகளை வழங்கிவருகிறார். நேற்று தர்மபுரி மற்றும் மேச்சேரி பகுதிகளில் அவர் சுற்றுப் பயணம் செய்து சிறையில் உள்ள பா.ம.கவினர் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி உதவி வழங்கினார்.
இதே போல் இன்று சேலம் டவுன், வாழப்பாடி மற்றும் ஆத்தூர் பகுதிகளில் உள்ள பா.ம.க.வினர் குடும்பத்தினரை சந்தித்தார். அவர்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள், மற்றும் நிதி உதவி வழங்கினார். முன்னதாக சேலம் சிறையில் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ள பா.ம.க. இளைஞர் அணி செயலாளர் இரா. அருள், மாநகர் மாவட்ட செயலாளர் கதிர்ராசரத்தினம், அஸ்தம்பட்டி பகுதி இளைஞர் அணி துணை செயலாளர் முருகன் மற்றும் 30-க்கும் மேற்பட்ட பா.ம.க.வினரை அன்பு மணி ராமதாஸ் சந்தித்தார். 


சேலம் மத்திய சிறையில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் 32 பேர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் குண்டர் சட்டத்தில் 22 பேரும், தேசிய பாதுகாப்பு சட்டத்தில் 10 பேரும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அ.தி.மு.க. அரசால் கைது செய்யப்பட்ட அவர்கள் இன்று 52-வது நாளாக சிறையில் உள்ளனர். அவர்களை சந்தித்து ஆறுதல் கூறினேன். கைது செய்யப்பட்டு உள்ள பா.ம.க.வினர் குடும்பத்தினருக்கு நிதி உதவி, பொருள் அளிக்க உள்ளேன். இதுவரை வன்னிய சமுதாயத்தை சேர்ந்த 122 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

ஜம்மு-காஷ்மீர், தீவிரவாதிகள் நிறைந்த வடகிழக்கு மாநிலங்களில் கூட இந்த அளவிற்கு சட்டம் பாய வில்லை. தடுப்பு காவல் சட்டம் பொதுமக்களுக்கு விரோதமாக இருந்தால், கொலை, கொள்ளை, தேச துரோகம் ஆகியவற்றுக்கு தான் பொருந்தும். ஆனால் இங்கு அப்பாவிகள் மீது அந்த சட்டம் பாய்ந்து உள்ளது. அவர்கள் வன்னியர் சமுதாயத்தில் பிறந்தது தான் தவறு. எனவே நீதிமன்றம் மூலம் அனைவரையும் விடுதலை செய்வோம். கைது நடவடிக்கையில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது வழக்கு தொடருவோம்.

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 4 ஆயிரம் கொலை, கொள்ளை, கற்பழிப்பு என 39 ஆயிரம் வழக்குள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சினையில் கவனம் செலுத்த வேண்டிய அதிகாரிகள். பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள் என்றார். அப்போது நிருபர்கள் குறுக்கிட்டு, மேல்சபை தேர்தலில் உங்களது கட்சியின் செயல்பாடு என்ன என்று கேட்டனர். அதற்கு பதில் அளித்த அவர், நாளை நடைபெறும் செயற்குழுவில் முடிவு செய்யப்படும் என்றும், ஏற்கனவே கடந்த 2011-ல் ராமதாஸ் தலைமையில் நடந்த கூட்டத்தில் திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என அவர் அறிவித்து இருந்தார்.

மேல்சபை எம்.பி. தேர்தல் தொடர்பாக தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், ஜெகத்ரட்சகன் ஆகியோர் என்னை வந்து சந்தித்தனர். அவர்களிடம் எங்களது உறுதியான நிலைப்பாட்டை சொல்லி இருக்கிறோம். செயற்குழு கூட்டத்திற்கு முன்பு, நிர்வாக குழு கூட்டம் நடக்கிறது. இதில் தீர்மானம் குறித்து ஆலோசித்து செயற்குழுவில் அறிவிக்கப்படும்.

டாக்டர் ராமதாஸ் நலமுடன் உள்ளார். எல்.கே.ஜி., யு.கே.ஜி.க்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 1/2 லட்சம் வரை கல்வி கொள்ளை நடக்கிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டு மக்களுக்கு நல்ல திட்டங்களை கொண்டு வரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அவருடன் மாநில தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தமிழரசு, கார்த்தி, கண்ணையன், பசுமை தாயக மாநில துணை செயலாளர் சத்ரிய சேகர், முன்னாள் மாநில துணை பொதுச்செய

கருத்துகள் இல்லை: