சனி, 22 ஜூன், 2013

விபத்தில் காயமடைந்த ஆங்கில பெண்: சிகிச்சைக்கு பின் பிரெஞ்ச் பேசும் அதிசயம்

சிட்னி: ஆஸ்திரேலியாவில், விபத்துக்குள்ளான பெண் ஒருவர், மயக்கம்
தெளிந்ததும், தன் தாய் மொழியான ஆங்கிலத்திற்கு பதிலாக, பிரெஞ்சு மொழியில் பேசத் தொடங்கியுள்ளார். இதனால், அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.ஆஸ்திரேலியாவின், சிட்னி நகரை சேர்ந்த பெண் ஒருவர், சாலையில் நடந்து சென்ற போது, கார் மோதி வித்துக்குள்ளானார். தலையில் பலத்த காயமடைந்த அந்த பெண் சுயநினைவிழந்தார். ஒரு வாரத்துக்கு பின், நினைவு திரும்பியதால், பெண்ணின் உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். எனினும், அந்த பெண் என்ன பேசுகிறார் என, யாருக்கும் புரியவில்லை.
இது குறித்து, அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களிடம் தெரிவித்தனர். டாக்டர்கள் பரிசோதித்ததில், அப்பெண் பேசுவது ஆங்கிலம் அல்ல; பிரெஞ்சு என்பது தெரிய வந்தது. "தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், ஆங்கிலம் மறந்து போயிருக்கலாம்' என, டாக்டர்கள் தெரிவித்தனர். "பிரெஞ்சு மொழியில், சிறிதும் அறிமுகம் இல்லாத பெண், எவ்வாறு அந்தமொழியில் பேச முடியும்' என, உறவினர்கள் கேட்டதற்கு, பதில் கூற முடியாமல், டாக்டர்கள் விழி பிதுங்கியுள்ளனர். "எங்கள் அனுபவத்தில், இது போன்ற சம்பவத்தை கண்டதில்லை' என, குழப்பத்துடன் டாக்டர்கள் தெரிவித்தனர்

கருத்துகள் இல்லை: