ஞாயிறு, 26 மே, 2013

கர்நாடகாவில் மலையாள படங்கள் ரிலீஸ் இல்லை! திருட்டு சிடி தயாரிப்பு அமோகம்

சென்னை:கர்நாடகாவில் வெளியாகும் மலையாள படங்கள் தியேட்டரில்
வைத்தே திருட்டு சிடி தயாரிப்பதாக கேரளா திருட்டு விசிடி தடுப்பு பிரிவும், தயாரிப்பாளர்கள் சங்கமும் வழக்கு தொடர்ந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஒரு மாதத்துக்கு கர்நாடகாவில் மலையாள படங்கள் ரிலீஸ் நிறுத்தி வைக்கப்பட்டது.இதுபற்றி கேரளா பிலிம்சேம்பர் பொது செயலாளர் அனில் வி.தாமஸ் கூறும்போது, ‘திருட்டு சிடி தயாரிப்பவர்களுக்கு பாடம் புகட்டுவதற்காக திருட்டு விசிடி தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தியபிறகு கர்நாடகாவில் மலையாள படங்களை ரிலீஸ் செய்வதை 1 மாதம் நிறுத்தி வைக்கும் முடிவு எடுக்கப்பட்டது என்றார். திருட்டு விசிடி தடுப்பு அமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளர் சங்க பிரதிநிதியுமான அப்துல் அஜீஸ் கூறும்போது, ‘கடந்த நான்கு மாதமாகவே பெங்களூரில் உள்ள ஒரு தியேட்டரில் மலையாள படங்களின் திருட்டு விசிடி தயாரிக்கப்படுவது பற்றி கண்காணித்து வந்தோம். தியேட்டரிலேயே படம் முழுவதையும் பதிவு செய்து சிடியாக தயாரித்து படம் வெளியான 3 நாட்களில் இணைய தளங்களில் வெளியிட்டு விடுகிறார்கள் என்றார்.

கருத்துகள் இல்லை: