புதன், 29 மே, 2013

இந்தியர்களிடம்/உலகளவிலும் கடவுள், மத நம்பிக்கை குறைந்தது

உலகில் எந்த நாட்டு மக்கள் அதிகமாக கட வுள் நம்பிக்கை கொண் டிருக்கிறார்கள் என்று கடந்த 2005-ஆம் ஆண்டு ஒரு கருத்துக் கணிப்பு நடத்தப்பட் டது.
அப்போது இந்தியா முழுவதும் சுமார் 87 சதவிகிதம் பேர் கடவுள் நம்பிக்கையுடன் இருப்ப தாக தெரியவந்தது.
குறைந்தது
8 ஆண்டுகளுக்குப் பிறகு கடவுள் நம் பிக்கை பற்றி சமீபத்தில் உலகம் முழுவதும் மீண் டும் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தப்பட் டது. 51 ஆயிரத்து 927 பேரிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டன. லண் டனில் நேற்று இந்த கருத்துக் கணிப்பு முடி வுகள் வெளியிடப்பட்டன.
இதில் இந்தியர்களில் 81 சதவிகிதம் பேருக்கு கடவுள் நம்பிக்கை இருப்பது தெரியவந்தது. இதன் மூலம் இந்தியர் களிடம் கடவுள் நம் பிக்கை குறைந்து விட் டது உறுதியாகி உள் ளது. 2005-ஆம் ஆண்டு கருத்துக்கணிப்புடன் ஒப்பிடுகையில் தற் போது 6 சதவிகித இந் தியர்கள் கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர் கள் பட்டியலில் சேர்ந் துள்ளனர்.
சீனா முதலிடம்
ஒட்டு மொத்த இந்தி யாவில் கணக்கிட்டால் 81 சதவிகிதம் பேர் கடவுள் நம்பிக்கையுட னும் 13 சதவிகிதம் பேர் மத ஈடுபாடு இல்லாம லும், 3 சதவிகிதம் பேர் கடவுள் நம்பிக்கை இல் லாதவர்களாகவும் உள் ளனர். நமது அண்டை நாடான சீனா, கடவுள் நம்பிக்கை இல்லாதவர் கள் பட்டியலில் முதலி டத்தில் உள்ளது. அங்கு 48 சதவிகிதம் பேருக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது.
சீனாவில் 14 சதவிகித மக்களே கடவுள் நம்பிக் கையுடன் உள்ளனர். அது போல ஜப்பானில் 16 சதவிகித மக்களே கடவுள் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.
இந்த வரிசையில் செக் குடியரசு 20 சதவி கிதம், பிரான்சு 37 சதவிகிதம், தென் கொரியா 52 சதவிகிதம் நாடுகள் அடுத்தடுத்த நிலையில் உள்ளன.
பாகிஸ்தான்
உலக அளவில் பாகிஸ்தானில் கடவுள் நம்பிக்கையுடன் அதிக மக்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த 2005-ஆம் ஆண்டு கணக்கெடுப்புடன் ஒப்பிடும் போது பாகிஸ்தானில் தற்போது 6 சதவிகிதம் பேர் கடவுள் நம்பிக்கை இருப்பவர் கள் பட்டியலில் சேர்ந் துள்ளனர்.
ஆனாலும் நாத்திக அமைப்புகளும் முஸ் லிம் நாடுகளில் தோன்றிட ஆரம்பித்துள்ளன.

கருத்துகள் இல்லை: