செவ்வாய், 28 மே, 2013

பெண்களை தேடி கெஞ்சும் குஜராத்தி ஆண்கள் ! பெண் சிசு Abortion விளைவு


பெண் சிசுக் கொலையின் தாக்கத்தால், இந்தியாவில் ஆண்-பெண் விகிதாச்சாரம் பாதிக்கப்பட்டு வருவதை குஜராத்தில் உள்ள ஒரு வெளிச்சமாக்கியுள்ளது. அங்குள்ள ஆண்களுக்குப் பெண் கிடைக்காமல் தவித்து வருகின்றனராம். பெண் கிடைக்காமல் 300க்கும் மேற்பட்ட ஆண்கள் தவித்து வருகின்றனர். தென்னிந்தியாவில் ஆண் பெண் விகிதாச்சாரம் அதிகரித்து சமநிலையை எட்டியுள்ள நிலையில், வட இந்தியாவின் பல மாநிலங்களில் இது தலை கீழாக உள்ளது. கடந்த 2001ம் கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் மக்கள் தொகையில் 1000 ஆண்களுக்கு 933 பெண்கள் என இருந்தது.
ஆனால், 2011ம் ஆண்டு எடுக்க கணக்கெடுப்பின்படி அதுமேலும் குறைந்து 1,000 ஆண்களுக்கு 914 பெண்கள் என்ற நிலையை எட்டியுள்ளது. இந்தியாவில் கேரளா, மணிப்பூர் உள்ளிட்ட சில மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்களில் பெண்களின் எண்ணிக்கை குறைவாகவே காணப்படுகிறது இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் சியானி என்ற கிராமத்தில் திருமணம் செய்ய பெண்கள் கிடைக்காமல் ஆண்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். விவசாய கிராமமான இந்த பகுதியில் திருமணம் செய்து கொள்ள பல ஆண்டுகளாக பெண் பார்த்தும், கிடைக்காமல் தவிக்கும் ஆண்கள் அதிகம்.
இதில் 24க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண் துணை இல்லாமல் ஒரே இடத்தில் வசித்து வருகின்றனர். சியானி கிராமத்தில் இதேபோல திருமணம் செய்யாமல், பெண் கிடைக்க காத்திருந்து 35 வயதை கடந்தவர்கள 350க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். பெண் கிடைக்காமல் துக்கப்பட்டு திரிந்த வாலிபர்கள் தற்போது ஒரு கூட்டணி அமைத்து ஒரு குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர்.

அங்கு சமையல், வீட்டை சுத்தம் செய்வது, துவைப்பது என பெண்களின் அனைத்து பணிகளையும் ஆண்களே செய்து கொள்கின்றனர். இந்த பிரம்மசாரிகள் காலையில் வேலைக்கு சென்று, மாலையில் தங்கள் இடத்தில் கூடி சேர்ந்து தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்கின்றனர். இந்த கிராமத்தில் உள்ள ஒரு டீக்கடை இதற்கு பெரும் உதவியாக உள்ளது.
படிப்பறிவு மற்றும் பொருளாதார குறைவு காரணமாக, இருக்கின்ற சில பெண்களும் இந்த கிராம வாலிபர்களை மணக்க மறுக்கின்றனராம். ஒரு சில சிறிய தொழிற்சாலைகளை மட்டுமே கொண்ட இந்த கிராமத்தில் அதிக வசதியும் இல்லை. இதனால் வாலிபர்களுக்கு யாரும் பெண் கொடுப்பதில்லை.
இந்த கிராமத்தில் திருமணம் செய்ய விரும்பும் பெண்கள், ஆண்களின் சம்பாதிப்பு திறன், கிராமத்தில் அவரது மதிப்பு, சொத்து, உடல் திறன் என பல காரியங்களை பார்த்து திருப்தியடைந்தால் மட்டுமே திருமணத்திற்கு ஒத்து கொள்கின்றனர். இதனால் பலருக்கு பெண் கிடைப்பதில்லை.
இதுகுறித்து பெண் கிடைக்காமல் தவிக்கும் விவசாயி ஒருவர் கூறியதாவது, எனக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பெண் பார்த்து வருகின்றனர். தற்போது எனக்கு 45 வயதாகிவிட்டது. ஆனால் இதுவரை ஒரு பெண் கூட திருமணம் செய்து கொள்ள கிடைக்கவில்லை, என்றார்.
இன்னொருவர் கூறுகையில், இந்த கிராமத்தில் வேலை இல்லை என வெளியூர் சென்ற போது, அங்கே ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து கொண்டேன். இங்கேயே இருந்திருந்தால், எனக்கும் திருமணமாகி இருக்காது, என்றார்.
இந்த கிராமத்தின் நிலையை பார்க்கும் போது, வருங்காலத்தில் பெண் வீட்டாருக்கு ஆண்கள் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்து கொள்ள வேண்டிய நிலை ஏற்படுமா என்ற சந்தேகம் உருவாகி உள்ளது.

1 கருத்து:

திவ்யா சொன்னது…

House wife போல House husband ஆக இருக்க சம்மதித்து வீட்டு வேலை செய்து ,மனைவி க்கு அடங்கிய கண்வனாக செயல்பட்டால் திருமணம் செய்யத் தயார் . by திவ்யா