விதை விதைத்திருக்கிறேன்.. வெயிட் பண்ணுங்க:
:
மதுரையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் துரோகிகளைப் பற்றி நீண்ட நேரம் பேசி
மத்திய அமைச்சர் மு.க. அழகிரி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். இந்தப்
பேச்சு பற்றி கூறுகையில், விதை விதைத்திருக்கிறேன்.. பொறுத்திருந்து
பாருங்கள்" என்றும் அழகிரி சஸ்பென்ஸ் வைத்திருக்கிறார்.பின்னர் மதுரை செல்லூரில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏ. சவுந்திரபாண்டியன் வீட்டுக்குச் சென்ற மு.க. அழகிரி, சவுந்திரபாண்டியனின் தாயார் நாகம்மாள் மறைவுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
அங்கிருந்து வெளியே வந்த அழகிரியிடம் மதுரை 'துரோகிகள்' பற்றிய பேச்சு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். "இப்போது தான் விதை விதைத்துள்ளேன். பொறுத்திருந்து பாருங்கள்" என்று சஸ்பென்ஸ் வைத்துவிட்டு கூறிச் சென்றார் அழகிரி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக