ஞாயிறு, 15 ஜூலை, 2012

பரபரப்புக்காக டிவி நிருபர் செய்த வேலையா?

 Guwahati Molestation Two More Arrested Si Suspended

அசாம் இளம்பெண்ண சிகரெட்டால் சுட்டுக் கொடூரம்: பரபரப்புக்காக டிவி நிருபர் செய்த வேலையா?

கவுகாத்தி: அசாம் தலைநகர் கவுகாத்தியில் 20-க்கும் மேற்பட்ட குடிகார கும்பல் ஒன்றிடம் இளம்பெண் சிக்கி சீரழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தேசிய பெண்கள் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
அசாமில்
டெல்லியில் இருந்து சனிக்கிழமையன்று கவுகாத்தி வந்த பெண்கள் ஆணையக் குழு அந்த இளம்பெண்ணை நேரில் சென்று சந்தித்தது. குடிகார கும்பலில் இருந்த காட்டுமிராண்டி ஒருவன் அந்த பெண்ணை சிகரெட்டால் சுட்டு காயப்படுத்தியதும் தற்போது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த பெண்கள் ஆணைய உறுப்பினர் அல்கா லம்பா, இளம்பெண்ணின் உடல் சிகரெட்டால் சுட்ட காயங்கள் இருப்பதை கண்கூடாக பார்த்தோம். அப்பெண்ணின் உடல்நலம் குறித்த மருத்துவ அறிக்கையைக் கேட்டிருக்கிறோம். அடுத்த 10 அல்லது 15 நாட்களுக்குள் தேசிய பெண்கள் ஆணையத் தலைவரிடம் இச்சம்பவம் தொடர்பான அறிக்கையை அளிப்போம் என்றார் அவர்.
குடிகார கும்பலை உருவாக்கியது நிருபர்?
மேலும், தாம் தாக்கப்பட்ட போது படம் பிடித்துக் கொண்டிருந்த உள்ளூர் சேனலின் கேமரா குழுவினரிடம் எவ்வளவோ கெஞ்சியும் தம்மை காப்பாற்ற அவர்கள் முயற்சிக்கவில்லை என்றும் அப்பெண் கூறியதாக அல்கா லம்பா கூறியுள்ளார்.
இதனால் இச்சம்பவமே உள்ளூர் சேனல் நிருபரின் செட்டப்பாக இருக்கலாமோ என்று சந்தேகிக்கப்படுகிறது. அசாம் மாநில சமூக ஆர்வலரான அகில் கோகயும் இதேபோல் ஒரு குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார். இளம்பெண் தாக்கப்படுவது பற்றிய ஒரிஜினல் வீடியோ காட்சியில் அக்கும்பலோடு லோக்கல் சேனல் நிருபரும் அமர்ந்திருப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதுவும் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் இருவர் கைது
இதனிடையே இந்த வழக்கில் மேலும் இருவரை கைது செய்துள்ளதாக கவுகாத்தி போலீசா தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் சர்ச்சைக்குரிய டிவி நிருபரிடம் விசாரணை நடத்தப்படும் என்றும் தேவைப்பட்டால் ஒரிஜினல் வீடியோ காட்சியையும் பரிசீலிப்போம் என்றும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
சம்பவம் நடந்த மறுநாளே 4 பேர் கைது செய்யப்பட்டனர். இருப்பினும் ஒட்டுமொத்த கும்பலையும் 48 மணி நேரத்துக்குள் கைது செய்ய வேண்டும் என்று அசாம் முதல்வர் தருண் கோகய் கெடுவிதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் சம்பவ இடத்துக்கு 45 நிமிட தாமதமாக சென்ற அப்பகுதியைச் சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்

கருத்துகள் இல்லை: