வியாழன், 19 ஜூலை, 2012

LIC:வாரத்தில் ஒரு நாள் இந்தியில் கையெழுத்து

தமிழகம் உட்பட தென் மாநிலங்களில், இந்தி மொழியில் கடிதத் தொடர்பு குறைந்து வருவதால், "அனைத்து ஊழியர்களும், வாரத்தில் ஒரு நாள், இந்தியில் கையெழுத்திட வேண்டும்' என, ஆயுள் காப்பீட்டு கழகம் கண்டிப்பாக உத்தரவிட்டுள்ளது.ஆயுள் காப்பீட்டுக் கழக, தென்மண்டல மேலாளர் (மனிதவள மேம்பாடு) அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:"தென்மண்டலத்தில் இருந்து அனுப்பப்படும் கடிதப் போக்குவரத்து, இந்தியில் குறைவாக இருக்கிறது. அதை அதிகரிக்க வேண்டும். இதற்காக, அனைத்து அலுவலர்களும், ஊழியர்களும் வாரத்தில் ஒரு நாள், குறிப்பாக, திங்கள் கிழமைகளில், இந்தியில் கையெழுத்திட வேண்டும்; கடிதங்கள் மற்றும் தகவல்களில் இந்தியில் கையெழுத்திட்டு, இந்தி மொழி தொடர்பு அதிகரிக்க ஒத்துழைக்க வேண்டும்.'இவ்வாறு, சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கை, "அதிக முக்கியத்துவம்' என்ற தலைப்பிட்டு, அனுப்பப்பட்டுள்ளது.இந்தி மொழியில் கையெழுத்திடுவதை, வலியுறுத்துவது தொடர்பாக, ஜூன் 29ம் தேதி, அலுவலக மொழி நடைமுறைப்படுத்துதல் கூட்டம், மண்டல அளவில் நடந்தது. அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- நமது சிறப்பு நிருபர் -

கருத்துகள் இல்லை: