ஞாயிறு, 15 ஜூலை, 2012

அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வுக்கு அமைச்சர் பதில் அளிப்பாரா?

சென்னை: ""கோவையில் நுழைய விடாமல் தடுத்த, அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ.,வுக்கு, அமைச்சர் முனுசாமி முதலில் பதில் சொல்ல வேண்டும்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவர், நேற்று வெளியிட்ட அறிக்கை: அம்பத்தூர் பகுதியில், குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுவதாகவும், ஒரு குடம் தண்ணீர், ஐந்து ரூபாய்க்கு விற்பனையாகிறது என்றும், பத்திரிகையில் செய்தி வெளியாகியிருந்தது.
மக்கள் அறிவார்கள்: அதுகுறித்து, அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என, நான் கேட்டேன். பத்திரிகை செய்திக்கு பதில் கூறாமல், அமைச்சர் முனுசாமி என்னை விமர்சிக்கிறார். எனக்கு பதில் சொல்வதை விட, கோவைக்கு சென்ற அவரை நுழைய விடாமல் தடுத்த, அவர் கட்சியின் எம்.எல்.ஏ., வுக்கு, முதலில் பதில் சொல்ல வேண்டும்.
இலங்கை வீரர்களுக்கு, தமிழகத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது என்றால், அதைத் தடுக்க மத்திய அரசை கேட்காமல், என் மீது தாக்குதல் நடத்துகிறார் முதல்வர் ஜெயலலிதா. இலங்கைத் தமிழர்களுக்கு, தி.மு.க., ஆட்சியில் என்ன செய்தார்கள் என்பதை, மக்கள் அறிவார்கள். இவற்றையெல்லாம் அறிந்துகொண்டு, பண்பார்ந்த முறையில் விளக்கம் அளிக்க, ஜெயலலிதா கற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.

பரிந்துரை இல்லை: கருணாநிதி நேற்று அளித்த பேட்டியில், ""துணை ஜனாதிபதி வேட்பாளராக, அன்சாரியையே காங்கிரஸ் அறிவிக்கும் என எதிர்பார்க்கிறேன். துணை ஜனாதிபதி தேர்தலுக்கு, நாங்கள் யாரையும் பரிந்துரை செய்யவில்லை. டெசோ மாநாடு, ஆகஸ்ட் 12ம் தேதி, சென்னை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நடக்கவுள்ளது'' எனத் தெரிவித்துள்ளா

கருத்துகள் இல்லை: