செவ்வாய், 22 மே, 2012

Naveen Jeyalalitha வேண்டுகோளை ஏற்று சங்மாவை ஆதரி்க்கும் பாஜக?

 President Poll Bjp Discusses Pa Sangma Candidature
டெல்லி:  குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் லோக்சபா சபாநாயகர் பி.ஏ.சங்மாவை ஆதரிக்குமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டதையடுத்து அவரை ஆதரிப்பது குறித்து பாஜக ஆலோசித்து வருகிறது.
குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் லோக்சபா சபாநாயகர் பி.ஏ.சங்மா தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார். அதன் பிறகு சங்மாவை ஆதரிக்குமாறு ஜெயலலிதா பாஜக தலைவர் அத்வானி, சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ், சிபிஎம் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், சிபிஐ தலைவர் ஏபி பர்தன், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, ஷிரோமணி அகாலி தளம் தலைவர் மற்றும் பஞ்சாப் முதல்வர் பர்காஷ் சிங் பாதல் ஆகியோரிடம் நேற்று தொலைபேசி மூலம் கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து சங்மாவை ஆதரிப்பது குறித்து பாஜக மேலிடம் கூடிப் பேசியது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள கட்சிகளிடம் கலந்தாலோசித்த பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. முதல்வர் ஜெயலலிதாவின் வேண்டுகோளை ஏற்றே பாஜக சங்மாவை ஆதரிப்பது குறித்து ஆலோசித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சங்மா மலைவாழ் மக்கள் இனத்தைச் சேர்ந்தவர். இந்தியா சுதந்திரம் அடைந்து இதுவரை மலைவாழ் இனத்தைச் சேர்ந்த ஒருவர் இதுவரை குடியரசுத் தலைவர் ஆனதில்லை. இந்நிலையில் ஜெயலலிதா சங்மாவுக்கு ஆதரவு திரட்டுவது முக்கியத்துவம் பெறுகிறது. சங்மாவுக்கு ஆதரவளிப்பதாக ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக்கும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியும் அறிவித்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சி மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி உள்ளிட்ட சிலரில் யாரை குடியரசுத் தலைவர் வேட்பாளர் ஆக்குவது என்று ஆலோசித்து வருகிறது.

முன்னதாக பாஜக முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை மீண்டும் குடியரசுத் தலைவர் ஆக்குவது என்று முடிவு செய்தது. ஆனால் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டால் சரி தேர்தல் என்றால் வேண்டாம் என்று கலாம் தெரிவித்துவி்ட்டார். மேலும் பாஜக தலைவர்கள் சிலரும் கலாமுக்கு எதிராகத் திரும்பினர். இந்நிலையில் தான் சங்மாவை ஆதரிக்கலாமா என்று பாஜக ஆலோசித்து வருகிறது.

கருத்துகள் இல்லை: