செவ்வாய், 22 மே, 2012

Bajaj முதலிடம் உலகின் லாபகரமான வாகன தயாரிப்பு நிறுவனங்களில்

நாட்டின் இரண்டாவது பெரிய இரு சக்கர வாகன தயாரிப்பாளரான பஜாஜ் ஆட்டோதான் உலகின் அதிக லாபகரமான வாகன தயாரிப்பு நிறுவனம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
கடந்த 2011-12ம் நிதியாண்டில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ரூ.20,000 கோடிக்கு வர்த்தகம் செய்துள்ளது. இதில், வரி மற்றும் வட்டி நீங்கலாக அந்த நிறுவனம் ரூ.4,000 கோடியை லாபமாக ஈட்டியுள்ளது.
இது 20.2 சதவீதம் வளர்ச்சியாக பதிவானது. இதனால், உலகிலேயே அதிக லாபகரமான வாகன தயாரிப்பு நிறுவனம் என்ற பெருமையை பஜாஜ் ஆட்டோ பெற்றுள்ளது.

இதுதவிர, டைம்ஸ் ஆப் இந்தியா குழுமத்தின் வர்த்தகப் பிரிவு நாளிதழான எக்கனாமிக் டைம்ஸ் இதழ் பஜாஜ் ஆட்டோவுக்கு இந்த ஆண்டின் சிறந்த நிறுவனம் என்ற பெருமைக்குரிய விருதையும் வழங்கி கவுரவித்துள்ளது.
கடந்த நிதி ஆண்டில் மட்டும் 38 லட்சம் வாகனங்களை பஜாஜ் ஆட்டோ விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் கிடைத்த லாபத்தை பிற நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது இருமடங்கு அதிகம்.

மொத்த இருசக்கர வாகன ஏற்றுமதியில் பஜாஜ் ஆட்டோதான் தற்போது முன்னிலை வகிக்கிறது. 36 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பஜாஜ் ஆட்டோ 12 நாடுகளின் மார்க்கெட்டில் விற்பனையில் முதலிடம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: