வியாழன், 12 ஜனவரி, 2012

நக்கீரன் to ADMK:Why டி கொலை வெறி

எதை நடத்தவேண்டும் என்று நினைத்ததோ அதை நடத்த ஆரம்பித்துவிட்டது ஜெ.அரசு. கடந்த 7-1-12 சனிக்கிழமையன்று காலையில் வெளியான நக்கீரன் இதழைத் தமிழகத்தின் பல
பகுதிகளிலும், மேலிட உத்தரவுப்படி அ.தி.மு.க.வினர் பறிமுதல் செய்து, தீ வைத்துக் கொளுத்த ஆரம்பித்தனர்.
""ஜெ.''வை பற்றிய தகவலுடன் கவர் ஸ்டோரி வெளியாகியிருந்தது. ஜெயலலிதாவின் படத்துடன் வெளியாகியிருந்த இந்த இதழைத்தான் அ.தி.மு.க.வினர் கொளுத்திக் கொண்டிருந் தனர்.
இந்நிலையில், காலை 10.50 மணியளவில் நக்கீரன் அலுவலகத்தில் ஆசிரியர் குழுவினரின் ஆலோசனைக் கூட்டம் வழக்கம்போல் நடை பெற்றுக் கொண்டிருந்தது. ஆசிரியர், இணையாசிரியர், நக்கீரன் ஆசிரியர் குழுவினர் உள்ளிட்டோர் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர். நக்கீரன் அலுவலகத்தின் மற்ற பிரிவுகளின் ஊழியர்களும் முழுமையான அளவில் பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த நேரத்தில், திடீரென ஒரு கும்பல் பெரும் சத்தத்துடனும் அருவருக்கத்தக்க வார்த்தைகளுடனும் கையில் உருட்டுக் கட்டை, பாறாங்கல், சோடாபாட்டில் ஆகியவற்றுடன் நக்கீரன் அலுவலகத்தின் வாசல்கதவைத் தாண்டி உள்ளே நுழைந்தது. அ.தி.மு.க கரைவேட்டி, சட்டைப் பாக்கெட்டில் ஜெயலலிதா படம் வைத்திருந்த அந்த கும்பல் ஆவேசம் காட்டத் தொடங்கியது.
பாதுகாவலர் (செக்யூரிட்டி) சிவக்குமாரை கடுமையாகத் தாக்கி கீழே தள்ளிவிட்டு, உள்ளே வந்த அந்த கும்பல், அங்கிருந்த வாகனங்களை அடித்து நொறுக்க ஆரம்பித்தது. ஆசிரியர், இணையாசிரியர், மேலாண் நிர்வாகி ஆகியோரின் கார்கள் நொறுக்கப்பட்டதுடன், அலுவலகத்திலிருந்த ஜன்னல் கண்ணாடிகளையும் அந்தக் கும்பல் கல் வீசி நொறுக்கியது. கணினி அறையிலும், பைண்டிங் செக்ஷனிலும் இருந்த பொருட்கள் இந்தக் கல்வீச்சில் பலத்த சேதமடைந்தன. கணினி ஆபரேட்டர் அன்புமணியும் காயமடைந்தார்.
திடீர்த் தாக்குதலைப் பார்த்த நக்கீரன் ஊழியர்கள், வேகமாக வெளியே வர, அவர்களைப் பார்த்ததும் அந்த கும்பல் ஓடியது. நக்கீரன் அலுவலகத்தின் ஷட்டர்களை இழுத்து மூடிய ஊழியர்கள், அதன்பின் வாசல் கதவையும் மூடினர். வெளியே ஓடிய கும்பல், அங்கே ஏற்கனவே திரண்டிருந்த அ.தி.மு.க.வினருடன் சேர்ந்து, நக்கீரனுக்கு எதிராக சத்தம் போட்டபடி, பெரிய பெரிய கற்களை எடுத்து, வாசல் கதவைத் தாண்டி விழும்படி வீசியது. இதில் வாகனங்களும் ஜன்னல் கண்ணாடிகளும் தொடர்ந்து சேதமடைந்தன.
அச்சில் இயற்ற முடியாத காது கூசும் வார்த்தைகளால் அ.தி.மு.க மகளிரணியைச் சேர்ந்தவர்களும் சத்தம்போட்டபடியே கற்களை வீசினர். நக்கீரன் அலுவலகம் தாக்கப்படுவது குறித்து தகவலைத் தெரிவித்து, பாதுகாப்பு கோருவதற்காக டி.ஜி.பி. ராமானுஜத்தைத் தொடர்புகொள்ள தொடர்ச்சியாக முயற்சித்த போது அவர் கிடைக்கவில்லை.

இதையடுத்து, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் திரிபாதியைத் தொடர்புகொண்டு, தாக்குதலையும் நக்கீரன் அலுவலக ஊழியர்களின் உயிருக்கு ஆபத்து ஏற் பட்டிருக்கிற நிலைமையையும் விளக்கியபோது, ச்ர்ழ்ஸ்ரீங் அனுப்பு கிறோம் என்று சொன்னார் கமிஷனர்.
க்கீரன் அலுவலகம் அமைந்துள்ள ராயப் பேட்டை ஜானிஜான்கான் ரோடு முழுவதும் பதட்டமும் பரபரப்பும் நிலவியது. அங்கு குடியிருக்கும் பொதுமக்கள் தங்கள் வீட்டுக் கதவுகளை மூடிக்கொண்டு, ஜன்னல் வழியாகவும் மொட்டை மாடியில் ஏறி நின்றும், நக்கீரன் அலுவலகம் மீது அ.தி.மு.க.வினர் தொடர்ச்சி யாகப் பெரிய பெரிய கற்களையும் சோடா பாட்டில்களையும் வீசுவதைக் கவனித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பத்திரிகை- தொலைக்காட்சி மீடியாக் கள் பாதுகாப்பான இடத்தில் நின்றபடி அ.தி.மு.கவினரின் அராஜகத் தையும் வன்முறையையும் பதிவு செய்துகொண்டிருந்தனர்.

போலீஸ் கமிஷனரிடம் தொடர்ந்து வலியுறுத்தியும், ஜாம்பஜார் காவல் நிலைய ஆய்வாளரிடம் புகார் கொடுத்தும், போலீஸ் படை வரு வதற்குத் தாமதமானது. வந்த போலீ சாரும், பாறாங்கல் மற்றும் சோடாபாட்டில்களை வீசும் அ.தி. மு.க.வினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டே இருந்தனர்.

அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஆண்களும் பெண்களுமாக கையில் இருந்த கற்களையும் கொண்டு வந்த சோடா பாட்டில்களையும் வீசி முடித்தபிறகு சாவதானமாகக் கலைந்து செல்ல, போலீஸ் அவர்களை வேடிக்கை பார்த்தபடியே இருந்தது.
தக் கும்பல் சென்றபிறகு, துவம்சம் செய்யப்பட்ட நக்கீரன் அலுவலகத்தை பத்திரிகை-தொலைக்காட்சி செய்தியாளர்கள் கவரேஜ் செய்ததுடன், ஆசிரியரின் கருத்தையும் கேட்டுப் பதிவு செய்தனர்.
"வெளியிட்டுள்ள செய்தியில் மாற்றுக்கருத்து இருந்தால் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்கலாம். அவற்றை எதிர்கொள்ள நக்கீரன் தயாராகவே இருக்கிறது. ஆனால், அ.தி.மு.க எப் போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போ தெல்லாம் நக்கீரன் குறிவைத்துத் தாக்கப்படுகிறது'' என்று விவரித்துக்கொண்டிருக்கும்போதே, அ.தி.மு.க.வினரின் இன்னொரு கும்பல் கற்களுடனும் கட்டைகளுடனும் வந்து கடும் தாக்குதலை நடத்தியது.
பத்திரிகை-தொலைக்காட்சி செய்தியாளர்களும் கேமராமேன்களும் அலுவலக வளாகத்திற்குள் சிக்கிக்கொண்டார்கள். அ.தி.மு.க வன்முறையாளர்கள் வீசிய கற்கள் அவர்களையும் குறிவைத்துப் பாய, உயிர்ப்பயத்துடன் நக்கீரன் வளாகத்திற்குள்ளேயே அவர்கள் பதுங்கிக்கொண்டனர். வெளியிலிருந்து கற்களும் கட்டைகளும் பறந்து வந்தபடியே இருந்தன. கமிஷனரை மறுபடியும் தொடர்புகொண்டோம். எர்ழ்ஸ்ரீங் அனுப்புகிறோம் என்ற பதிலையே மீண்டும் மீண்டும் சொன்னார்.
நக்கீரன் வளாகத்திற்குள் சிக்கியிருந்த பத்திரிகை சகோதரர்கள், பக்கத்து காம்பவுண்டு வழியாகத் தாவிக் குதிக்கத் தொடங்கினார். இது அவர்களுக்கு ஆபத்தை உண்டாக்கலாம் என்று பயந்த நாம், உள்ளே சிக்கியிருக்கும் மீதி பத்திரிகையாளர்களை பத்திரமாக வெளியேற்ற வேண்டும் என்பதால், பாதுகாப்பு என்ற பெயரில் அ.தி.மு.க.வினரின் செயலுக்கு மவுனசாட்சியாக நின்றிருந்த போலீசாரிடம் தகவல் தெரிவித்தோம். சில நிமிடங்கள் கல்வீச்சு நின்றது. வாசல் கதவை லேசா திறந்து, பத்திரிகை சகோதரர்களை பத்திரமாக வெளியே அனுப்பினோம். அவர்கள் வெளியேறிய அடுத்த நொடி, மீண்டும் கல்வீச்சும் அதிகமானது; அருவருக்கத்தக்க சத்தங்களும் அதிகமாயின. ஒரு சில ரவுடிகள், உயரமான வாசல் கதவின் மேல் ஏறி நின்று கல்வீசினர். அவர்கள் எப்போது வேண்டுமானாலும் உள்ளே குதித்து, நக்கீரன் ஊழியர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கலாம் என்ற பதட்டம் நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்துக்கொண்டே இருந்தது.

அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கற்பகம், ஆயிரம் விளக்கு இளவரசன், அஞ்சுலட்சுமி, சின்னையா, ஆறுமுகம், அண்ணா தொழிற்சங்க நிர்வாகி அர்ச்சுனன் உள்ளிட்டோர் தலைமையில் ஒவ்வொரு கும்பலாக வந்து, நக்கீரன் அலுவலகத்தின் மீது கொடூரத் தாக்குதலைத் தொடர்ந்தபடியே இருந்தது. அலுவலக அறைக்குள் கற்கள் உருண்டன. கண்ணாடி சில்லுகள், அலுவலகம் முழுவதும் சிதறின. உள்ளே இருந்த ஊழியர்கள் மனதைரியத்தையே ஆயுதமாகவும் கவசமாகவும் கொண்டி ருந்தனர்.

நக்கீரன் அலுவலகம் அமைந்திருக்கும் சாலை முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மக்கள் அச்சத்துடனேயே வீட்டுக்குள் இருக்க வேண்டியதாயிற்று. புதிதாக வந்திறங்கிய போலீஸ் படையோ, எல்லா வாகனங்களையும் சாலையின் முனையிலேயே தடுத்துநிறுத்திவிட்டு, அ.தி.மு.க கொடி போட்ட வாகனங்களை மட்டும் நக்கீரன் அலுவலகம் நோக்கி வழிகாட்டி அனுப்பி வைத்துக் கொண்டிருந்தது.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ கலைராஜன் ஜாம்பஜார் போலீஸ் ஸ்டேஷனில் உட்கார்ந்துகொண்டு, ஒவ்வொரு குரூப் புக்கும் எப்போது தாக்குதல் நடத்த வேண்டும் என்று டைம்டேபிள் போட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தார். அதன்படி, ஒவ்வொரு கும்பலாக வந்து தாக்கியபடியே இருந்தது. கல்வீசிய யாரையும் ஆரம்பத்தில் தடுக்காத போலீஸ், கும்பலின் வெறியாட்ட வேகம் குறையும்போது, ""போதும்... போதும் தம்பி... போங்க... போங்க... மத்தவங்க பார்த்துக்குவாங்க தம்பி'' என்று சொல்லி, தங்களுடைய வாகனத்தில் ஏற்றி சிறிது தூரம் கொண்டு சென்று இறக்கிவிட்டது.

நக்கீரன் அலுவலகத்திற்கு தனது படையோடு வந்த வேளச்சேரி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அசோக், அலு வலகத்தின் வாசல்கதவின் வெளிப்பக்கம் பூட்டு போட்டுவிட்டார். உள்ளே இருப்பவர்கள் எந்த சூழ்நிலையிலும் தப்பித்துவிடக்கூடாது என்ற கொலை வெறியோடு அசோக்கின் ஆட்கள் கற்களையும் கட்டைகளையும் வீசினர். பெட்ரோல் குண்டு வீசக்கூடும் என்ற பதட்டமும் நிலவியது. கைவலிக்க கற்களை வீசி ஓய்ந்த அசோக்கும் அவரது கும்பலும், ஜெ. படம் போட்ட நக்கீரன் இதழ்களைக் கொளுத்தி, ஆபாச கோஷங்களைப் போட, அவர்களையும் பத்திரமாக வேனில் ஏற்றி அனுப்பிவைத்தது காவல்துறை. அதன்பிறகு, அசோக் போட்ட பூட்டை உடைத்தது.

அ.தி.மு.க.வின் நிர்வாகிகள் தரவரிசை யில் அதன் பொதுச்செயலாளரான ஜெ.வை விடவும் உயர்ந்தவரான அவைத்தலைவர் மதுசூதனன் தன்னுடைய ஆட்களுடன் நக்கீரன் அலுவலகம் முன் வர, மீண்டும் பதட்டம் அதிகமானது. நக்கீரன் இதழ்களைக் கொளுத்தியும் அருவருக்கத்தக்க சத்தம் போட்டும் அவரது ஆட் கள் ஆர்ப்பாட்டம் செய் தனர். பேட்டி என்ற பெய ரில் செய்தியாளர்களிடம் பேசிய மதுசூதனன், ""நக்கீரன் பத்திரிகையைத் தடைசெய்து, நாட்டை விட்டே வெளி யேற்ற வேண்டும்'' என்று வெறிக்குரலில் சொன்னார்.
காலை 10.50 மணிக்குத் தொடங்கிய தாக்குதல், அணிஅணியாக மாலை 4.30 மணி வரை தொடர்ந்தது. அதன்பிறகும் பதட்டம் தணியவில்லை. நக்கீரன் அலுவலகம் அமைந்துள்ள சாலையின் இரு முனைகளிலும் ஆயுதங்களோடு அ.தி.மு.க.வினர் குவிந்திருந்தனர். பெயரளவுக்கு போலீசார் பாதுகாப்பில் நிற்க, நக்கீரன் ஊழியர்கள் பலரும் அலுவலகத்திற்குள்ளேயே மின்சார வசதியின்றி அடைந்துகிடந்தனர். அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ள இணையாசிரி யரின் வீட்டின் மீது அ.தி.மு.க.வினர் கும்பலாக வந்து கல்வீசி, ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தனர். மதியம்- இரவு என இரண்டு, மூன்று அணிகளாக வந்த இந்த கும்பல் அடுத்தடுத்து தாக்குதல் நடத்திய துடன், அந்தக் குடியிருப்புவாசி களின் கார்களையும் உடைத்து விட்டு, ஆபாசமான வார்த்தை களால் சத்தம் போட்டு விட்டுச் சென்றது.

மறுநாள் (ஜன.8) ஞாயிறன்றும் பதட்டம் நீடித்தது. சின்னச் சின்னப் பெட்டிக் கடைகளிலும் ஜெ. ஆட் களின் மிரட்டல் குரல் ஒலித்தது. "நக்கீரன் புக்கை வித்தீன்னா, நீ வியாபாரமே பண்ண முடியாது' என்று சொல்லி, அங்கு இருந்த புத்தகங்களை கிழித்தெறிந்தனர். அலுவலகம் உள்ள சாலையிலும் அ.தி. மு.க.வினரின் நட மாட்டம் அதி கரித்தபடியே இருந் தது. மின்சாரம் துண்டிக்கப்பட்டே இருந் தது. பகல் 12.30 மணி யளவில் 50-க்கும் மேற் பட்ட அ.தி.மு.க.வினர் கற்களோடும் கட்டை களோடும் வந்து, நக்கீரன் அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தினர். போலீசார் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க, கண்ணாடிகள் உடைந்து சிதறின. நக்கீரன் அலுவல கம் மீது மட்டுமின்றி, அருகிலும் எதிரிலும் இருந்த வீடுகள் மீதும் கற்களை வீசிய அந்தக் கும்பல், பொதுமக்களைப் பார்த்து ஆபாசமாகத் திட்டி, உள்ளே போ என விரட்டியது. அரை மணிநேரத்திற்கும் மேலா கத் தாக்குதல் தொடர்ந்த போதும், சொற்ப அளவிலேயே இருந்த போலீசார் அமைதியாகவே இருந்தனர்.

ஜாம்பஜார் காவல் நிலை யத்திலும், காவல்துறை உயரதிகாரிகளிடமும் நக்கீரன் கொடுத்த புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல், மேலிட உத்தரவுப்படி நக்கீரன் ஆசிரியர் மீதும் ஊழியர்கள் மீதும் எஃப்.ஐ.ஆர். போட்டது காவல் துறை. தொடரும் வன்முறைகள் குறித்து ஆளுநர் ரோசய்யாவிடம் விரிவான புகார் மனுவை அளித் துள்ளது நக்கீரன்.
க்கீரனை முடக்கிவிட வேண்டும் என்ற முழு முனைப் போடு அரசு இயந்திரமும் ஆளுங் கட்சியும் செயல்பட்டுக் கொண்டி ருக்கும் நிலையிலும், நக்கீரன் குடும்பத்தினர் மனந்தளராமல் இந்தத் தாக்குதல்களை எதிர்கொண்டு, சட்ட ரீதியான போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். நமது வாசகர்கள், நலன் விரும்பிகள், பத்திரிகை அமைப்புகள், அரசியல் பிரமுகர்கள், சமுதாய அமைப்பினர், மனித நேயர்களின் துணையுடனும் நீதி மீதான நம்பிக்கையுடனும் அரச பயங்கர வாதத்தை எதிர்கொள்வோம் என்ற மனத் துணிவுடன் பயணிக்கிறோம்.

படங்கள் : எஸ்.பி.சுந்தர், ஸ்டாலின் & அசோக்
தமிழகத்தின் கண்டனக் குரல்!

நக்கீரன் அலுவலகம் அ.தி.மு.க.வினரால் கடுமையாகத் தாக்கப்பட்டதை, ஒட்டுமொத்த தமிழகமே சேனல்கள் மூலம் பார்த்து திகிலில் உறைந்தது. அரசியல் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும், மனித உரிமை அமைப்பினரும், இந்த செயலைக் கடுமையாகக் கண்டித்தபடியே இருக் கிறார்கள். இந்த நிலையில் உளுந் தூர்பேட்டை பத்திரிகையாளர்கள், நக்கீரன் மீதான தாக்குதலைக் கண்டித்து கண்டனப் போஸ்டர்களை பேருந்து களிலும் நகர்ப்புறச் சுவர்களிலும் ஒட்டியபடி இருக்கிறார்கள். அந்த போஸ்டரில் "சென்னையில் உள்ள நக்கீரன் அலுவலகம் தாக்கப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கிறோம். காவல்துறையே, நக்கீரன் அலுவலகத்தை அடித்து நொறுக்கிய குண்டர்களை கைது செய்!' என குறிப்பிட்டுள்ளனர். இதேபோல் தமிழகம் முழுக்க இருக்கும் பத்திரிகையாளர்கள் அமைப்புகளும், சமூகநல அமைப்புகளும் கண்டனப் போஸ்டர்களை ஒட்டியபடியே இருக்கின்றன.
தாக்குதலைக் கண்ட பத்திரிகையாளர்கள்!

தாக்குதல்கள் பற்றி செய்தி சேகரிக்க வந்த பத்திரிகை யாளர்கள் நமது அலுவலகத்தில் இருந்தனர். திடீரென மீண்டும் தொடர் தாக்குதலில் சிக்கிக்கொண்ட பத்திரிகை சகோதரர்கள் தினகரனைச் சேர்ந்த மோகன், வெங்கடேசன், கிஷோர்ராஜ், குமுதம் -முருகேசன், கணேஷ், சத்யம் டி.வி, மணிகண்டன், டேவிட், மாலைமுரசு இதயதுல்லா, ராஜதுரை, கலைஞர் டி.வி. ஆனந்த், சாக்ஷி டி.வி. சீனிவாசன், சன் டி.வி. செல்வராஜ், தமிழ்ச்சுடர் சீனு, தினத்தந்தி மணி, தினமலர் ராஜேஷ், தினமணி ராஜா மற்றும் ஏஷியாநெட், டைம்ஸ் நவ் தொலைக்காட்சி நிருபர்கள் உட்பட இருபதுக்கும் மேற்பட்டவர்கள் பரிதவித்துப் போனார்கள்.

கண்டனம்!

நக்கீரன் மீதான தாக்குதலைக் கண்டித்து முதல் குரல் கொடுத்தவர் தி.மு.க. தலைவர் கலைஞர். அவர் தனது கண்டன அறிக்கையில், ""நக்கீரன் பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரைக்காக அந்த அலுவலகத்தில் நடைபெற்றுள்ள தாக்குதல் எத்தகைய வாதங்களை அல்லது நியாயங்களை எடுத்து வைத்தாலும் பாதிக்கப்பட்டோர் சட்டப்படி நீதிமன்றங்களில் தங்களுக்குள்ள நியாயங்களை நிலைநிறுத்த முயற்சிக்க வேண்டுமேயல்லாமல் பத்திரிகையாளர்களையோ அல்லது பத்திரிகை அலுவலகத்தையோ தாக்குவது என்பது ஜனநாயக நாட்டில் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல'' என கண்டித் துள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தனது கண்டனத்தில், ""நக்கீரன் அலுவலகம் மீது அணிஅணியாகச் சென்று தாக்குதல் நடத்தியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்கின்ற வாய்ப்பு இருக்கும்போது, அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்துவது என்பது ஜனநாயகப் படுகொலையாகும்'' என அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளார்.

பத்திரிகையாளர் அமைப்பினர், மனித உரிமை அமைப்பினர், அரசியல் பிரமுகர்கள் எனப் பலரும் அறிக்கை வாயிலாகவும் போன் மூலமாகவும் நமக்கு ஆறுதலையும் தாக்குதலுக்கான கண்டனத்தையும் பதிவு செய்து வருகின்றனர்.
நமது அலுவலகத்தின் மீது அ.தி.மு.க.வினரின் தாக்குதல் நீடித்துக்கொண்டிருந்த 7.1.12 சனிக்கிழமை நண்பகலில், நமது அலுவலகத்திற்கான மின் இணைப்பையும் குடிநீர் இணைப்பையும் துண்டிக்க வேண்டுமென்று, மெட்ரோவாட்டர் அதிகாரிகளுக்கும் மின்வாரிய அதிகாரிகளுக்கும் அ.தி.மு.க.வினர் நெருக்கடி கொடுக்கத் தொடங்கினர்.

நக்கீரன் அலுவலக வாசலிலேயே நக்கீரனுக்கான டிரான்ஸ் பார்மர் இருப்பதால் மின் இணைப்பை துண்டிப்பதற்கு மேலிடத்து கடித உத்தரவு வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள் இந்தப் பகுதி மின்ஊழியர்கள். இதனால் வேறு பகுதியிலிருந்த ஊழியர்களை அழைத்துவந்து, நமது அலுவல கத்திலிருந்து 10 பில்டிங்குகளுக்கு அப்பால் எலக்ட்ரிக் கேபிளை கட் செய்துவிட்டார்கள். இதனால் மாலை 5 மணிக்கு ஜானி ஜான்கான் தெரு ஏரியாவில் நக்கீரனுக்கு மட்டுமின்றி, அத்தனை வீடுகளுக்கும், கடைகளுக்கும், நிறுவனங்களுக்குமான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது.

ஏரியா மக்கள் சாலை மறியல் செய்யத் தொடங்கியதும் அதிகாரிகள் வந்து, ""இந்த ஒரு இரவு மட்டும் எப்படியாவது பொறுத்துக்கொள்ளுங்கள், காலை 6 மணிக்கெல்லாம் கனெக்ஷன் கொடுத்துவிடுகிறோம்'' உறுதிமொழி கொடுத்தார்கள்.

மறுநுôள் காலை 10 மணி வரை எதிர்பார்த்து ஏமாந்த ஏரியா மக்கள் 10.30-க்கு மீர்சாகிப் பேட்டை மார்க்கெட் சந்திப்பில் சாலை மறியல் செய்தார்கள். பேச்சுவார்த்தைக்கு வந்த அதிகாரிகள் "உங்களுக்கெல்லாம் கனெக்ஷன் கொடுத்தால், நக்கீரனுக்கும் மின்சாரம் போகுமே... அங்கே வேலையெல்லாம் நடக்குமே...'' என்று இழுக்க... ஏரியா மக்களோ, "மின்சாரம் வேண்டும்' என்று போராடத் தொடங்கினார்கள்.

அடுத்த அரைமணி நேரத்தில் அத்தனை வீடுகளிலும் மின்விளக்குகள் பளிச்சிட்டன. ஃபேன்கள் சுழன்றது, மிக்ஸிகள் அரைத்தன. பொதுமக்கள் போராட்டத்தால் நக்கீரனிலும் விளக்குகள் எரிந்தன.

சிறிது நேரத்தில் அறிமுகமில்லாத ஏழெட்டு பேர் வந்து, நமது அலுவலக வாசலில் உள்ள டிரான்ஸ்பார்மரில் ப்யூஸ் கேரியர்களை பிடுங்க முயன்றார்கள். நக்கீரன் புகைப்படக் கலைஞர் ஒருவர் கேமராவுடன் அங்கு வரவும் பியூஸ் பிடுங்க வந்தவர்கள் திரும்பிப் பார்காமல் கிளம்பினார்கள்.

ஞாயிற்றுக்கிழமை மதியம் சரியாக 12.15 மணி. லோக்கல் அ.தி.மு.க. பிரமுகர் ஒருவரின் தலைமையில் சுமார் 50-க்கும் அதிகமான கும்பல் ஒன்று தடிகளோடும் கற்களோடும் அராஜக கோஷங்களோடும் வந்தது. நக்கீரன் வாசலில் நின்று, எதிர்பாராத தாக்குதலை தொடங்கினார்கள்.
பாதுகாப்புக்கு நின்ற போலீசாரால் அவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. சுமார் அரை மணி நேரம் நீடித்தது வன்முறைத் தாக்குதல். அத்தனைக் கதவுகளும் சாத்தப்பட்டு, நக்கீரன் ஊழியர்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு உள்ளே இருந்த அந்த நேரத்தில் மின் ஊழியர்கள் நிதானமாக வந்து, நக்கீரன் வாசலில் உள்ள டிரான்ஸ்பார்மரில் இருந்து பீஸ்கேரியர்களை பிடுங்கிக்கொண்டு போனார்கள்.
அடுத்த நிமிடமே தாக்குதலை நிறுத்திய அ.தி.மு.க.வினரில் ஒரு குரல்... ""டேய்... கரண்ட்டை கட் பண்ண நாங்க 50 பேர் வரவேண்டியதாப் போச்சு. வாட்டர் கனெக்ஷனைக் கட் பண்றதை நீங்க தடுத்தால் மறுபடியும் வருவோம்... ஆயிரம் பேரை அனுப்பி வைப்பம்டா'' எச்சரித்தது.

வந்த மெட்ரோ ஏ.இ. குலோத் துங்கன், ""உங்க வாட்டர்ல பொல்லூஷன் பிராப்ளம்னு புகார் வந்தது. செக் பண்ணினோம். உண்மைதான். அதனால் வாட்டர் கனெக்ஷனை கட்பண்ண வந்திருக்கிறோம்'' என்றார்.
புகாரையும் அந்த பொல்யூஷன் சான்றிதழையும் காட்டிவிட்டு உங்கள் வேலையைத் தாராளமாகச் செய்யுங்கள் என்றோம். கொண்டு வருகிறோம் என்று போனவர்கள் ஞாயிறு இரவு 9 மணி வரை வரவில்லை.

இந்த குடிநீர் இணைப்பை "கட்' செய்யத்தான் ஆயிரம் பேரோடு தாக்குவதற்கு வருவோம் என்று எச்சரித்தார்களோ.
பந்தோபஸ்துக்கு வந்திருந்த காவல்துறையினர் முன்னிலையிலேயே 7-ந் தேதி நக்கீரன் அலுவலகத்தின் மீது தொடர் தாக்குதலை அ.தி.மு.க. வினர் நடத்தியபடியே இருந்ததால்.. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் யூசுப் இக்பால் அவர்களின் கவனத்திற்கு இதைக்கொண்டு செல்ல முடிவெடுத்தோம். நமது சீனியர் வழக்கறிஞர் பெருமாள், வழக்கறிஞர் கள் எட்விக், சிவகுமார், வர்கீஸ் அமல ராஜா ஆகியோர் மதியம் 2 மணிக்கு தலைமை நீதியரசரின் கிரீன்வேஸ் சாலை இல்லத்துக்கு, நீதிப் பேராணை மனுவோடும் தாக்குதல் தொடர்ந்து கொண்டிருப்பதற்கான புகைப்பட ஆதாரங்களோடும் சென்றனர்.

தலைமை நீதியரசர், காலை ஒரு விழாவில் கலந்துகொண்டு அப்போது தான் இல்லம் திரும்பியிருந்ததால் அவரது பி.ஏ. மாலை 4 மணிக்கு மேல் வருமாறு தெரிவித்தார். இதன்படி மாலை 4 மணிக்கு நக்கீரனின் வழக்கறி ஞர் குழு சென்றது. நமது நீதிப் பேராணை மனுவும் ஆதாரப் புகைப் படங்களும் தலைமை நீதிபதியின் கவ னத்திற்கு அவரது பர்சனல் பி.ஏ.மூலம் எடுத்துச் செல்லப்பட்டது. இதனடிப் படையில் அட்வகேட் ஜெனரல் நவநீத கிருஷ்ணன் அலுவலகத்தைத் தொடர்புகொண்டார் தலைமை நீதிபதியின் பி.ஏ. இதைத் தொடர்ந்து அட்வகேட் ஜெனரல் அலுவலகத்தில் இருந்து அவர் சார்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர், தலை மை நீதியரசரின் இல்லத் திற்கு வந்தார். அவரிடம் நமது நீதிப் பேராணை மனுவின் நகலும் புகைப் பட ஆதாரங்களும் தரப் பட்டன.

மாலை 6 மணிக்கு தலைமை நீதிபதியின் தனிச்செயலர், அட்வகேட் ஜெனரலைத் தொடர்பு கொண்டு ""‘நக்கீரன் அலு வலகம் தாக்கப்படுவது தொடர்பான மனுவை தலைமை நீதி யரசர் உங்களுக்கு சர்வ் செய்யச் சொல்லி யிருக்கிறார். நக்கீரன் பிரச் சினையை கவனத்தில் எடுத்துக்கொள் ளுங்கள்'' என்று நம் வழக்கறிஞர்கள் முன்னிலையில் அட்வகேட் ஜெனர லிடம் பேசினார். நமது வழக்கறிஞர் களை அட்வகேட் ஜெனரலை சந்தித்து உறுதி செய்யுமாறும் பணித்தார். இதன்படி இரவு 7.30-க்கு அட்வகேட் ஜெனரல் நவநீத கிருஷ்ணனை அவரது அலுவலகத்தில் நமது வழக்கறிஞர் குழு சந்தித்தது. நமது மனுவையும் ஆதாரப் புகைப் படங்களையும் அட்வகேட் ஜெனரல் கையொப்பம் இட்டு பெற்றுக்கொண்டார்.
நக்கீரன் அலுவலகம் மீதான தொடர் தாக்குதல்களை ஒருவழியாக தலைமை நீதியரசரின் மூலமே சட்டரீதியாக அரசின் கவனத்திற்கு எடுத்துச்சென்றிருக்கிறது நக்கீரன்.
thanks nakkeeran+raj trichy

கருத்துகள் இல்லை: