திங்கள், 9 ஜனவரி, 2012

கரிகாலன் படத்துக்கு தடைகோரி வழக்கு: விக்ரமுக்கு நோட்டீசு


 ஜி.எஸ்.ஆர். விண்மீன் கிரியேன்ஸ் பட நிறுவன உரிமையாளர் ராஜசேகர் சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:- நான் காதல் கல்யாணம் படத்துக்கு இசை அமைத்துள்ளேன். இசை ஆல்பங்களும் வெளியிட்டு உன்ளேன். கரிகால சோழ மன்னன் மீது எனக்கு பற்று உண்டு. அவரது வரலாற்றை படமாக எடுக்க விரும்பி கரிகலான் என்ற பெயரை பிலிம்சேம்பரில் 1994-ம் ஆண்டில் பதிவு செய்தேன். இதன் கதையை கே.டி.குஞ்சுமோன், ரஜினி உதவியாளர் சத்தியநாராயணா, லட்சுமி மூவி மேக்கர்ஸ், ராமு வசந்தன் போன்றவர்களிடம் சொன்னேன். பிறகு பட நிறுவனம் தொடங்கி நானே அப்படத்தை தயாரத்தேன். நிதி நிலைமை சரியில் லாததால் படத்தை நிறுத்தி விட்டேன். கரிகாலன் பெயரை புதுப்பிக்க முயன்றேன். அனுமதி கிடைக்கவில்லை. தற்போது சில்வர் லைன் பிலிம் பாக்டரி பட நிறுவனம் நடிகர் விக்ரமை வைத்து கரிகாலன் என்ற பெயரில் படம் எடுப்பதை அறிந்தேன்.என் கதையை திருடிபடமாக எடுப்பதாக அஞ்சுகிறேன். எனவே அந்த படத்துக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இந்த வழக்கை 15-வது சிட்டி சிவில் கோர்ட்டு நீதிபதி விஜயகாந்த் விசாரித்து வருகிற 12-ந்தேதிக்குள் பதில் அளிக்க நடிகர் விக்ரம், படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை: