ஞாயிறு, 8 ஜனவரி, 2012

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு-7 பெண்கள் அடித்துச் செல்லப்பட்டனர்!

பள்ளிப்பாளையம்: நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் காவிரி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி 7 பெண்கள் அடித்துச் செல்லப்பட்டனர். அதில் ஒரு சிறுமியின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ஒடப்பள்ளியில் காவிரி ஆற்றின் குறுக்கே மின் திட்ட கதவணை உள்ளது. இங்கு இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
திடீரென ஏற்பட்ட இந்த வெள்ளப் பெருக்கால், பள்ளிப்பாளையம் காவிரி ஆற்றில் குளித்துக் கொண்ட 7 பெண்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பும், பதட்டமும் நிலவுகிறது.
தீயணைப்புப் படையினர் மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். தற்போது ஒரு சிறுமியின் உடல் மீட்கப்பட்டுள்ளது. மற்றவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை.

கருத்துகள் இல்லை: