அபுஜா: நைஜீரியாவில் நடந்த பயங்கர தீவிரவாதத் தாக்குதலில் ஒரு இந்தியர் உள்பட 160 பேர் கொல்லப்பட்டனர். 6 இந்தியர்கள் படுகாயமடந்தனர்.
நைஜீரியாவின் 2வது பெரிய நகரான கானோ என்ற நகரில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அடுத்தடுத்து தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்புகளும், துப்பாக்கிச் சூடுகளும் அந்த நகரையே சுடுகாடாக்கி விட்டது. இதுவரை 160 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மிகவும் திட்டமிட்டு இந்த தாக்குதல்களை தீவிரவாதிகள் நடத்தியுள்ளனர். அல் கொய்தா அமைப்புடன் இணைந்து ஒரு இஸ்லாமிய அமைப்பு இந்த தாக்குதல்களை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடந்த கானோ நகரம் கிறிஸ்தவர்கள் அதிகம் நிறைந்த நகராகும் என்பது குறிப்பிடத்தக்கது.
தாக்குதல் குறித்து இந்திய தூதரகம் தெரிவிக்கையில், வன்முறையில் குஜராத்தைச் சேர்ந்த 23 வயது கேவல்குமார் காளிதாஸ் ராஜ்புத் உயிரிழந்துள்ளார். இவர் அங்குள்ள ரெல்கெம் என்ற நிறுவனத்தில் கடந்த ஒரு வருடமாக பணிபுரிந்து வந்தார்.
அவருடன் பணியாற்றி வந்த நேபாளத்தைச் சேர்ந்த ஹரி பிரசாத் பூசால், ராஜ்சிங் ஆகியோரும் பலியாகி விட்டனர்.
இரண்டு குழந்தைகள் உள்ளிட்ட 6 இந்தியர்கள் படுகாயமடைந்துள்ளனர். இவர்கள் இரு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக