வெள்ளி, 27 ஜனவரி, 2012

அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் பதவி பறிப்பு பின்னணி மிரட்டல் பாணி

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த எலத்தூர் கிராமத்தைச்சேர்ந்தவர் அக்ரிகிருஷ்ணமூர்த்தி.   தீவிர அதிமுககாரனான இவர்,  சென்ற ஜெயலலிதா ஆட்சியின் போது கலசபாக்கம் ஒன்றியக்குழு பெருந்தலைவராக இருந்தார்.
அப்போதைய அமைச்சர் ராமச்சந்திரனை அவருடைய கலசபாக்கம் தொகுதிக்குள்ளேயே விடாமல்,  அடித்து விரட்டியவர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி.   மிரட்டல் பாணி அரசியல் செய்து வந்த இவரை கடந்த 2006 சட்டமன்ற தேர்தலில் கலசபாக்கம் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்த ஒரே அதிமுக எம்.எல்.ஏ என்பதால்,  கட்சியில் அடுத்தடுத்து பதவிகள் தேடி வந்தன.
தெற்கு மாவட்ட செயலாளராக பதவிக்கு வந்த இவர்,  அப்போதைய திமுக அமைச்சர் வேலுவுடன் நெருக்கமாகிவிட்டார் என கட்சி தலைமை வரை தகவல் போனது.  ஆனால் இவர் மீது கட்சி தலைமை எந்த நடவடிக்கையும்  எடுக்கவில்லை.
2011 சட்டமன்ற தேர்தலின் போது  மீண்டும் கலசபாக்கம் தொகுதியில் இவருக்கு சீட் வழங்கப்பட்டது.  வெற்றி பெற்ற இவருக்கு அமைச்சர் பதவியும் தேடி வந்தது.  முதலில் உணவுத்துறை அமைச்சராக இருந்தவர்,  மூன்றாவது முறை அமைச்சரவை மாற்றத்தின் போது வணிகவரித்துறை அமைச்சராக்கப்பட்டார்.
அதே வேகத்தில் இரண்டு மாதங்களுக்கு முன், வடக்கு மாவட்ட செயலாளர் முக்கூர் சுப்பிரமணி எம்.எல்.ஏவிடம் இருந்த மாவட்ட செயலாளர் பதவியை பறித்து, அக்ரியிடம் தரப்பட்டது.
ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளராக வலம் வந்த இவருக்கு இரண்டாவது நாளே இறங்கு முகம் தொடங்கியது. 
ஒருங்கிணைந்த மாவட்டம் என்பது மீண்டும் பிரிக்கப்பட்டு வடக்கு மாவட்டத்திற்கு மோகன் என்பர் மாவட்ட செயலாளர் ஆக்கப்பட்டார்.

அதற்கு அடுத்த இரண்டு வாரங்களில் அக்ரியிடம் இருந்த தெற்கு மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டு, பாலசந்தர் என்பவரிடம் தரப்பட்டது.
இதற்கடுத்து சில வாரங்களில் ஜெயலலிதா - சசிகலா பிரிவு நடந்தது.ப்போது சசிகலா மூலம் பதவி பெற்றவர்கள் யார் யார் என்ற பட்டியல் எடுக்கப்பட்டபோது,  முதல் ஐந்து இடத்தில் அக்ரி இருந்தார்.  இவரை அழைத்து விசாரித்து அனுப்பி வைத்தார்கள் கட்சியின் மேலிடத்தார்கள்.
இதற்கிடையே அக்ரி கிருஷ்ணமூத்தி மீது கட்சியினர் தலைமைக்கு தொடர்ந்து புகார் அனுப்பி வந்தனர்.  அப்புகாரில் தனது சாதிக்காரர்களுக்கு மட்டுமே, அதிக முக்கியத்துவம் தந்து வந்ததாகவும், கட்சியினரிடமே பணம் வாங்கி குவிப்பதாகவும், உள்ளாட்சி தேர்தலின் போது பணம் வாங்கிக்கொண்டு சீட் தந்தார் என்றும், புகார்கள் போயஸ் கார்டனுக்கு சென்றன

அதோடு ராவணனின் நெருங்கிய நண்பராக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு ( இவர் ராவணின் கல்லூரித்தோழர் என்பது குறிப்பிடத்தக்கது.) கட்சியினரை மிரட்டிய தகவலையும் தலைமைக்கு கொண்டு சென்றனர்.  இதனை விசாரித்து உண்மை என அறிந்துகொண்ட ஜெயலலிதா,  எச்சரிக்கை செய்யும் விதமாக 6 வது முறை மந்திரி சபை மாற்றத்தின் போது வணிகவரித்துறையில் இருந்து பள்ளிகல்வித்துறைக்கு மாற்றம் செய்தார்.
அதில் முன்பு இருந்ததை விட அதிகமாக புகார் வந்ததால், தொடர்ந்து ராவணனுடன் தொடர்பில் இருந்ததால்,   7 முறை மந்திரி சபை மாற்றத்தின் போது (26.1.2012) பதவியை பறித்துவிட்டார் ஜெயலலிதா.
தனது காப்பாற்றிக்கொளவதற்காக அக்ரி கிருஷ்ணமூர்த்தி இது வரை மூன்று முறை சிறப்புயாகம் நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் அக்ரிகிருஷ்ணமூர்த்தி மீது கொலை குற்றம் ஒன்று சுமத்தப்பட்டு, கட்சியினர் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: