திங்கள், 4 ஏப்ரல், 2011

மாகாண சபைக்கு பொலிஸ் அதிகாரமா? எந்தவொரு அமைச்சரும் வடக்கே செல்ல முடியாது? – ஜனாதிபதி

 by teavadai
மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட்டால் எந்தவொரு அமைச்சரும் வடக்கே செல்ல முடியாது போகலாம் என்று ஜனாதி பதி மகிந்த ராஜபக்இ தெரிவித்துள்ளார். குறிப்பாக மத்திய அரசாங்கத்தின் அமைச்சர்கள் வடக்கே செல்லும் போது பலாலி விமானத்தளத்தை விட்டே வெளியேற முடியாத நிலையேற்படலாம் என்றும் ஜனாதி பதி மகிந்த ராஜபக்இ மேலும் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 07ம் திகதி நடைபெறவுள்ள அரசாங்கத்துடனான கலந்துரையாடலின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மாகாண சபைகளுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களுடன் வனப்பாதுகாப்புக்கான அதிகாரத்தையும் கோரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதற்கு முன்பே அவற்றை வழங்க முடி யாது என்று ஜனாதிபதி மறுப்புத் தெரிவித் துள்ளார். பாதுகாப்புப்படை அதிகாரிகளும் பிரஸ்தாப அதிகாரங்களை மாகாண சபை களுக்கு வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவிப்ப தாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்தியாவின் காஷ்மீர் மாநிலத் துக்கு அண்மையில் சுற்றுப்பயணம் மேற் கொள்ள முயன்ற பாரதீய ஜனதாக்கட்சி முக் கியஸ்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டதை உதா ரணமாகக் காட்டி பலாலி விமானத்தளத்தில் மத்திய அரசாங்க அமைச்சர்களுக்கும் அந்த நிலைவரலாம் என்று பாதுகாப்புத்துறை உயரதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
அத்துடன் மாகாண சபைகளுக்கு வனப் பாதுகாப்புக்கான அதிகாரம் வழங்கப்படும் போது முல்லைத்தீவு வனாந்திரத்தில் பாது காப்புத்தரப்பினருக்கு உட்பிரவேசிக்கவே முடியாத நிலையும் ஏற்படலாம் என்றும் அவர் கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அவர்களின் கருத்தைக் கவனத்திற் கொண்டே ஜனாதிபதி பிரஸ்தாப மறுப்பை வெளியிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: