கடந்த கோடைகாலத்தில் எம்.வி சன் சீ கப்பலில் கனடாவுக்கு வந்த தமிழர் ஒருவர் யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த டசின் கணக்கான இலங்கை இராணுவ வீரர்களை சுட்டுக்கொன்றதில் ஏதாவது பங்கு வகித்தாரா என வன்கூவர் குடிவரவு ம்றும் அகதிகள் சபை ஆராய்ந்து வருகிறது. துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டதில் தனக்கு பங்கு எதுவும் இல்லை என இவர் மறுத்துள்ளபோதிலும், இவர் தனக்கு கீழ் பணி புரிந்தவர்களை இவ்வாறு செய்யக் கட்டளையிட்டாரா என்னும் முக்கிய கேள்வியெழுந்துள்ளது. இந்த குடியேற்றவாசியின்; சட்டத்தரணி, இவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் அங்கத்தவராக இருந்தார் என்பதை ஒப்புக்கொண்டுள்ளார். சன் சீ கப்பலில் வந்தவர்களுள் யுத்தக் குற்றம் இழைத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இரண்டு பேரில் இவரும் ஒருவர். இந்த குற்றச்சாட்டு உண்மையென காணப்பட்டால் இவர் நாடு கடத்தப்படுவார். குறித்த ஒரு சண்டையின் பின் ஏ.கே 47 துப்பாக்கி வைத்திருக்கின்ற புலிகளை முன்னே வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டது. இவரது சட்டத்தரணியான பியோனோ பெக் இவரிடம் சில கேள்விகளைக் கேட்டபோது, தான் அழைப்பு விடுத்தாரே தவிர, அதை வீடொன்றில் வைக்கப்பட்டிருந்த காயப்பட்ட இலங்கை இராணுவத்தினரை கொல்வதற்கான கட்டளையாக கருதவில்லையென கூறினார்.(DM)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக