செவ்வாய், 19 ஏப்ரல், 2011

Jaya to Kodainadu again சசிகலாவுடன் மீண்டும் கொடநாடு கிளம்புகிறார் ஜெயலலிதா

சென்னை: தனது தோழி சசிகலாவுடன் ஓய்வெடுக்க இன்று கொடநாடு செல்கிறார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.


கடந்த 5 ஆண்டுகளில் பெரும்பாலான நாட்களை ஊட்டியில் உள்ள தனது கொடநாடு எஸ்டேட்டில் கழித்தவர் ஜெயலலிதா. தேர்தல் நெருங்கும் சமயத்தில் சென்னை வந்தார். கூட்டணி, பிரச்சாரம் என மிகத் தீவிரமாக இருந்தார்.

தேர்தல் முடிந்த நிலையில், மீண்டும் ஓய்வெடுக்க ஊட்டிக்குச் செல்கிறார் ஜெயலலிதா. அவருடன் அவருடைய தோழி சசிகலாவும் செல்கிறார்.

இன்று பிற்பகல் 12.45 மணிக்கு சென்னையிலிருந்து விமானத்தில் கோவை செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் கொடநாடு செல்கிறார். கொடநாடு எஸ்டேட்டில் அடுத்த மாதம் முதல் வாரம் வரை தங்கியிருப்பார். தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் நேரத்தில் சென்னை திரும்புவார் என்று தெரிகிறது.

கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு 'நோ அப்பாயின்ட்மெண்ட்'!

இதற்கிடையே, நடந்து முடிந்த தேர்தல் மற்றும் தேர்தலுக்குப் பிந்தைய நிலவரம், ஆட்சியில் பங்கெடுப்பது போன்ற பல கேள்விகளோடு ஜெயலலிதாவைச் சந்திக்க காத்திருந்தனர் அதிமுக கூட்டணி கட்சித் தலைவர்கள். அப்பாயின்ட்மெண்டும் கேட்டிருந்தனர். ஆனால் அவர்களுக்கு அனுமதி தராத ஜெயலலிதா, கொடநாடு புறப்படுவதாக நேற்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
English summary
After the hectic poll schedule and terrific campaign trips to various parts of Tamil Nadu, ADMK general secretary Jayalalitha planned to visit her favorite hill station estate Kodanad with her companion Sasikala.

கருத்துகள் இல்லை: